இருளின் ஒளி | Irulin oli | Chapter 1

 Chapter 1




பொழுது சாயும் நேரம் வெளிச்சம் கொஞ்சமாக குறைந்து இருள் சூழ தொடங்கியது. இரண்டு வழி சாலை அது மக்கள் கூட்டம் அலை மோதியது. அவ்வளவு டிராபிக். எங்கும் திரும்பினாலும் சாப்பாடு கடை. சைனீஸ், அமெரிக்கன், பர்மீஸ் என தொடங்கி பாட்டி வைத்த மீன் கொழம்பு வரை கடை இருந்தது. 


எவ்வளவு பெரிய பெரிய கடை இருந்தாலும் பானிபூரிக்கு என தனி பட்டாளம் உண்டு. அதே போல் ரோடு பக்கம் ஒரு பானிபூரி கடை; அமர்ந்து சாப்பிட இடம் விட்டு இருந்தனர். அங்கு மூவர் ஆளுக்கு ஒரு பானிபூரி, காளான் என விழுங்கிக்கொண்டு இருந்தனர்.


தீப்தி – டேய் அபிஷேக், யுவன் எதுக்கு டா ஃபோன் பண்ணான்?? 


அபிஷேக் – அதை ஃபோன் பண்ணவன் கிட்ட கேக்கணும் டி. 


அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்த ஷிவா…


ஷிவா – எங்களுக்கும் தெரியாது தீப்தி. அவன் எதுவுமே சொல்லல. அவன் வந்தாதான் எங்களுக்கும் தெரியும்.


தீப்தி வேணும் என்றே அபிஷேக் பானிபூரி இரண்டை எடுத்து அவள் தட்டில் வைத்துக்கொண்டு


தீப்தி – தெரியலன்னா தெரியலனு ஷிவா மாதிரி பொறுமையா சொல்லனும் அதை விட்டுட்டு….


அவள் எடுத்ததை முறைத்து பார்த்தவன்… மீண்டும் அவள் பிளேட்டில் இருந்து எடுக்க போக…


ஷிவா – டேய் சும்மா இரு டா. சாப்பிடும் போது என்ன விளையாட்டு இது. மூடிக்கிட்டு உன் பிளேட் ல உள்ளத மட்டும் சாப்பிடு. அங்க கைய்ய வெச்ச… என்று அரட்டினான்.


அபிஷேக் மைண்ட் வாய்ஸ் ‘ நல்லா நடத்துங்கடா டேய் ‘


அப்போது சரியா நவ்யா இவர்கள் இருக்கும் டேபிள் வந்தாள். அவசரமாக வந்து இருப்பாள் போல்.. வந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து வேகமாக குடித்தாள்.


தீப்தி – என்ன டி, இன்னைக்கும் பஸ் ல ரொம்ப கூட்டமா?? காலைல போனதுல பாதியா வந்திருக்க… என்றாள் வருத்தமாக.


நவ்யா – ஆமா டி. செம்ம கூட்டம். மூணு நாள் லீவ் சேர்ந்தது போல வருதுல.. நிறையா பேரு ஊருக்கு போவாங்க. அதான் இன்னைக்கு கூட்டம் ஜாஸ்தி.


அவள் வந்ததும் ஷிவா… அவள் சாப்பிட ஆர்டர் செய்துவிட்டான்.


அபிஷேக் – ஏன் நவி இவ்வளவு கஷ்டப்படனும். ஒரு ஸ்கூட்டி வாங்குனு எல்லாரும் ரொம்ப நாளா சொல்றோம். நீ தான் வாங்கவே மாட்டிக்க என்றான் சலிப்பாக.


அவன் சொல்வதை மெல்லிய புன்னகையுடன் கேட்டாள். அந்த புன்னகைக்கு பின்னால் வருத்தம் காணப்பட்டதோ??


ஷிவா – எங்களுக்கு புரியுது உன்னோட குடும்ப சூழ்நிலை. ஆனா நாங்க எல்லாரும் காசு தற்றோம்னு சொன்னோம். நீ அதையும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்ட. நம்ம என்ன அப்படியா பழகியிருக்கோம் என்றான் ஆதங்கமாக. அவன் சொல்வதை ஆமோதிப்பதாக தீப்தியும் அமைதியாக இருந்தாள்.


நவ்யா – என் மேல உள்ள அக்கரையில சொல்றீங்கனு புரியுது. ஆனால் நட்புக்கு இடையில காசு கொண்டு வர கூடாதுனு நான் ரொம்ப உறுதியாக இருக்கேன். என்ன இந்த விஷயத்துல கட்டாயபடுத்தாதிங்க பிளீஸ்.

தீப்தி – அதுக்கு இல்ல…நவி நாங்க எதுக்கு சொல்றோம்னா… என ஆரம்பித்தவளை முடிக்க விடாமல்


நவ்யா – என்ன உங்க ப்ரெண்ட்னு மத்தவங்க கிட்ட சொல்ல கஷ்டமா இருக்கா?? என்றாள் தயக்கமாக.


அவள் கேள்வியில் மூவரும் அவளை வெறியாக முறைத்தனர். இதில் அபி, ஷிவா பார்வை உக்கிரமாக இருந்தது. தீப்திக்கு இவளின் இந்த கேள்வி பழகி போன ஒன்று.


அபிஷேக் – என்ன டி பேசுற… நம்ம எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ். மத்தவங்க முன்னாடி உன்ன எங்க ப்ரெண்ட்னு சொல்ல நாங்க ஏன் கஷ்ட படனும். நீ லூசு மாதிரி கேக்குற நவி. 


ஷிவா – உன் மேல உள்ள அக்கறையில தான் கேட்கிறோம். இனிமேலும் கேட்போம். ஏன்னா நீ எங்க ப்ரெண்ட். நீ கஷ்டப் படுறத பாக்க முடியல. 


நவ்யா வேண்டும் என்றே தான் அப்படி கேட்டாள். அவர்களிடம் பணம் வாங்க கொஞ்சம் யோசித்தாலும் போதும்… உடனே கையில் பணத்தை வைத்துவிடுவர் என்று தெரியும். என்ன இருந்தாலும் நட்பில் ஊடே அவளுக்கு காசு பணம் கொண்டு வர விருப்பம் இல்லை. என்னோட கஷ்டம் என்னோடவே போகட்டும் என்று நினைத்துக்கொண்டாள்.


அனைவரும் உணவை பகிர்ந்து உண்டுக்கொண்டு இருந்த சமயம் யுவன் வந்தான். 


நண்பர்கள் அமர்ந்து இருந்த டேபிள் வட்ட வடிவில் இருந்தது. நவ்யா அருகில் மட்டுமே இப்போது ஒரு இடம் காலியாக இருந்தது. அவன் அங்கே வந்து அமராமல், பக்கத்து டேபிளில் உள்ள ஒரு சேர் எடுத்து தீப்தி பக்கம் அமர்ந்துகொண்டான்.


தீப்தி – எல்லாருக்கும் ஃபோன் பண்ணி வர சொல்லிட்டு… இவன் மட்டும் லேட் ஆ வர்றான் பாருங்க டா… என்றாள் குற்றமாக..


அபிஷேக் – ஏன் டா. அதான் நவ்யா பக்கத்துல இடம் இருக்குல்ல. அங்க உட்கார வேண்டியது தான? 


யுவன்… நவ்யாவை ஓரக்கண்ணால் பார்த்து..


யுடன் – மேடம் எப்பவும் நம்மல பிரிச்சு தான பார்ப்பாங்க. அவங்களை பொறுத்த வரைக்கும் அவங்க தனி நம்ம தனி தான. என்னடா புதுசா கேக்குற? என்றான் சாதாரணமாக.


நவ்யா மனதில் சுருக்கென்று வலித்தாலும் அமைதியாகவே இருந்தாள்.


ஷிவா – டேய் யுவன் சும்மா இரு டா. அவளை எதுவும் சொல்லாம உனக்கு தூக்கமே வராதுல. மொதல்ல எதுக்கு வர சொன்ன அதை சொல்லு…


முதலில் எல்லோரும் ஆர்டர் செய்து வைத்ததில் இருந்தே எடுத்துக்கொண்டான். நவ்யா அவள் பிளேட்டில் உள்ளதை அவன் பக்கம் நகர்த்த வேணும் என்று அதை விட்டு மற்றவர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டான். இதனை நண்பர்கள் கவனித்தாலும் ஒன்று சொல்லவில்லை.


யுவன் – அதான் டா மூணு நாள் லீவ் வருதுல. எப்பவும் போல ஏதாச்சும் டிரிப் (Trip) பிளான் பண்ணுவோமானு கேக்க தான் ஃபோன் பண்ணேன். 


தீப்தி – ஆமா யுவன். ஹாஸ்டல் விட்டா ஆபீஸ்.. ஆபீஸ் விட்டா ஹாஸ்டல். ரொம்ப போர் அடிச்சு போச்சு. ஊருக்கு எங்கயாச்சும் போகலாம் டா என்றாள் ஆசையாக.


அபிஷேக் – எனக்கு ஓகே. எந்த இடம்னு முடிவு பண்ணிட்டு சொல்லுங்க.


ஷிவா – டேய் இன்னைக்கு வெள்ளிக்கிழமை. திங்கள் வரைக்கும் லீவ். எப்புடி டா ஒரே நாள்ல கிளம்ப முடியும்? 


யுவன் – அதை நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு ஊருக்கு போக ஓகே வா??


எல்லாரும் சரி என்று சொல்ல.. நவ்யா மட்டும் யோசனையில் இருந்தாள்.


யுவன் – அந்த அம்மாவுக்கு என்னவாம் இப்போ?? என்றான் நக்கலாக

அபிஷேக் – கிண்டல் பண்ணாத டா யுவன். (நவ்யா பக்கம் திரும்பி) என்ன டி நீ யோசிக்கிற? வா ஜாலியா இருக்கும். போய்ட்டு ரெண்டு நாள் ல வந்துறலாம்.


ஷிவாவும் அதே சொல்ல… தீப்தி கெஞ்சல் பார்வை பார்க்க…நண்பர்களை மேலும் சங்கட படுத்தாமல் மனதே இல்லாமல் ‘ சரி ‘ என்று சொன்னாள். 


யுவன் – அவங்க வரலைன்னு சொன்னது தான் உங்க எல்லாருக்கும் சரின்னு கேட்டுறுக்கு என்றான் குத்தாலக..


தீப்தி – யுவன் ஏன் டா இப்படி. அவளே அதிசயமா வர்றேன்னு சொல்லிருக்கா…


ஷிவா – எங்க டா பிளான்? உனக்கு எதுவும் ஐடியா இருக்கா?? 


யுவன் – எப்பவும் போல கேம்பிங் (Camping) போலாமா?? 


தீப்தி – டேய் டேய், ஏன்டா ஒரே மாதிரி இடத்துக்கே போகனும். புதுசா எங்கயாச்சும் போகலாம் பிளீஸ் 


அபிஷேக் – என்னோட ரூம் மேட் (Room mate) ஒருத்தன் அவங்க ப்ரெண்ட்ஸ் கூட ஒரு பிளேஸ் ல தங்குனதா சொன்னான். அந்த இடம் ரொம்ப வருஷம் யாருமே பயம் படுத்தாமல் கிடப்புலயே போட்டுட்டாங்க போல. கொஞ்சம் மாசம் முன்னாடி தான் புதுப்பிச்சு இப்போ ரென்டுக்கு (Rent) விடுறாங்க.


யுவன் – இதுல என்னடா புதுசா இருக்கு???


அபிஷேக் – இந்த பங்களாக்கு ஊருல நிறையா கதை இருக்கு. முக்கியமா இந்த இடம் காட்டுக்கு உள்ள இருக்கு என்றான் ஆர்வமாக. அதுவும் இல்லாம அந்த வீட்ல பேய் நடமாட்டம் இருக்கிறதா சிலர் சொல்றாங்க.


அவன் சொல்லும் போதே அது என்ன இடம் என்று லேப்டாப்பில் ஷிவா பார்க்க ஆரம்பித்துவிட்டான். அந்த இடத்தைப் பற்றி சில youtube வீடியோ எல்லாம் இருந்தது. யாரும் விலை கொடுத்து வாங்க முன் வராததால், கெஸ்ட் ஹவுஸ் மாதிரி விட்டு, வருபவர்களுக்கு சில நாள் வாடகைக்கு விட்டு காசு பார்ப்பதாக அந்த காணொளியில் பேசி இருந்தனர். அந்த பங்களாவை புக் செய்ய தனி வெப்சைட் இருந்தது. 

ஷிவா அவன் பார்த்ததை மற்றவர்களிடம் சொல்ல, ஒரு நிமிடம் எல்லோரும் அமைதியாகி விட்டனர்.


அபிஷேக் – என்ன தீப்தி, போகலாம் போகலாம்னு குதிச்ச… என்ன போகலாமா??


அவளுக்கு பேய், அமானுஷ்யம் என்றால் பயம். எனவே அமைதியாக இருந்தாள். ஆண்கள் மூவரும் அங்கு போக சம்மதம் தெரிவித்தனர். மூவரின் பார்வை இரு பெண்கள் மீது இப்போது திரும்பியது. 


நவ்யா – தீப்திக்கு ஓகே-ன்னா எனக்கும் ஓகே. அவா வந்தா நானும் வர்றேன்


யுவன் – ஏன் டா அபிஷேக், நம்மல பார்த்தா மனுஷங்களா தெரியலையாவாம்??? 


அபிஷேக் – அதான…


ஷிவா – ரெண்டு பேரும் சும்மா இருங்க டா. எப்புடி டா ஒரு பொண்ணு, மூணு பையன் கூட வரும். சங்கட படும்ல. தீப்தி கூட இருந்தா ஒன்னும் தெரியாது அதான் அப்படி சொல்றா.


நவ்யா – நீ என்ன தீப்தி நினைக்கிற?? 


தீப்திக்கு நண்பர்களுடன் செல்ல ஆசை ஆனா ஹாண்டட் இடம் செல்ல கொஞ்சம் பயமாக இருந்தது. தான் வேண்டாம் சென்று சொன்னால் நவ்யா வர மாட்டாள், மற்றவர்கள் இவர்களை விட்டு செல்ல மாட்டார்கள் எனவே நண்பர்களுக்காக சரி என்றாள்.


அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த இடம் பற்றி மேலும் விவரம் பார்க்க அது இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து மூன்று மணி நேரம் என்று காட்டியது. அந்த வெப்சைட்டில் புக் செய்தனர். 


அதாவது மூன்று பகல் (சனி, ஞாயிறு, திங்கள்) , இரண்டு இரவு (சனி, ஞாயிறு) திங்கள் மதியம் கிளம்புவது என்று முடிவு செய்யப்பட்டது. 

 

வெள்ளிக்கிழமை இரவு ஆகிவிட்டது. வேலைக்கு போய்ட்டு வந்து அனைவரும் சோர்வாக இருந்தனர் எனவே சனிக்கிழமை விடியல் காலை யுவன் கார் எடுத்துட்டு வந்து அனைவரையும் பிக்கப் செய்வதாக சொன்னான்.


பின் சாபிட்டதுக்கு பணம் கொடுத்து விட்டு, ஐவரும் கடையை விட்டு வெளியே வந்தனர். அவரவர் வண்டி இருக்கும் இடத்துக்கு வந்து கிளம்ப ரெடி ஆகினர். 


தீப்தி – நவ்யா நான் உன்ன ட்ராப் பண்றேன். நீ மாட்டேன்னு சொல்லவே கூடாது சொல்லிட்டேன்.


இதற்கு இடையில் ஷிவா , அபிஷேக் கிளம்பிவிட்டனர். அவர்களுக்கு இங்கு இந்து தங்கி இருக்கும் இடம் கொஞ்சம் தூரம் எனவே தீப்தி… நவ்யாவை பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் கிளம்பினர். 


யுவன் பைக்கில் அமர்ந்த படி நவ்யாவையே தான் பார்த்துக்கொண்டு இருந்தான். என்ன நினைத்தானோ


யுவன் – தீப்தி நீ கிளம்பு, உன் ப்ரெண்ட்ட நான் ட்ராப் பண்றேன். அவளை ஹாஸ்டல்ல விட்டுட்டு நீ உன்னோட வீட்டுக்கு போக நேரம் ஆகும். நான் அந்த ஹாஸ்டல் தாண்டி தான் போவேன். 


நவ்யாவுக்கும் அதே எண்ணம் தான். அதான் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். ஆனால் சிடுமூஞ்சி யுவன் கூடவா செல்ல வேண்டும் என்று ஆயாசமாக இருந்தது.


தீப்தி – ஒன்னும் பிரச்சனை இல்லடா யுவன். நான் பார்த்துக்கிறேன்.


யுவன் – ஏன் உன் ஃபிரண்டுக்கு என் கூட வர பயமா இருக்காவாம்? சொல்ல சொன்னாங்கலா… என்றான் வேணும் என்றே


தீப்தி – அவளையே வம்பு இழுக்காத டா. அவா உன் கூட வரணும்னா நீ அவா கிட்ட தான கேக்கணும். நீயே கேளு என்று கோர்த்து விட்டாள்.


தீப்திக்கு நன்றாக தெரியும் யுவன் அவளிடம் நேரடியாக பேச மாட்டான் என்று. யுவன் ஒன்றும் பேசாமல் பைக் ஸ்டார்ட் செய்ய

நவ்யா – தீப்தி, நீ கிளம்பு. நான் பார்த்துக்கிறேன் என்றாள் மெல்லிய குரலில். 


இதனை இருவரும் எதிர்பார்க்கவில்லை. தீப்தி தடுக்கவில்லை. இனிமேல் ஆவது இருவரும் நல்ல நட்போடு இருந்தால் சந்தோசம் என்பதால் சரி என்றாள். அவள் வண்டியை எடுத்து கிளம்பிவிட… யுவன், நவ்யா நின்றுக்கொண்டு இருந்தனர். 


நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. நவ்யா.. யுவன் இருக்கும் பக்கம் நடந்து வந்தாள். யுவன் பைக் ஸ்டார்ட் செய்து ரெடி ஆக இருந்தான் அவள் வரவுக்கு. அவன் பக்கம் வந்து பைக்கில் ஏறாமல் அவனை கடந்து சென்று பின்னாடி நின்ற ஆட்டோவில் எறிக்கொண்டாள்.


யுவனுக்கு வந்ததே கோவம்… கூட்டம் இருக்கும் இடத்தில் அநாகரீகமாக நடந்துக்கொள்ள கூடாது என்பதற்காக அடக்கிக்கொண்டான். இவள் செல்லும் ஆட்டோவை தாண்டி கடக்கும் போது விருட்டென்று இடிப்பது போல் வந்து வளைத்து திருப்பிச் சென்றான்.


ஆட்டோ காரார் நன்றாக திட்டினார் அவனில் செயலுக்கு; ஆனால் அதை கேட்கத்தான் அவன் அங்கு இல்லயே. இந்நேரம் அந்த தெருவை கடந்து சென்று இருப்பான் அவ்வளவு வேகம். வண்டியின் வேகத்திலேயே தெரிந்தது அவன் கோவத்தின் அளவை.


>> Chapter 2


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top