அர்ஜுனும், சாராவும் யூகே கிளம்பும் நாளும் வந்தது. முதல் முறையாக வெளிநாட்டுப்பயணம் கொஞ்சம் உற்சாகமாக இருந்தாள். அர்ஜுன் கார் எடுத்துக்கொண்டு அவளை பிக்கப் செய்ய வந்திருக்க
"நான் ரெடி அர்ஜுன். அப்புறம்....உன்னோட அப்பா, கல்பனாலா வரலையா?"
"வர்ராங்க டி, அவங்க தனி கார்ல ஏர்போர்ட் போய்டுவாங்க. இது ஐயா வாங்குன கார் இதுல நம்ம போகலாம். அங்க போயிட்டு அவங்க கூட ஜாயின் பண்ணிக்கலாம்" பதில் சொன்னாலும் பார்வை ரோட்டை பார்த்தவாறே இருந்தது.
"ஹ்ம்ம்" என்று சொன்னவள் வெளியில் வேடிக்கை பார்க்க தலையை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்.
அப்போது அவள் எதிர்பார்க்காத நேரம் வண்ண பேப்பர் சுற்றிய கையடக்க பேட்டி மேல் சிவப்பு ரிப்பன் கட்டி அவள் முன்னே காட்டப்பட்டது. அது அவளுக்கான பரிசு என தெரிந்ததும் என்று இல்லாத ஆர்வம் கொண்டு அதனை சந்தோசமாக வாங்கி பிரித்துப் பார்த்தாள்.
பொதுவாக அவளுக்கு என்று ஆதியும் அர்ஜுனும் எந்த ஒரு பரிசு வாங்கிக்கொடுப்பதை அவள் விரும்பவே மாட்டாள். அதற்காகத்தான் அவள் அவர்களுடன் பழகுகிறாள் என்ற ஒரு பேச்சு வந்துவிடுமோ என்று. ஆனால் இன்றோ அர்ஜுன் அவளுக்காக கொடுத்த பரிசில் என்ன இருக்கிறது என ஆர்வமாக இருந்தது. அதனை அவசரமாக பிரித்தாள், இந்த செயல் அவள் இயல்பையும் மீறிய ஒன்று.
அவளின் நாளுக்கு நாள் மாற்றம் அர்ஜுன் கண்கூடாக பார்த்துக்கொண்டே தானே இருக்கிறான்.
"உள்ள என்ன இருக்கு அர்ஜுன்" என பேசிக்கொண்டே பிரிக்க
அதில் விலை உயர்ந்த இயர்பட்ஸ் (Earbuds) இருந்தது. அவளுக்கு இது போன்ற ஒன்று வாங்க வேண்டும் பல நாள் ஆசை, ஆனால் இன்றோ அர்ஜுன் அதனை நிறைவேற்றினான்.
"ஐ! இயர்பட்ஸ், சூப்பரா இருக்கு அர்ஜுன். இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என அந்த பரிசை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சொல்ல
அந்த செயலே அவளுக்கு அது எவ்வளவு பிடித்திருக்கிறது என்பது புரிந்தது.
"ஆனா ஒரு கண்டிஷன்"
அந்த பாக்ஸில் இயர்பட்ஸ் உடன் என்ன இருக்கிறது என பார்த்துக்கொண்டே "என்ன கண்டிஷன்? எதுக்கு கண்டிஷன்?"
"இதை நீ ஏர்போர்ட்ல வெச்சு போட்டுக்கணும், நான் சொல்ற வரைக்கும் கழட்டவே கூடாது. யூகேல வெச்சு போட்டுக்கணும், புரியுதா?" என்றான் யோசனையுடன்.
அதனை உபயோகம் பண்ண ஆசையாக இருக்க, அவன் சொல்வது எதற்கு என யோசிக்காமல் சரி என்றாள். ஏர்போர்ட் உள்ளே செல்லும் முன் அவளுக்கு அதனை எப்படி உபயோகம் பண்ண வேண்டும் என்ற முறையை சொல்லிக்கொடுத்தான்.
இருவரும் உள்ளே நுழைய அங்கே வரதராஜனும், கல்பனாவும் ஏற்கெனவே காத்துக்கொண்டு இருந்தனர். சீரான வெட்டப்பட்ட முடி விரித்து விடப்பட்டிருக்க, இண்டோ-வெஸ்டர்ன் உடை அணிந்து ட்ராலியை தள்ளிக்கொண்டு வரும் சாராவை அடையாள கண்டுபிடிக்க கல்பனாவுக்கு நேரம் எடுத்தது. அர்ஜுன் கல்பனாவின் முக பாவனையை கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.
அர்ஜுன் மற்றும் சாரா இவர்கள் அருகில் வர முதலில் கல்பனா தான்
"பாருடா, யாருகிட்ட இந்த டிரஸ்ச கடன் வாங்கி போட்டு வந்த? இது எல்லாம் உனக்கு அழகா இருக்குனு நினைப்பா?" என்றாள் நக்கலாக
வரதராஜன் ஏதோ சொல்ல வர, அதற்குள் முந்திக்கொண்டு "ப்பா, சும்மா இருங்க. எப்போ பார்த்தாலும் என்னையே வாய மூட சொல்றது. கொஞ்சம் அவன் கிட்டயும் ஸ்டேட்டஸ் பார்த்து பழக சொல்லுங்க. உள்ள வரும் போதே ஏர்போர்ட்ட எப்படி வேடிக்கை பார்த்தா பாத்தீங்கள. அடுத்து பிளைட் உள்ளே போய் இப்படி தான் பார்த்து வைப்பா, நமக்கு தான் அசிங்கமா இருக்கும். இதுல வேஷம் போட்ட மாதிரி இந்த காஸ்டியூம் வேற" என பேசிக்கொண்டே போக, வரதராஜனுக்கு தான் கஷ்டமாகி போய் விட்டது.
அர்ஜுன் பொதுஇடம் கருதி திட்டாமல் இருந்தான். வரதராஜன் கல்பனாவை முறைப்போடு பார்த்தாலும், சாரா எதுவும் சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அவள் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பின் அவர் தான் மனம் கேட்காமல்
"சாரா" என அவள் முன் கையை நீட்ட
பொம்மைக்கு உயிர் வந்தது போல் அப்போது தான் அவர் பக்கம் திரும்பியவள், காதில் இருந்த இயர்பட்ஸ் ஐ ஆப் செய்து
"சொல்லுங்க சார், நல்லா இருக்கீங்களா?" என சிரித்த முகத்துடன் கேட்டாள்.
அப்போது தான் அங்கிருந்த இருவருக்கும் புரிந்தது அவள் கல்பனா சொன்னது எதையும் அவள் காதில் விழவில்லை என்று. அர்ஜுன் நாக்கை துருத்தி கல்பனாவை பார்த்து நக்கல் செய்ய
கரி பூசப்பட்ட கல்பனா "ச்ச" என கோவமாக அங்கிருந்து சென்று தள்ளி இருக்கும் இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள். சாராவுக்கு அப்போது தான் புரிந்தது ஏன் அவன் இயர்பட்ஸ் ஐ போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என சொன்னதின் அர்த்தம்.
என்ன தான் கல்பனா இதற்கு முன் நாட்களில் பேசிய பேச்சுக்கு அர்ஜுன் வந்து சமாதானம் செய்தாலும் மனம் காயப்பட்டது உண்மை தானே. அதற்காகவே இந்த தற்காலிக முயற்சி.
"நான் நல்லா இருக்கேன் மா. வா வந்து இப்படி உட்காரு, சாப்டியா" என சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டார். கல்பனா செய்ததுக்கு மன்னிப்பு கேட்டு அவள் செய்ததை சொல்ல விரும்பவில்லை, பின் அர்ஜுன் செய்த முயற்சிக்கு பலன் இல்லாமல் போகும் எனவே சாதாரணமாக பேசினார்.
பிளைட் ஏறிய போதும் முன்பு இருந்த இருக்கையில் வரதராஜனும், கல்பனாவும் அமர, கடைசியில் இருந்த இருக்கையில் அர்ஜுனும், சாராவும் ஒன்றாக அமர்ந்தனர். தந்தை ஓரப்பார்வையில் மகனை பார்க்க, அவனோ விசில் அடித்துக்கொண்டு கண்டுக்காத வாறு அவரை கடந்து சென்றுவிட்டார்.
"தேங்க்ஸ்" என்றாள், அதற்கு பதில் சிரித்த படியே அவளுக்கு சீட் பெல்ட் மாட்டிவிட்டான். அவன் செய்யும் ஓவ்வொரு செயலும் அவளை அவன் பால் சாய்த்தது. கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டும், அவரவர் போனில் படம் பார்த்துக்கொண்டும் நேரத்தை கடத்தினர். இரவு நேரம் அமைதியாக இருக்க, பாதி பேர் தூங்கிவிட்டனர். சாரா தூக்கம் வராமல் அமர்ந்தவாக்கில் புரண்டு புரண்டு சாய
"என்ன சாரா, தூக்கம் வரலையா?" என்றான் அவள் காதருகில்
அது என்னவோ கூச்சமாக இருக்க கண்களை மூடிய படியே "அதுலாம் ஒன்னும் இல்லை"
"அன்னைக்கு மாதிரியே என் மேல சாஞ்சிக்கோ" என்றான் இன்னும் நெருக்கமாக வந்து, அதில் சாரா 'பட்டென' கண்களை திறந்து அவனை பார்க்க
அவனும் பார்வை மாற்றாமல் அப்படியே பார்த்தான். கண்களில் காதல் மட்டுமே...
எதை பற்றி அவன் பேசக்கூடாது என்று நினைத்தாளோ அதையே அவனும் பேச, கூச்சத்தில் கன்னம் சிவந்து விட்டது. என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாற
"சரி வேண்டாம்னா விடு" என அவன் சொன்னதும் ஏமாற்றமாகவும் இருந்தது.
வருத்தத்துடன் கண்களை மூடிக்கொள்ள, அவள் தோளில் பாரம்.. என்ன என்று திரும்பி பார்க்க, அவளை பார்த்து கண்ணடித்து சிரித்த அர்ஜுன் அவள் தோளில் தலை சாய்த்திருந்தான்.
"நான் வேண்டாம்னு சொல்லலையே" என்றான் குறும்பாக, அவன் கண்களை மூடிக்கொள்ள... சாரா தான் குறுகுறுப்பில் முழித்துக்கொண்டு இருந்தாள் .
கொஞ்சம் நேரம் கழித்து அவன் தலையை எடுத்துக்கொண்டான், அவளுக்கு வலிக்கும் என. அவன் எடுத்த நிமிடம் சாரா அன்று போல் இன்றும் அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொள்ள, எதிலோ வெற்றி பெற்றதை போல் சந்தோஷப்பட்டான். அவள் கையை எடுத்து அவனுடன் கோர்த்துக்கொள்ள, அவனினுள்ளும் பட்டாம்பூச்சி தான்.
சாராவுக்கு தெரிந்தே இருந்தது இது நட்பை தாண்டிய உறவு என்பது. ஆனால் அர்ஜுன் மேல் அபாரமான நம்பிக்கை இருந்தது. இதே உறவு மீண்டும் பின்னோக்கி நட்பு என்னும் கோட்டில் வந்து நிற்காது என்று. பல நாள் தேடி அலைந்து கிடைத்த பாதுகாப்பான இடம் போல் அயர்ந்து தூங்கினாள்.
இரண்டு நாள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை, கண்ணிமைக்கும் நொடியில் நாளை கல்யாணம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஏஞ்சலா வீட்டுக்கு சென்றுவந்த போது
"வெல்கம் சாரா! ரொம்ப அழகா இருக்கு இந்த சேஞ் (change)" என்று மனதார பாராட்டினாள். இடத்துக்கு ஏற்ப உடை அணிந்திருந்தாள்.
"தேங்க்ஸ், உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு" என இது வரையிலும் பாத்திராத வெளிநாட்டு பாணியில் இருந்த வீட்டை பாராட்டினாள்.
"தேங்க்ஸ் டியர், இரு உனக்கான டிரஸ் எடுத்துட்டு வர்றேன்" என அங்கிருந்து கப்போர்டு ஒன்றை திறந்து, ஒரு பையை கொண்டு வந்தாள்.
"இந்தா இது உனக்கு, மேட்சிங் செட் உள்ளவே இருக்கு. எல்லாமே உனக்கு தான்"
சங்கடமாக இருக்க, அதனை வாங்காமல் ஏஞ்சலாவை பார்த்தாள். டிரஸ் என்று மட்டுமே சொல்லிருக்க, கூடவே போட்டுக்க மேட்சிங் செட் வேறு இருக்க யோசனையாக இருந்தது.
"இந்தா பிடி. நானே அந்த ட்ரெஸ்ஸ தச்சேன் தெரியுமா. அந்த செட் ஆதி உனக்காக வாங்கிட்டு வந்தான். போட்டு பாரு" என தோழியாக அவளின் கையில் பையை கொடுக்க வாங்கிக்கொண்டாள்.
"சாரா, நீ நிஜமாவே ரொம்ப ஸ்பெஷல். ஆதி உன்ன மிஸ் பண்ணிட்டானு தான் சொல்லுவேன்" என சொல்ல அதிர்ச்சியா பார்த்தாள்
"நாளைக்கு கல்யாணத்த வெச்சிட்டு, நான் கல்யாணம் பண்ண போறவனையே இப்படி பேசுறேன்னு நினைக்கிறியா?! உன்ன மாதிரி ஒரு பொண்ணு வாழ்க்கையில இருந்தாலே சொர்கம் தான். ஆனா உன் மேல அவனுக்கு எந்த எண்ணமும் வளத்துக்காதது அவன் பக்கம் தான் இழப்பு. யு டிசர்வ் பெட்டெர் தன் ஆதி (You deserve better than Aadhi)" என்றாள் மனமாற.
சாரா என்ன சொல்வது என தெரியவில்லை, ஆதி தான் உன்னை இழந்துவிட்டான், நீ இல்லை என்பதை அவனை கட்டிக்க போகும் பெண் சொல்லுவது எல்லாம் பெரிய வாழ்த்தாக பட்டது. எந்த ஒரு கள்ளமும் இல்லாத மனதில் தான் இது போல் வார்த்தை வரும். அதிகம் தூற்றும் வார்த்தை கேட்ட சாராவுக்கு, ஏஞ்சலா நிஜமாகவே ஒரு ஏஞ்சலாகவே தெரிந்தாள்.
மேலும் ஆதியை காதலனாக கற்பனை செய்து ஏமாந்த இதயம், ஏஞ்சலா வார்த்தையில் மருந்திடப்பட்டது. இப்போது கற்பனை செய்து பார்க்க, அதில் தெரிந்த முகமோ அர்ஜுனுடையது. ஏஞ்சலாவின் தொடுகையில் நினைவுகளில் இருந்து கலைந்தவள்
"ஆதி நிஜமாவே ரொம்ப கொடுத்து வெச்சவன் உன்ன மாதிரி ஒரு லைப் பாட்னர் கிடைக்க" இருவரும் அனைத்துக்கொண்டனர்.
"இதுல ரெண்டு டிரஸ் இருக்கு, எது ரொம்ப பிடிக்குதோ அதை நாளைக்கு போட்டுக்கோ. ஹேர் ட்ரெஸ்ஸர் வந்து உனக்கும் அலங்காரம் பண்ணுவாங்க சரியா" எங்கே அவள் மறுப்பு சொல்லிவிடுவாள் என தெரிந்தே பேச்சை மாற்றி எல்லோரும் இருக்கும் இடத்துக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டாள்.
இதனை எல்லாம் ஹோட்டலில் பார்க்கில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தாள். அப்போது பின்னாடி இருந்து அவள் தலையில் பீனீ (beanie) வைக்க, திரும்பும் அவசியமே இல்லாமல் அது அர்ஜுன் என்று கண்டுபிடித்து விட்டாள்.
"இப்படி குளூருல வந்து உக்காரனும்னு என்ன அவசியம்? இருக்குறதுலையே மோசமான விஷயம் வேற நாட்டுக்கு வந்துட்டு உடம்பு சரி இல்லாம போறது தான்" என்றான் அக்கறையாக.
அதனை சிரிப்புடன் ஆமோத்திதாள். சாரா "அப்புறம்... அங்கிளும், கல்பனாவும் தூங்கிட்டாங்களா?"
"ஹ்ம்ம், ஆமா அவங்க அப்போவே படுத்துட்டாங்க. சாரி சாரா, கல்பனா பண்றதுக்கு எல்லாம். அவா எந்த இடத்துல தப்பா மாறுனானு நானும் அப்பாவும் கவனிக்காம விட்டுட்டோம்."
அவன் கையின் மேல் கையை வைத்தவள் "அம்மா இல்லாம வளந்த பொண்ணு தான, நான் எதுவும் நினைக்கல விடு அர்ஜுன், நீ கொடுத்த இயர்பட்ஸ் கல்பனா கிட்ட மட்டும் இல்ல, ஷில்பா ஆண்ட்டி (ஆதியின் அம்மா) கிட்டவும் நல்லா யூஸ் ஆச்சு"
அவர் கிடைக்கும் நேரம் எல்லாம் சாராவை மட்டம் தட்டியும் ஏஞ்சலாவை உயர்த்தியும் பேசிக்கொண்டே தான் இருந்தார். என்னோட மருமகள் அப்படி.. என்னோட மருமகள் இப்படி என்று, அவரிடமும் இருந்து தப்பிக்க அது உதவியாக இருந்தது. எல்லாம் நேரங்கிலும் 'நான் நீங்கள் சொல்கிற மாதிரி இல்லை' என வாதாடுவதை விட, இது போல் கேட்டும் கேக்காமலும் கடந்து செல்வதே சிறந்தது. அதை தான் சாராவும் செய்தாள்.
இந்த மாதிரி மனிதர்கள் அவர்களாக திருந்தினால் மட்டுமே உண்டு, என்பதால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
"நம்ம ப்ராஜெக்ட் ரொம்ப மெதுவா தான் போயிட்டு இருக்கு டி, திரும்ப ஊருக்கு போனதும் அதை முதல்ல பாக்கணும், இல்லனா கொடுத்த நேரத்துக்குள்ள செஞ்சி முடிக்க முடியாது"
"ஏன் டா நெகடிவ்வா பேசுற, அப்போதான் சொன்ன நேரத்துக்குள்ள செஞ்சி முடிக்க முடியும்னு சொல்லி பழகு" என திருத்தம் செய்ய
ஒரு நொடி அவன் அன்னை இருந்திருந்தால் இதே தான் சொல்லிருப்பாரோ என்று தோன்றியது.
அங்கே வேறு ஒரு ஜோடி நெருக்கமாக அவர்கள் உலகில் மூழ்கிருக்க, சாரா சங்கடமாக திரும்பிக்கொண்டாள். இதனை கவனித்த அர்ஜுன் 'இவா எதை பார்த்து இந்த ரியாக்ஷன் கொடுக்கா' என அவள் பார்த்த திசையில் பார்க்க, ஜோடி லவ் போர்ட்ஸ் நெருக்கமாகா இருந்தனர்.
"சாரா அங்க பாரேன்" என வேணும் என்றே வம்பு இழுக்க
"டேய் போடா, உனக்கு வேற வேலை இல்லை. நான் பாக்க மாட்டேன்" என கோவமாக பேச முயற்சி செய்ய அதுவோ கெஞ்சலாக வந்தது
"ஏன் டி, டிவி ல மட்டும் தான் பாப்பியா?" என கேட்டு அவளிடம் சில அடியை பரிசாக வாங்கிக்கொண்டான்.
அவனிடம் மட்டுமே இதனை எல்லாம் பேச முடிகிறது, அப்போ இதற்கு பெயர் தான் காதலா? என அந்த நொடி சிந்தித்தாள். அர்ஜுனை பார்க்க, அவனோ இவளை கிண்டல் செய்து வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்திக்கொண்டு இருந்தான். இது போல் ஒரு சிரிப்பையும், சேட்டையையும் அவன் வேறு யாரிடமும் வெளிப்படுத்தியது இல்லை. இவளிடம் மட்டுமே அவனின் இயல்பான பக்கம் வெளிப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே அவன் அவளை யாரிடமும் விட்டுக்கொடுத்து இல்லை ஏன் சொந்த தங்கையிடம் கூட. அவளை கடத்திய அன்று, இவளுக்காக அவன் துடித்தது அவள் நேரில் பார்த்தாலே!
சுற்றிலும் இருள் அந்நேரம் லேசாக பனி பெய்ய, அர்ஜுன் பற்றிய யோசனையுடனே அவனை நிமிர்ந்து பார்க்க பனியின் இடையில் அவளை நெருங்கி வருவது தெரிந்தது. குளிர் முன்பை விடவும் ஜாஸ்தியாக
"உள்ள வா சாரா, பனி பெய்ய ஆரம்பிக்கிது" என்றான் கரகரபப்பான குரலில். அவளின் ஆழ்ந்த பார்வை அவனை ஒரு நிலையில் இருக்க விடாது என்பதை அறிந்தே அங்கிருந்து போக நினைத்தான்.
சாரா அசையாமல் அப்படியே நிற்க, அவள் உதட்டில் பனி துகள் விழ, கைகளை கட்டுப்படுத்த முடியாமல்....பனியை தொட்டான் இல்லை அவள் இதழை தொட்டான். அதற்கு மேல் முடியாமல் அவள் உதடு நோக்கி குனிய, சாரா கண்களை மூடிக்கொண்டாள் நடக்க போவதை அறிந்துக்கொண்டு.
பேசினானாலே உதடு உரசும் நெருக்கத்தில் இருக்க, இருகன்னங்களையும் பற்றியவன், சுதாரித்துக்கொண்டு அவள் நெற்றியோடு நெற்றி முட்டி தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றான்.
"சாரா சொல்றத கேளு, உள்ள போகலாம். இது மேல இங்க நிக்க... வே..வேண்டாம்" என்றான் கட்டுப்படுத்திக்கொண்டு.
அவனின் நெருக்கத்தை தடுக்காமல் இருந்த சாரா, அவன் கொடுக்காமல் விட்டதை அவன் கன்னத்தில் கொடுக்க, அதிர்ச்சியில் அவள் கண்களை பார்க்க, அதுவோ நட்பில் இருந்து காதலுக்கு வந்துவிட்டதாக சொன்னது. நொடியும் தாமதிக்காமல் அவள் இதழில் முத்தமிட்டான். இப்போது இவர்கள் உலகம் மறந்து இருக்க, இவர்கள் பார்த்த காதல் ஜோடிகள் இப்போது சாராவையும், அர்ஜுனையும் ரசித்துக்கொண்டிருந்தனர்.
பனி அதிகம் பெய்ய கைகளை கோர்த்துக்கொண்டு தங்கியிருக்கும் அறையை நோக்கி சென்றனர். அர்ஜுன் அதீத சந்தோசத்தில் இருந்தான், அவன் சாரா கையை விட்டு போய் விட்டாள் என்று நினைத்திருக்க, காலம் அவன் காதலை அவன் கைகளில் வந்து சேர்த்தது.
சாராவோ அவள் வாழ்க்கையில் சொந்தம் என சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்று நினைத்திருக்க, அத்தனை சொந்தமும் அவளுக்கு இப்போது வந்துவிட்டதை போல் உணர்ந்தாள். அர்ஜுனின் மூலம் அவளுக்கு என்ற ஒரு குடும்பம், நினைக்கவே இனிப்பாக இருந்தது.
முத்தம் இன்னும் மிச்சம் இருக்க, யாரும் இல்லாத அந்த லிப்ட் அவர்களுக்கு வசதியாக போனது.
மறுநாள் விடியல் அழகாக இருந்தது, சாரா நேற்று நடந்தது நினைத்துப்பார்த்துக்கொண்டே கிளம்பிக்கொண்டு இருந்தாள். காலையிலேயே ஏஞ்சலா வீட்டுக்கு வந்திருக்க, அங்கு தான் கிளம்பினர் சாரா, அர்ஜுன் மற்றும் கல்பனா. வரதராஜன், ரவீந்திரன் உடன் இருந்தார்.
ஏஞ்சலா தான் அவர்கள் நால்வருக்கு உடையை டிசைன் செய்திருந்தாள். அவளுக்கு வெள்ளை கவுன், வீ நெக், ஸ்லீவ்லெஸ், வெள்ளை நெட்டில் ஆனா பட்ட வெய்ல் (veil) வைத்து தலையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு குறையாத அழகுடன் சாராவின் வெள்ளை லெஹெங்காவும் டிசைன் செய்து கொடுத்திருந்தாள்.. அதே போல் ஆதிக்கு கருப்பும் வெள்ளையும் கோட் சூட், அதே வண்ணத்தில் அர்ஜூனுக்கும் கொடுத்தாள். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் மூவரையும் பிரித்து பார்த்துவிட கூடத்தில் என்பதின் வெளிப்பாடு இதுவே.
ஹேர் ட்ரெஸ்ஸர் உதவியுடனும், ஏஞ்சலாவின் உதவியுடனும், அர்ஜுன் செய்த மாயத்திலும் தேவைதையாக தெரிந்தாள் சாரா.
"ஏஞ்சலா மேக் அப் நானே போட்டுக்கிறேன், இன்னைக்கு உனக்கு தான கல்யாணம், நாங்க தான் உன்ன ரெடி பண்ணனும்" என சாராவின் கண்களுக்கு மை எழுதிக்கொண்டிருந்த ஏஞ்சலாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளோ கல்யாணம் அலங்காரத்தில் இருந்துக்கொண்டு சாராவை கிளப்பிக்கொண்டிருந்தாள்.
"ஷ்ஷ்ஷ் சும்மா இரு, அப்போதான் விங் (wing) சரியா வரும். உனக்கு கண்ணு ஹைலைட் ஆ (highlight) தெரியனுமா, இல்லை லிப்ஸ் ஆ?"
"ஏன்? அதுல எல்லாம் வித்தியாசம் இருக்க போகுது?"
அங்கிருந்த மேக்கப் பொருட்களை ஆராய்ந்த வாறே, ஏஞ்சலா "இருக்கே, ஐஸ் எடுப்பாக தெரியணும்னா, லிப்ஸ்டிக் நியூட் கலர்ல போடணும், இதுவே லிப்ஸ் எடுப்பா தெரியணும்னா டார்க் கலர் லிப்ஸ்டிக் போட்டுட்டு, ஸ்மோகி ஐ (smokey eye) போட்ட லிப்ஸ் எடுப்பா தெரியும், இப்போ சொல்லு எப்படி பண்ண?"
"இது எல்லாமே எனக்கு புதுசு, சோ நீயே எது ஈசியோ அதுவே பண்ணிடு போதும்" என சொல்லிவிட்டு முகத்தை கொடுத்த வாறு அமர்ந்துக்கொண்டாள்.
இத்தனை வருடங்களில் அவளுக்கு என்று கிடைத்த பெண் தோழி. மகிழ்ச்சியாக உணர்ந்தாள். சாராவை மேலும் அழகு படுத்திய ஏஞ்சலா கீழே சென்றுவிட்டாள். சாரா கண்ணாடியில் பார்க்க, அவள் இவ்வளவு அழகா என்ற சந்தேகம் தோன்ற, ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது பின்னாடி அர்ஜுனின் பிம்பம் தெரிய, வெட்கம் தானாக ஒட்டிக்கொண்டது. அவனும் கோட் சூட் அணிந்து மிடுக்குடன் இருந்தான்.
நேற்று இருந்த சூழலில் முத்தமிட்டு விட்டாள், ஆனால் இன்றோ அவனை எதிர்கொள்ள கூச்சமாக இருக்க, அங்கு இருந்து நகர்ந்து செல்ல நினைக்க கையை பிடித்து தடுத்தான். அவன் கைகளில் இருந்து கையை விடுபட போராட, கண்ணாடி வளையல் குலுங்கும் சத்தம் அந்த அறை எங்கும் கேட்டது. அர்ஜுன் சாராவை நெருங்கும் சமயம் கல்பனா சத்தம் பக்கத்து அறையில் கேட்க... இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்த படியே அங்கே சென்றனர்.
கல்பனா கொண்டு வந்து உடையில் டேமேஜ் இருக்க, அதனை போட முடியாத கோவத்தில் கத்திக்கொண்டிருந்தாள். அவளிடம் போடுவதற்கு வேறு கிராண்ட் உடை இல்லை என்பதால் என்ன செய்வது என தெரியாமல் திணறினாள். இதில் இன்னும் கோவம் ஏற்றுவது போல் சாரா அழகாக வந்து நிற்க, பொறாமையின் பார்வை எப்படி இருக்கும் என சாராவிடம் தான் கேட்க அப்படி ஒரு பார்வை கல்பனாவிடம் இருந்து.
அர்ஜுன் "ஏன் இதை நீ வாங்குற அப்போவே பாக்கலையா? இல்லனா எடுத்து வைக்கிற அப்போவாச்சு பாத்துருக்கலாம்ல?" என திட்ட
"உங்களுக்கு என்ன ஓசில கிடைச்சது, எனக்கு அப்படியா?" என முறைத்த படியே சொல்ல "வந்து நிக்கிறா பாரு வெட்கமே இல்லாம" என சாராவை திட்ட.
அர்ஜுன் மேலும் பேச வரும் முன், சாரா தடுத்தாள். என்றும் இல்லாமல் இன்று அவளே கல்பனாவிடம் பேச முடிவெடுத்தாள். எவ்வளவு நாள் தான் காதை அடைத்துக்கொண்டு இருக்க முடியும்...
"நீ சொல்றது சரி தான். இந்த டிரஸ், நகை எல்லாம் நான் காசு போட்டு வாங்கல தான். ஆனால் இது எல்லாமே எனக்கு அன்பளிப்பா கிடைச்சது. யாரோ ஒன்னும் எனக்கு கொடுக்கல, என்னோட ரெண்டு பிரண்ட்ஸ் அவங்க கல்யாணத்துக்கு இதை கொடுத்தாங்க. அதே மாதிரி எங்க கல்யாணத்துக்கும் இதே மாதிரி நாங்க பண்ணிப்போம். இது எல்லாமே எங்க பிராண்ட்ஷிப் குள்ள நடக்குற விஷயம், இதுல உனக்கு என்ன பிரச்சனை? " என பொறுமையாக கேட்க
"சாரா, இது எல்லாம் நீ அவளுக்கு புரியவைக்கணும்னு அவசியமே இல்லை" என அர்ஜுன் சொல்ல
முகத்தை சுழித்த கல்பனா "ஆமா நல்ல பிரண்ட்ஸ், எல்லாம் பணக்கார பிரண்ட்ஸ்" என மீண்டும் நக்கல் செய்ய, சாரா அங்கிருந்து அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.
அர்ஜுன், "இதுக்கு எல்லாம் வீட்ல வெச்சு இருக்கு உனக்கு. கொஞ்சம் கூட மேனர்ஸ்சே இல்லை உனக்கு" என திட்ட, அதனை கவனிக்காமல் கையில் இருந்த உடையை பார்த்து சோகமாக இருந்தாள். என்ன இருந்தாலும் பார்த்து பார்த்து வாங்கிய உடை, பல நாள் இந்த உடையில் எப்படி இருப்போம் என கனவு கண்டு, அதற்கு ஏற்ற பொருட்கள் எல்லாம் வாங்கி குவித்து ஒரே நிமிடத்தில் எல்லாம் கனவாக கலைந்தது.
திரும்பி வந்து சாரா, கையில் ஒரு பையுடன் வந்தாள். அதனை கல்பனா கையில் கொடுக்க, முறைத்துக்கொண்டு என்ன என்று பிரித்து பார்க்க உள்ளே ஆகாய வண்ணத்தில் ஒரு லெஹன்கா இருந்தது. ஏஞ்சலா சாராவுக்கு என்று கொடுத்த மற்றோன்று உடை. முதலில் இதைத்தான் போட நினைத்திருக்க, அர்ஜுன் உடையில் வெள்ளை கலர் இருப்பதால் வெள்ளை லெஹன்காவை போட்டுக்கொண்டாள்.
"இது என்னோட பிராண்ட் ஏஞ்சலா எனக்கு கொடுத்த கிப்ட்ல ஒன்னு, இன்னைக்கு இதை போட்டுக்கோ" என்றாள் பெருந்தன்மையாக. அதில் இது ஒன்னும் ஓசி பொருள் இல்லை, இதுவும் கிப்ட் தான், கிப்ட் என்பதால் இன்று மட்டுமே அது உனக்கு, திரும்ப கொடுத்துவிடு என சொல்லாமல் சொன்னாள்.
அந்த உடையை தூக்கி போட கூட மனம் இல்லை, அவ்வளவு அழகாக இருந்தது.
"அவளுக்கு ஏன் சாரா இது எல்லாம் பண்ற, சரியான திமிரு பிடிச்சவ. உன்ன என்ன எல்லாம் பேசுறா" என சொல்லிக்கொண்டே கல்பனா இருந்த அறையில் இருந்து வெளியேறினர்.
"விடு அர்ஜுன், பார்த்துக்கலாம்" என்பதோடு முடித்துக்கொண்டாள். கல்பனாவிடம் இன்னைக்கு போட்டுக்க கொடுத்ததை ஏஞ்சலாவிடமும் சொல்ல, அவள் பெரியதாக அலட்டிக்கவில்லை. அவள் மனதில் சாரா இன்னும் உயர்ந்த இடத்தை தான் பிடித்தாள்.
பீச் சைட் வெட்டிங் பிளான் செய்திருந்தனர். கடல் மண்ணில் மேடை அமைத்து, அன்று பூத்த மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஏஞ்சலா பிரைட்ஸ் மெய்ட் (braids maid) அணிவகுக்க மேடையில் இருந்த ஆதியை நோக்கி கையில் பூக்கொத்துடன் நடந்துவந்தாள். இருவரின் ஜோடி பொருத்தம் அனைவரின் கண்களையும் கவர்ந்தது. முதல் வரிசையில் அர்ஜுனும், சாராவும் ஜோடியாக அமர்ந்திருந்தனர். சுற்றி இருந்த அனைவரும் கத்தி, கைதட்டி ஆரவாரம் செய்ய, ஆதி ஏஞ்சலா மேடை ஏறுவதற்கு கைகளை நீட்டினான். வெட்கத்துடன் கைகள் கோர்த்துக்கொண்டு ஏஞ்சலா, ஆதி எதிரில் மணப்பெண் கோலத்தில் அவன் மனைவியாக போகும் நிமிடத்துக்கு காத்துக்கொண்டிருந்தாள்.
ஆதி அவன் பாக்கெட்டில் இருந்து வெட்டிங் ரிங்கை எடுக்க, அனைவரும் ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தார். ஏஞ்சலா அவன் முன் கரத்தை நீட்ட, எதிர்பாராத விதமாக ஆதி கையில் இருந்த ரிங் நழுவி உருண்டோடி முதல் வரிசையில் அமர்ந்திருந்த சாரா காலுக்கு அடியில் வந்து நின்றது. இதனை கண்ட நால்வரின் முகத்திலும் அதிர்ச்சி!!! இது தான் விதியோ?