logo

அத்தியாயம் 8

Mars

Administrator
தேன்மை - தியா வரலையா? நீ மட்டும் வந்திருக்க…

தீரன் (எப்படி இந்த பாட்டிக்கு நான் மட்டும் வந்தது தெரிஞ்சது… ஒரு வேலை நடந்து வர்ற சத்தம் வெச்சு கண்டுபிடிப்பாங்களோ)

தீரன் - ஆமா பாட்டி, தியா ரெஸ்ட் ரூம் போயிருக்கா. அதான் நான் மட்டும் வந்தேன்.

தாமஸ் - சரி ப்பா என்றவர் தேன்மையை சோஃபாவில் உட்கார வைத்துவிட்டு… தீரனின் இருபக்கமும் இருவரும் அமர்ந்து கொண்டனர்.

தாமஸ் - வள்ளி! வந்து இந்த லைட் ஆன் பண்ணு. இப்போவே நைட் மாதிரி இருக்கு கருமேகம் சூழ்ந்தனால. நீயும் நேரத்துக்கு கிளம்பனும்னா கிளம்பு. வானத்தை பார்க்கும் போது நல்லா மழை வரும்னு தோணுது.

வள்ளி லைட் ஆன் செய்து அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

மேலே தாரவோ நகத்தை கடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.

விஸ்ரான் லேப்டாப் ஆன் செய்து… AI மூலம் செய்து வைத்திருந்ததை ஓபன் செய்தான். அது தீரனின் அம்மா அப்பா இப்போதுக்கு இருக்கும் வயத்தில் இருந்தனர். பார்த்த தாமஸ் மற்றும் தேன்மை அவர்கள் மகனை பார்த்ததும் அழுது பாச மழை பொழிவார்கள் என்று எண்ணி இருந்தால் அதுதான் இல்லை. நிர்மலான முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இவ்வளவு வருடம் கழிந்து அவர்கள் பைய்யனுடன் இணைய எல்லாம் விரும்பவில்லை. இவன் உண்மையான தீரானா இல்லையா என்பதற்காகவே இந்த பரிட்சை. பேரன் மேல் மட்டுமே சிறிதளவு பாசம் அவ்வளவே. இத்தனை வருடங்கள் யாரும் இல்லாத தனிமையின் விளைவு இது.

மடிக்கணினியில் இருந்து ‘ அப்பா, அம்மா ‘ என்று குரல் வர… மேலும் பேசினால் அது கம்யூட்டர் பேசுது என்பது தெரிந்து விடும். இங்கு தீரன் அந்த குளிரிலும் லேசாக வேர்வை வர அதையும் மறைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தான்.

அவ்வளவு தான் அடுத்த வார்த்தை பேசும் முன் கரெண்ட் கட் ஆகி விட்டது. அதை தொடர்ந்து wifi செயல் இழந்து போனது. மடிக்கணினியில் உள்ள வீடியோ அதற்கு மேல் போகாமல் நின்றுவிட்டது.

அவர்களை காட்டிவிட்டான்..இதுவே இவனை நம்ப அந்த வயதான தம்பதியினருக்கு போதுமானதாக இருந்தது. அப்போதுதான் தீரானுக்கு மூச்சே வந்தது. தப்பித்ததை எண்ணி இல்லை தாராவை நினைத்து.

போன கரெண்ட் நம்ம நாட்டில் அவ்வளவு சீக்கிரத்தில்லா திரும்பி வரும் எனவே ஆசுவாசகமா இருந்தான். மேலே தாராவின் நிலையும் அதுவே. சீக்கிரம் இந்த இடத்தை விட்டு கிளம்ப வேண்டும் என்ற உறுதி இன்னும் வலுவானது.

தாமஸ் - என்ன ப்பா நெட் கட் ஆகிடுச்சா? சரி விடு இன்னொரு நாள் பேசிக்கலாம். எங்களுக்கு எங்க பையனை பார்த்ததே போதும்.

தேன்மை - ஆமா தீரா! அவன் கூப்டதும் இன்னும் காதுல கேட்டுட்டு இருக்கு. இதுவே போதும் ப்பா. தாரா தனியா இருப்பா… நீ துணைக்கு இருக்கணும்னா போய்ட்டு வா.

பின் இருவரும் அருகில் இருந்த ரேடியோவில் பழைய பாடல் ஒன்றை போட்டு விட்டு பேச ஆரம்பித்துவிட்டனர்.

ரூம் உள்ளே வந்ததும் வேகமாக அவனை என்று அணைத்துக்கொண்டாள். இதுவே நிம்மதியின் வெளிப்பாடாக தெரிந்தது எனவே சின்ன சிரிப்புடன் பதிலுக்கு அணைத்து விடுவித்தான்.

விஸ்ரான் - எதுக்கு இவ்வளவு பயம் தாரா? நேத்து நைட்டு தனியா டார்ச் பிடிச்சிட்டு வீட்டுக்குள்ள வந்த தைரியம் எங்க போயிடுச்சு?

தாரா - என்ன பண்ணுறதுனே புரியல அப்போ …. அதான் என்றாள் அசட்டு தனமாக.

அதில் லேசாக சிரித்தவன் - என்ன எல்லாம் பேக் பண்ணி கிளம்ப தயாரா இருந்தியா? என்று வினாவினான் வேணும் என்றே.

‘நீ தான் என்னோட பலவீனம் ஆகிட்டனு எப்படி சொல்லுவேன்… அய்யோ இது எப்போதுல இருந்து… தாரா இது சரி இல்லை ‘ என்று தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்தாள்.


தாரா - அதுலா இல்லவே இல்லை. பாருங்க (பேக் ஐ காட்டினாள்). எதுவும் எடுத்து வைக்காமல் இருந்தது. உங்களுக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா கண்டிப்பா காப்பாத்த வந்திருப்பேன்.

அவள் குரலில் இருந்த உறுதி ஒரு நிமிடம் அவனை அசைத்துப்பார்த்தது. மேலும் இவளை எந்த சூழலிலும் விட்டுவிட கூடாது. அவளை பத்திரமாக பார்த்துக்கணும் என்று உறுதி எடுத்துக்கொண்டான்.


கீழே நடந்ததை எல்லாம் அவளிடம் சொன்னான். மேலும் சீக்கிரம் வேலையை முடித்து விட்டு செல்வோம் என்று பிளான் போட்டனர். இன்னொரு முறை இந்தே மாதிரி திக் திக் நிமிடங்களில் இருக்க இருவரும் தயாராக இல்லை. இவர்கள் பேசும் ரகசியம் இடியின் சத்தம் மறைத்துவிட்டது.

விஸ்ரான் - இப்போ சொல்லு… அந்த பணம் எல்லாம் எங்க இருக்கு? உங்க கூட்டாளி எவ்வளவு தூரம் உள்ள போனான்.

தாரா - எவ்வளவு தூரம்னு தெரியல. ஆனால் கடைசியா அவன் கிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்ததாகவும், அவன் அந்த இடத்தை கண்டுபிடிசிட்டான் என்றும் அன்னைக்கு நைட் அங்க போய்ட்டு பொருள் எடுத்துட்டு வர்றதா சொல்லிருக்கான். இந்த வீட்ல ஏதோ அண்டர்கிரவுண்ட் ல இருக்கிறதா அந்த மெசேஜ்ல இருந்திருக்கு.


விஸ்ரான் - நீ சொல்றது பார்த்தா… போன வாரம் இந்த வீட்ட தூரத்துல இருந்து பார்த்த அப்போ.. தாமஸ் ரூம்ல மூணு ஆள் இருந்தாங்க… நீயும் அவங்களைத்தான் சொல்றது போல தெரியுது. (சிறிது யோசனைக்கு பின்பு) அப்போ பணம் அங்க தான் இருக்கும். ஆனா அந்த அண்டர் கிரவுண்ட் எங்க இருக்கு? நான் விசாரிச்ச வரைக்கும் அப்படி சொல்லலையே…

(கவனமாக அன்னைக்கு எலி எடுத்து வந்து போட்ட விரலை பற்றி ஒன்னும் சொல்லவில்லை… கண்டிப்பாக பயப்படுவாள் என்று தெரியும்)

தாரா - எனக்கும் பணம் அங்க தான் இருக்கும்னு தோணுது… சரி அடுத்து என்ன பிளான்?

விஸ்ரான் - இன்னைக்கு நைட்டு அந்த அறை எங்க இருக்குனு பார்க்கலாம்.

தாரா - அண்டர் கிரவுண்ட்னா கண்டிப்பா தளத்துல தான் இருக்கும். அங்க தான் தாமஸ், பாட்டி ரூம் இருக்கு. கீழ போய்ட்டு தேடி பார்க்கும் போது அவங்க வந்துட்டாங்கன்னா??? என்று சற்று பீதியுடன் கேட்க…

விஸ்ரான் - கண்டிப்பா ஒரு வழி இருக்கும்.. சீக்கிரம் என்னனு கண்டுபிடிக்கலாம்.

இருவருக்கும் வேறு என்ன பேச என்று தெரியாமல் மெளனமாகி விட்டனர். அவனும் வேறு எதிலும் கவனத்தை திருப்பினாலும் அவள் எண்ணம் தான் ஆட்கொண்டது. அவளுக்கும் அதே அசௌகரியம் தான். இருவருக்கும் மற்றவர் இருப்பு ஏதோ ஒரு மாற்றம் தந்ததை உணர்ந்தனர். ஒருவருக்கொருவர் மற்றவரிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினர்.

முழுதாக ஒரு நாள் கூட தெரியாத ஒரு நபரின் மேல் ஈர்ப்பு வருமா என்பது தெரியவில்லை இருவருக்கும். இவ்வளவு நேரம் லேசாக பெய்து கொண்டு இருந்த மழை மேலும் வலுத்தது. நன்றாக இருட்டிக்கொண்டும் இருந்தது.

அவனிடம் இருந்து வரும் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஜன்னல் அருகில் சென்று நின்று கொண்டாள். அவளின் முயற்சி அவனுக்கும் புரிந்தது. அதில் லேசா சிரிப்பும் எட்டி பார்த்தது. வெளியில் மழை, ஜன்னல் அருகே மனதில் முதல் முறையாக தாக்கத்தை ஏற்படுத்திய பெண், மிதமான வெளிச்சத்தில் இவற்றை பார்க்க இனிமையாக இருந்தது. இவன் வாழ்வில் ஒரு போதும் எந்த ஒரு நிமிடத்தையும் ரசித்து பார்த்தது இல்லை.

அவளுக்கும் அவன் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தாள். அதனின் பலனாக திரைச்சீலை இறுக்கி பிடித்தாள். இதனை கவனித்துக்கொண்டு இருந்தவன் அதற்கு மேல் கட்டுபடுத்த முடியாமல் அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவன் அருகில் வருவது தெரிந்தும் அங்கிருந்து நகராமல் நின்றாள். அவள் பின் உரசாமல் ஆனால் நெருங்கி நின்றவன் அவள் பார்க்கும் திசையை பார்த்தான்… கையோ அவள் கை மேல் இருந்தது. அவளின் உடலின் ஏற்பட்ட மாற்றம் கையின் மூலம் தெரிந்தது. மெதுவாக பின்னின்று நாடியை அவள் தோள்களில் குற்றி கன்னம் உரச நின்று கொண்டான். அவளின் கையோ மேலும் திரைச்சீலையை இறுக்கி பிடிக்க…. அவள் கையை அதில் இருந்து விடுவித்து இவன் பிணைத்துக்கொண்டான். மற்றொரு கை இடுப்பை சுற்றி போட வரும் முன் எதிர் பார்க்காத விதமாக பெரும் இடி ஒன்று முழங்க… இது வரைக்கும் இவர்கள் வாழ்வில் பார்க்காத பெரும் மின்னல் ஒன்று வெட்டியது.

இதனை பார்த்துக்கொண்டு இருந்தவள் அவ்வளவு தான் வீல் என்று அலறி விட்டாள். கண்களை மூடிக்கொண்டு அம்மா அம்மா என்று அதற்ற… திரும்பி இவனை அணைத்துக்கொண்டாள் அடைக்களம் தரும் விதமாக. அவள் கத்தியதில் ஷாக் ஆனவன் அவள் அம்மா என்று அழுக ஆரம்பித்ததும் பயந்து விட்டான்.
 
Top