logo

உயிரோடிருந்தால் வருகிறேன் | Episode 10

Mars

Administrator
நித்யா அவள் கல்யாணத்துக்கு எல்லோரையும் அழைத்தாள் முக்கியமாக துருவ் . அவன் மித்ருதாவுக்கு உதவி செய்ததில் இருந்து நித்தியாவுக்கு அவனின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம்.



காலையில் கல்யாணம் என்பதால் மித்ருதா அவள் பெற்றோருடன் சென்று வந்து விட்டாள். துருவ் கல்யாணத்துக்கு செல்லாமல் ரிசப்ஷன் போகலாம் என்ற எண்ணத்தில் இருந்தான்.



சாயங்காலம் ரிசப்ஷனுக்கு மித்ருதா அவள் வேறு சில தோழிகளுடன் ஒன்றாக ஆட்டோவில் வந்து விட்டாள். அரக்கு நிற புடவை அணிந்து இருந்தாள். மிதமாக நகைகள் என யாரு கண்களையும் உறுத்தாத அழகுடன் இருந்தாள்.



ரிசப்ஷன்.. தோழிகளோடு கலகலப்பாக சென்றது. மன மேடையில் தோழிகள் எல்லோரும் சேர்ந்து ஃபோட்டோ எடுக்கும் போது கீழே துருவ் உட்காந்து கொண்டு மித்ருதாவையே பார்த்துக்கொண்டு இருப்பதை அப்போது தான் மித்ருதா கவனித்தாள்.



அவனும் அதே நிறத்தில் தான் சட்டை போட்டு வந்து இருந்தான். யாரும் அறியாமல் இருவரும் லேசாக சிரித்துக்கொண்டனர். மித்ருதா வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி தான். அவன் பார்வையில் ஏதோ செய்தி இருப்பது போல் தோன்றியது. அவன் வேறு யாரையும் இப்படி பார்க்கவில்லை. அதுவே அவளுக்கு கைகள் சில்லிட போதுமானதாக இருந்தது.



சாதாரண சுடிதாரில் பார்த்த பெண் இன்று புடவையில் வேறு ஒரு கோணத்தில் தெரிந்தாள். அவளிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்தான். வேறு எதற்கு அழகாக இருக்கிறாய் என்று எப்போது போல் சொல்லத்தான்.



எல்லோரும் ஒன்றாக ,கீழே உட்காந்து இருக்கும் போது இருவரும் திருட்டு பார்வை பார்த்தனர். நண்பர்கள் எல்லோரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர் அதில் துருவ்வையும் இணைத்துக்கொண்டனர். முதல் முதலாக இருவரும் இருக்கும் ஒரு ஃபோட்டோ. நண்பனிடம் அப்போதே வாட்ஸ்அப்ல் அனுப்ப சொல்லி விட்டாள் மித்ருதா.



இதனை எல்லாம் துருவ் கவனித்துக்கொண்டு தான் இருந்தான். அவன் பார்ப்பது தெரிந்து மித்ருதா எதையும் மறைக்க நினைக்கவில்லை. அவன் பார்வையில் தான் அவள் வேணும் என்றே இருந்தாள். அவளுக்கு அது பிடித்து இருந்தது. சாப்பிட அனைவரும் ஒரே வரிசையில் அமரலாம் என பேசி வைத்துக்கொண்டு சாப்பிடும் இடம் நோக்கி சென்றனர். பெண்கள் முதலில் அமர்ந்து விட்டனர். மித்ருதா கடைசியில் அமர்ந்து இருப்பதால் அவள் பக்கத்தில் இருந்து ஆண்கள் அமர வேண்டும்.



மித்ருதா மனதில் துருவ் முதலில் கை கழுவி விட்டு வந்து அருகில் வேண்டும் என ஆசை கொண்டது. அவள் ஆசை பட்டது போலவே துருவ் தான் முதலில் வந்தான். அவனும் அவளை பார்த்து சிரித்துக்கொண்டு நடந்து வந்தான் அவள் எதிர்பார்ப்பு புரிந்து.



அப்போது சரியாக அவர்கள் வகுப்பு தோழி மித்ருதா அருகில் வந்து அமர்ந்துவிட்டார் விட்டாள். இருவருக்கும் ஏமாற்றமாக போய் விட்டது. அது இருவர் முகத்தில் தென்பட்டது. வேறு வழி இல்லாமல் துருவ் அந்தப் பெண் அருகில் உட்காருவது போல் ஆகி விட்டது. மித்ருதாவுக்கு இதனை பார்த்ததும் உள்ளே பறந்த பட்டாம்பூச்சி எல்லாம் வயிறு எரிந்ததில் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.



அவள் சரியாக உண்ணவில்லை. பாதியில் எழுந்து போய் விட்டாள். அவள் போன உடன் பின்னாடியே போனால் கவனத்தை ஈர்க்கும் என்பதால் துருவ் அமைதியாக இருந்தான்.



நித்யாவிடம் சொல்லிவிட்டு ஒருவர் பின் ஒருவராக கிளம்பினர். சில பெண்களுக்கு அண்ணன், அப்பா என கூப்பிட வந்தனர். சிலர் அவர்கள் பாய்பிரண்ட் உடன் கிளம்பினர். மித்ருதா தனித்து விடப்பட்டாள்.





நித்யவிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என மித்ருதா வர, அவள் எப்படி வீட்டுக்கு போகிறாள் என அவள் நலன் கருதி கேட்டாள். மித்ருதா தான் பார்த்துக் கொள்வதாக சொல்ல நித்யா சமாதானம் அடையவில்லை. இவர்களை துருவ் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். மித்ருதாவிடம் பேச இதை விட சரியான சந்தர்ப்பம் அமையாது என்பதால் அவனும் கிளம்புவதாக சொல்ல அவர்கள் அருகில் சென்றான்.

l

நித்யா - நீ எப்படி டி தனியா போவ? இரு நான் யாரையாச்சும் துணைக்கு அனுப்புறேன்



மித்ருதா - நான் என்ன குழந்தையா? எனக்கு தனியா போக தெரியும். வெளிய ஆட்டோ இருக்கு டி நான் பாத்துக்கிறேன். நீ உன்னோட நாள்ல என்ஜாய் பண்ணு.



அப்போது துருவ் வர…





துருவ் - சரி நித்யா, நான் கிளம்புறேன். பெஸ்ட் விஷெஸ் ( Best wishes ) பாய்…



நித்யா - தேங்க்ஸ் துருவ் அண்ணா. ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? பிளீஸ்



இதற்கு தானே வேணும் என்றே வந்தான். அவள் என்ன சொல்ல போகிறாள் என தெரிந்தும் தெரியாதது போல்



துருவ் - என்ன சொல்லு நித்யா? என்றான் ஏதோ எதிர்பார்ப்புடன்.



மித்ருதா இதனை சந்தேகமா பார்த்தாள்.



நித்யா - அது மித்ருதா தனியா வீட்டுக்கு போற மாதிரி ஆகிடுச்சு. அவளை வீட்ல விட்டுற முடியுமா? பிளீஸ்.



மித்ருதா - இருக்கட்டும் நித்யா. நான் தனியா போயிடுவேன்.



துருவ் அவளை லேசாக முறைத்து பார்த்தான். அவன் பார்வையிலேயே அர்த்தத்தை உணர்த்தினான். சாம்பலான பட்டாம்பூச்சி மீண்டும் பறக்க ஆரம்பித்தது. இருவரும் மாலில் பேசியது உண்டு தான் ஆனால் அது பொது இடம். இப்போது இருவரும் மட்டும் ஒரு பயணம்… இனிப்பாக இருந்தது.



நித்யா - பிளீஸ் உன்ன தனியா அனுப்பிட்டு நான் நிம்மதியாக இருக்க மாட்டேன் மித்ருதா. பிளீஸ் அவரு கூட போ. நம்மளுக்கு நல்லா தெரிஞ்சவங்க தான



சரி என தலையை அசைத்தான்.



துருவ் - சரி நான் கார்ல வெயிட் பண்றேன் என முன்னே சென்று விட்டான்… சொல்லும் முன் மித்ருதாவைப் பார்த்து லேசாக கண் சிமிட்டிவிட்டு சென்றான்.



மித்ருதா ஆட்டோவில் செல்ல போகிறதாக தான் நினைத்தாள். ஆனால் கார் என்றதும் இன்னும் கொஞ்சம் படப்படப்பாக இருந்தது. துருவுக்கும் அதே உணர்வு தான். அவன் காரில் ஒரு பெண்… அதுவும் பிடித்த பெண் அருகில் இருக்க போகிறாள் எனவே கொஞ்சம் பதற்றமாக இருந்தது. ஆனால் என்ன பேச போகிறோம், அவள் என்ன சொல்லுவாள் என தெரிந்து கொள்ள ஆர்வாக இருந்தது.



மித்ருதா பார்கிங் வர துருவ் … அவன் கார் முன் நின்றுக்கொண்டு இருந்தான். அவள் அருகில் வர வர அவன் பார்வை ரசனையான மாறியது.



கல்யாண வீட்டுக்கு கிளம்பி இருக்கும் போது இருக்கும் அழகு திரும்பி போகும் போது பாதியாக குறைந்து இருக்கும். அதே போல் லேசாக புடவை கசங்கி, நெற்றியில் வைத்த குங்குமம் கொஞ்சம் அழிந்து, முடி கலைந்தது தான் இருந்தது மித்ருதாவுக்கு. ஆனால் துருவ் இவளை தான் சைட் அடித்துக்கொண்டு இருந்தான்.



கார் கதவில் சாய்ந்து நின்று கொண்டு, அவள் அருகில் வந்ததும் எதுவும் சொல்லாமல் ரசனை பார்வை தான் பார்த்தான்… அவன் பார்வையின் தாக்கம் ஏதோ செய்தது. அதில் இருந்து தப்பிக்க





மித்ருதா - போகலாமா துருவ் . நேரம் ஆச்சு.



அவன் கேட்டதுக்கு பதில் சொல்லாமல்



துருவ் - பூ எங்க மித்ருதா. கல்யாண வீட்டுக்கு வர்ரவங்களுக்கு பூ கொடுப்பாங்களே. நீ ஏன் வைக்கல? என்று கேட்டான் அது தான் முக்கியம் என்பது போல்.



அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதை கூட அவன் தன்னிடம் கவனித்தானா என்று யோசிக்க தான் தோன்றியது. அவள் எதுவும் பேச முடியாமல் திணற



துருவ் - இரு ஒரு நிமிஷம்.. நான் வர்றேன் என்றவன் வேகமாக ஒரு கார் அருகில் சென்றான்.



அது மாப்பிளை, பொண்ணுனுக்கு ரெடி செய்து வைத்த கார். அதில் நிறைய பூக்கள் இருக்க… சிகப்பு ரோஜா ஒர்றை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தான். அவன் செய்கை எல்லாம் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருந்த மித்ருதா… அவன் கையில் பூ வந்து கொடுத்தும் வாங்காமல் கண் இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.



அவள் சிலையா இருக்க… அவள் தலையில் அவன் சூடி விட்டு முன்னாடி வந்து பார்த்து திருப்தியாக புன்னகை செய்தான்.



துருவ் - இப்போதான் மித்ரா ரொம்ப அழகா இருக்க. வா கார்ல ஏறு.



இவன் உரிமையாக பேசுவது, பண்ணுவது எல்லாம் விசித்திரமாக இருந்தது. நட்பாக அளவாக இருந்தவன்… தீடீரென்று உரிமை எடுப்பது நல்லதா கெட்டதா என்றே குழப்ப ஏற்ப்பட்டது.



மித்ருதா ஏறுவதற்கு முன்னாடி சீட் கார் கதவை திறந்து விட்டான். கதவை மூடும் முன்… புடவடை முந்தானை கதவில் சிக்குவது போல் இருக்க… அதனை அவனே எடுத்து அவள் மடியில் வைத்துவிட்டு டிரைவர் சீட்டில் வந்து அமர்ந்தான். அவன் அதனை சாதாரணமாக தான் செய்தான். மித்ருதா மனதில் அவனை ஏற்கவா வேண்டாமா என்ற சிந்தனை ஓடியது. ஆனால் மனதில் எல்லாம் அவன் செய்கையை ரசிக்க தவறவில்லை. கார் ஸ்டார்ட் செய்து புறப்பட்டனர்.



ஹைவே (Highway) ரோட்… வண்டிகள் எல்லாம் வேகமாக சென்று கொண்டு இருந்தது. சூரியன் முழுதாக மறைந்து நிலவு மட்டுமே தென்பட்டது. ஹாரன் சத்தம் மட்டுமே சுற்றிலும் கேட்டது. வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தினான்.



துருவ் - என்ன ஆச்சு மித்ரா? என்ன யோசிகிட்டு இருக்க?



மித்ருதா - அது வந்து துருவ் … ஏ.. ஏன் இது எல்லாம் பண்ற? என்று நேராக விஷயத்துக்கு வந்தாள்.



துருவ் - ஏன்னா, என்ன சொல்றது. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் அதான்…. என்றான் மனசை மறைக்காமல்.



மித்ருதாவுக்கு இது தெரிந்த ஒன்று தான். ஆனால் ஏதோ ஒரு அவள் மனசை போட்டு குழப்பியது. அது என்ன என்று அவளுக்கே தெரியாத போது அவனிடம் எப்படி சொல்ல..



அவள் எதுவும் பதில் பேசாமல் இருப்பது துருவுக்கு கஷ்டமாக இருக்க… தான் அவள் மனதை தவறாக புரிந்துகொண்டோமோ… அவள் மனதில் அது மாதிரி எண்ணம் இல்லையா என்ற சந்தேகம் வந்தது.



துருவ் - என்ன மித்ரா ஒன்னுமே பதில் சொல்லல… உனக்கு என்ன பிடிக்கலையை? என்றான் வேதனையான குரலில்



மித்ருதா - துருவ் என்ன இப்படி கேக்குற? எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இது ரொம்ப சீக்கிரமோனு தோணுது அவ்ளோதான்… என அவளும் வெளிப்படையாகவே பேசினாள்.



இதனை கேட்ட பின் தான் துருவ் மனம் அமைதியானது.



துருவ் - மித்ரா, எனக்கு புரியுது. விதிப்படி நம்ம காதல் சொன்னது சீக்கிரமா இருக்கலாமா.. ஆனா மத்தது எல்லாமே நீ படிப்பை முடிச்ச அப்புறம் தான்.



அவன் கூற்றை கேட்டது… வெட்கப்பட்டு ஜன்னல் புறம் முகத்தை திருப்பிக்கொண்டாள். காதல் என்ற வார்த்தை அவர்களுக்கு அங்கு தேவை படவில்லை. ஒருவருக்கொருவர் மனதில் உள்ளதை அவர்களாகவே புரிந்து கொண்டனர்.



அப்போது துருவ் அவன் சொன்னது திரும்ப நினைத்துப் பார்க்க… சத்தம் சிரித்து விட்டான்.



துருவ் - மத்தது எல்லாம்னா நான் அந்த அர்த்தத்துல சொல்லல மா. அதாவது இந்த ஊரு சுத்துறது, விடிய விடிய பேசுறது, காதல் அப்படின்ற பெயர்ல எல்லை தாண்டி போறது சொல்றேன். நம்ம முதல்ல நம்ம படிப்பை பார்க்கலாம். சரியா?



அவன் மனசு தான் எவ்வளவு வெள்ளை. இவன் கிடைக்க கண்டிப்பாக கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சம்மதமாக தலையை அசைத்தாள்.



சமயம் கிடைக்கும் போது எல்லாம் எல்லை தாண்டி உரிமை எடுக்கும் ஆண்கள் மத்தியில் இவன் வித்தியாசமாக தெரிந்தான். தான் ஒரு நல்ல ஆண்மகனை தேர்வு செய்து இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டாள்.



கார் வேறு பாதையில் செல்வதை மித்ருதா கவனித்தாள் ஆனால் ஒன்றும் அவனிடம் கேட்கவில்லை. துருவுக்கு அவள் கேட்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்க…





துருவ் - என்ன மா… கார் வேற வழியில போறது பத்தி ஒன்னுமே கேட்கவே இல்லை?



மித்ருதா - நீ தான் என்ன பாதுகாப்பாக பாத்துக்குவேன்னு சொல்லிருக்கியே துருவ் . அப்புறம் எதுக்கு நீ வேற வழியில கூப்டு போனா யோசிக்கணும். கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு தெரியும்.



துருவ் - என் மேல உனக்கு இவ்வளவு நம்பிக்கையா? என உண்மையான ஆச்சரியத்தில் கேட்டான்.



மித்ருதா - ஆமா துருவ் . நீ என்ன காயப்படுத்த மாட்டானு எனக்கு தெரியும் என அவன் மேல் இருக்கும் அபாரமான நம்பிக்கையில் சொன்னாள்.



அவள் வெகுளியாக சொல்லிவிட்டாள். ஆனால் கேட்ட துருவ் தான் அசையாது அமர்ந்து இருந்தான். அவள் அவன் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை பெரியது. அதை கடைசி வரையில் காப்பாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டான்.



துருவ் - நம்ம சாப்பிட போய்ட்டு இருக்கோம். ஊருக்குள்ள இருக்குற ஹோட்டல்னா தெரிஞ்சவங்க இருக்க வாய்ப்பு இருக்கு. இது ஊருக்கு கொஞ்சம் தள்ளி இருக்கிற தாபா. அங்க போகலாம் சரியா?



மித்ருதா - துருவ் , நம்ம கல்யாண வீட்ல சாப்பிட்டோம் அப்புறம் ஏன் திரும்ப ஹோட்டல்ல சாப்பிடணும்



துருவ் - நீ சாப்பிட்டது தான் நான் பார்த்தேனே? எதையும் வைக்க வந்தா வேண்டாம் வேண்டாம் சொல்லிட்டு… என்றான் சலிப்பாக.



மித்ருதா - அது…. எனக்கு பசிக்கல அதான்



துருவ் - ஹம், அப்படியா? யாரோ வேற எதையோ எதிர்பார்த்து போல தெரிஞ்சது. அது கிடைக்கலனு சோகத்துல சரியா சாப்பிடலையோனு நினைச்சேன்.



மித்ருதா எதுவும் பேசாமல் ஜன்னல் புறம் திரும்பி விட்டாள். அவன் சொல்லுவது உண்மை தான. அவன் பக்கம் திரும்பாமல்..





மித்ருதா - உண்மை தான் துருவ் . என் பக்கத்துல நீ வருவனு நினைச்சேன்





அவள் ரொம்ப மென்மையாக இருப்பதாக தோன்றியது. அருகில் அமராதது எதிர்பாராத ஒன்று அது அவளை இவ்வளவு பாதித்ததா என்று நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.



துருவ் - மித்ரா மா, நான் உன் கூடவே தான் இருப்பேன் சரியா? உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன்



அவன் வார்த்தை அவள் மனதில் அப்படியே பதிந்து போனது. எவ்வளவு ஆழம் என இருவரும் உணரவில்லை.



அன்று பார்த்து அந்த தாபாவில் பெரியதாக கூட்டம் இல்லை. அவளுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து கொடுத்தான்.



மித்ருதா - துருவ் , நீ எதுவும் சாப்பிடலையா? எனக்கு மட்டும் வாங்கி கொடுத்திருக்க



துருவ் - நான் அங்கேயே சாப்டேன். நீ எழுந்து போற அப்போ நானும் வந்து இருந்தா, சிலர் அதை கவனிக்க வாய்ப்பு இருக்கு அதான் சாப்பிட்டு தான் வந்த வந்தேன். நீ நல்லா சாப்பிடு



மித்ருதா - சரி ஓகே, இந்தா இந்த ஒரு வாய் வாங்கிக்கோ என ஊட்டி விட்டாள். முதல் முதலில் அவள் கையால் உணவு, ஆசையாக வாங்கிக்கொண்டான்.



பின் வீட்டுக்கு அவள் வழி சொல்ல, கொஞ்சம் தூரம் முன்பு இறக்கி விட்டான். அவள் எப்படி அந்த காரில் ஏறினாலோ அதே போல் இறக்கியும் விட்டான். எந்த ஒரு தொடுகையோ, ஆபாச பார்வை எதுவும் இல்லை. உணர்ச்சி தூண்டும் காதல் வார்த்தை எதுவும் இல்லாமல் அன்பால் மட்டுமே அவள் மனதில் இடம் பிடித்தான்.

இரவு நேரம் ஒரு பெண், ஆணோடு தனியே எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் வருவது இந்த காலத்தில் அதிசயம் தான்.



பழைய படி காலேஜ் உள்ளே எந்த ஒரு காதல் பார்வை பார்க்காமல் கண்ணியமாக இருந்தனர். ஃபோனில் மட்டும் அவ்வபோது பேசுவது உண்டு. அவள் படிப்பில் இன்னும் முன்னேற நன்றாக உதவி செய்தான். ஆசானாக இருந்து நன்மதிப்பு எடுக்க உறுதுணையாக இருந்தான். இடையில் ஒரு நாள் இவர்கள் காதலை நித்யாவிடம் மட்டும் சொன்னாள். மற்றவர்களிடம் இருந்து இவர்களின் காதல் ரகசியமா வைக்கப்பட்டது இறுதி ஆண்டு வரை.



இதில் இருவரும் அவர்கள் முதல் முத்தம் கல்யாணம் பரிசாக சேமித்து வைத்தனர்.





அவர்கள் படிப்பை முடித்த சமயம்… மித்ருதா வீட்டில் இவளுக்கு சொல்லாமல் மாப்பிளை வீட்டில் சம்மந்தம் பேசி விட கேட்ட உடன் அதிர்ச்சியாகி விட்டாள்.
 
Top