அன்று மதியம் டிரெயின்… காலையில் எல்லாம் பேக் செய்துவிட்டாள். ஒரு வாரம் பின் தான் வருவாள் எனவே கல்லறைக்கு கிளம்பி விட்டாள்.
அன்னைக்கு பார்த்து கொஞ்சம் வெயில் நன்றாகவே அடித்தது. துருவுக்கு பிடித்த ஆர்க்கிட் மலர்களை பறித்துக்கொண்டு கல்லறை வந்து சேர்ந்தாள்.
மித்ருதா மனதில் “ துருவ் , ஒரு வாரம் காட்டேஜ் புக் பண்ணி வேற ஊருக்கு போறேன். போய்ட்டு சீக்கிரம் வந்துருவேன். அது வரைக்கும் வெயிட் பண்ணு. எனக்கும் இந்த சூழ்நிலையில் இருந்து ஒரு சின்ன ப்ரேக் வேணும் அதான்…. “ இன்னும் சில பல பேசிக்கொண்டு இருந்தாள். இடையில் வெயில் வேறு கொளுத்த வேர்க்க வேறு செய்தது. அதையும் பொருட்படுத்தாமல் கல்லறை மேல் அமர்ந்து இருந்தாள்.
இதனை எல்லாம் துருவ் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். மேலே இருந்து துருவ் “ பாத்து போய்ட்டு வா மித்ரா மா. சாரி என்னால உன் கூட வர முடியல ஆனா நான் உன்ன பார்த்துக்கிட்டே தான் இருக்கேன். உன்ன நீயே நல்லா பாத்துக்குவ எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. ஏன்னா என்னோட மித்ரா அவ்வளவு ஸ்ட்ராங் வுமன். நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு தான் இருப்பேன் “ என மேலே இருந்து அவன் பேசிக்கொண்டு இருந்தான்.
இருவருக்கும் அவரவர் பேசுவது கேட்காது இருந்தும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது தான் கவனித்தான் அவள் அந்த வெயிலில் அமர்ந்து இருப்பது. கஷ்டமாக இருக்க… உடனே ராஜா ராணியை கூப்பிட்டான்.
இது வரைக்கும் அவனாக எதற்கும் அவர்களை அழைத்தது இல்லை எனவே விரைவாக வந்தனர். ‘ என்ன ‘ என்று அவர்கள் கேட்ட… மித்ருதா வெயிலில் அமர்ந்து இருப்பதாகவும் அதற்கு அவர்களால் முடிந்த உதவி செய்யும் வாரு கேட்டான்.
ராணி - நீ வருத்த படாத துருவ் . இப்போ பாரு… என அவள் சொடுக்கிட… கொளுந்து எரிந்த சூரியன் முன் ஒரு பெரிய மேகம் வந்து மறைத்தது போல் வந்ததும் வெயிலில் தாக்கம் நொடியில் இல்லாமல் போனது.
பேசிக்கொண்டு இருந்த மித்ருதா மேலே வானத்தை அனார்ந்து பார்த்தாள். இப்படி நொடியில் நடந்தது விசித்திரமாக இருக்க… அதை பற்றி பெரிதும் நினைக்காமல் துருவிடம் விடை பெற்று கிளம்பிவிட்டாள். அவள் வீடு செல்லும் வரையிலும் சூரியனை மறைத்து மேகம் விலகாமல் இருந்தது.
மேலே துருவ் அவனால் முடிந்தது செய்ததும் தான் நிம்மதியாக இருந்தது.
துருவ் - ரொம்ப தேங்க்ஸ். இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா. நான் செத்த அப்புறம் மித்ருதாவுக்கு ஒரு விஷயம் பண்ணிருக்கேன்னா அது இது தான்.
ராணி - எதுக்கு தேங்க்ஸ் சொல்ற துருவ் . அதுக்கு பதில் நீ ஒன்னு செய்யனும். செய்வியா?
ராஜா ராணி அவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்க. துருவ் அவர்களை குழப்பமாக பார்த்தான். அவர்களிடம் ஏதோ ரகசியம் இருப்பது போல் தோன்றியது.
மித்ருதா எல்லாம் பேக் செய்துவிட்டு டிரெயின் ஏற இரயில்வே ஸ்டேஷன் வர ஆட்டோ கூப்பிட்டு இருந்தாள். அவள் போகும் போது ரோட்டில் ஒரு ஆம்புலன்ஸ் இவர்களை தாண்டி சென்றது. ஏதோ அவசரநிலை போல்.. ஒலியை வைத்து அறிந்துக்கொண்டாள். அந்த முகம் தெரியா நபருக்காக கடவுளிடம் வேண்டினாள்.
பின், இரயில்வே ஸ்டேஷன் வர. ஏற்றி விட சுபா, அஷோக் துணைக்கு வந்து இருந்தனர். டிரெயின் வரும் வரை பேசிக்கொண்டு இருக்க… அப்போது மித்ருதா
மித்ருதா - அது இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் எப்போ நல்ல செய்தி சொல்ல போறீங்க?
சுபா, அஷோக் அவள் கேள்வியில் திருதிருவென முழித்தனர்.
மித்ருதா - என்ன எனக்கு தெரியாதுன்னு நினச்சீங்களா?... நான் எப்பவோ கண்டுபிடிச்சிட்டேன்.
சுபா - சாரி மித்ருதா, வேணும்னு எல்லாம் சொல்லாம இல்லை. வீட்ல சொல்லிட்டு சொல்லலாம்னு தான்… என இழுத்தாள்.
மித்ருதா - வீட்ல சொல்லுறதுக்கு முன்னாடி ப்ரெண்ட்ஸ் கிட்ட தான சொல்லுவாங்க என கேட்டவளின் குரலில் வலி இருந்ததோ… உடனே அதை சரி செய்துவிட்டாள்.
அஷோக் - சாரி மித்ருதா, சுபா கிட்ட அன்னைக்கே சொல்ல சொல்லி சொன்னேன். எதுக்கு வீட்டில சொல்லிட்டு சொல்லலாம்னு தான்….
கஷ்டத்தில் துணையாக இருந்தது இந்த இருவரும் தான். அவர்கள் சேர்ந்து இருப்பது மித்ருதாவுக்கு சந்தோசம் தான் ஆனால் இவர்கள் காதல் விவரத்தை ஒரு தோழியாக அவளிடம் சொல்லாமல் விட்டது கஷ்டமாக இருந்தது. காதல் என்று வந்துவிட்டால் ரகசியம் என்பது தானாக வந்து விடுகிறது என நினைத்துக்கொண்டாள். என்ன இருந்தாலும் அவள் ஒரு தனி மனுஷி என்பதை இந்த நிகழ்வு நன்றாக புரிய வைத்தது. யாரிடமும் எதையும் எதிர்பார்க்க கூடாது என்பதை உணர்ந்தாள்.
மித்ருதா - ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் விளையாட்டுக்கு தான் கேட்டேன். நீங்க சேர்ந்து இருந்தாலே எனக்கும் சந்தோசம் தான் என சொல்லும் போதே டிரெயின் வரும் சத்தம் கேட்டது.
உடனே லக்கேஜ் எல்லாம் எடுத்து டிரெயின் ஏற தயாராகி விட்டாள். டிரெயின் வர… அதில் ஏறும் போது அஷோக் லக்கேஜ் எடுத்துகொடுத்து உதவி செய்ய வர… நாசுக்காக அவளே எடுத்துக்கொண்டு ஏறினாள். ‘ யாரிடமும் எதையும் எதிர்பார்க்க கூடாது என்று எடுத்த முடிவை அப்போதில் இருந்தே பின் பற்றினாள் ‘.
கை அசைத்து அவர்களிடம் இருந்து விடை பெற்று கிளம்பிவிட்டாள். பயணத்தில் பாட்டு கேட்டுக்கொண்டு செல்லலாம் என இயர் ஃபோன் எடுத்து பிடித்த பாடல் போட…ஆனால் சிந்தனை எல்லாம் அஜய் கூறிய விடயத்தில் தான் பயணித்தது.
‘ அவன் சொல்லுவது போல் மாற்றம் தேவை தான். ஆனால், நிரந்தரமாக என்னால் துருவ் விட்டு இருக்க முடியுமா? அவர்கள் வீட்டில் இருந்தால் தினமும் கல்லறைக்கு சென்று அவனை பார்ப்பாள்… ஆனால் வேறு ஊருக்கு சென்று விட்டால் ??!!! ‘ நினைக்கும் போதே இதயத்தில் வலியை உணர்ந்தாள்.
‘ இந்த ஒரு வாரம் முயற்சி செய்து பார்க்கலாம் அதில் வெற்றி கண்டால்.. அடுத்து அஜய் சொன்னதை பற்றி மேலும் முடிவு எடுக்கலாம் ‘ என விட்டு விட்டாள். இதில் அவள் உணராத விஷயம் முடிவு எடுக்க பயமாக இருந்தது எனவே அவள் மனது அவளை ஏமாற்றி முடிவு எடுக்கும் காலத்தை தள்ளி போட்டது. எதையும் உணராமல் அமர்ந்து இருந்தாள் மித்ருதா.
அவள் இறங்கும் இடம் சுற்றுலா பயணிகள் வந்து போகும் பொதுவான இடம் தான். எனவே அவள் இறங்கும் போது இரவாக இருந்தாலும் ஆள் நடமாட்டம் இருந்தது. புக் செய்த காட்டேஜ்ல் இருந்தே கார் அனுப்பி இருந்தனர்.
அவளும், துருவும் வாழ்ந்த ஊரை விட இது மிகவும் குளிராக இருந்தது. இரண்டு அடுக்கு ஸ்வெட்டர் போட்டு குளிரில் இருந்து பாதுகாக்க போட்டுக் கொண்டாள். சில கிலோமீட்டர் பயணம் பின்பு அவள் புக் செய்த காட்டேஜ் வந்துவிட, காரில் இருந்து இறங்கியதும் டிரைவர்ரே அவள் பையை வாங்கி முன்னே நடந்தாள்.
மித்ருதா - அண்ணா, இருக்கட்டும் நானே எடுத்துட்டு வர்றேன்.
டிரைவர் - பரவாயில்லை மா. நான் கையில கிளவுஸ் போட்டு இருக்கேன்… நீ போடலையே.. கைய பாக்கெட் உள்ள வெசிக்கோ… இல்லைனா காட்டேஜ் உள்ள போற முன்னாடியே கை உறைந்து போயிரும் என்றார் அவர்.
அவர் சொல்லுவது சரி என்று பட நன்றி சொல்லிவிட்டு அவர் பின்னே சென்றாள்.
சுற்றிலும் பராமரிக்க பட்ட மரங்கள், கொஞ்சம் இடைவெளி விட்டு காட்டேஜ் அமைக்க பட்டு இருந்தது. அழகு செடிகள், விளக்குகள் என பார்ப்போரை கவரும் வண்ணம் இருந்தது. நேராக ரிசப்ஷன் வந்து அந்த டிரைவர் விட்டு சென்றார். ரிசப்ஷன் பெண்ணிடம் சாவி வாங்கிக்கொண்டு மீண்டும் அவளுடன் ஆன சின்ன நடைப் பயணம்.
அந்த பெண் சாப்பாடு பற்றி, வெளியில் செல்ல வேண்டும் என்றால் கேப் வசதி, விளையாட இடம் என அங்கு உள்ளதை பற்றி பேசிக்கொண்டே வந்தாள். மித்ருதா அதனை ஆர்வமாகவே கேட்டாள். இங்கு வரும் வரை ரூம் உள்ளேயே நேரத்தை செலவு செய்ய நினைத்தாள், ஆனால் அங்கு உள்ள இயற்கை ‘என்ன அழகை வந்து பாரு’ என்று அழைப்பது போல் தோன்றியது. எனவே அருகில் உள்ள இடங்களில் சுற்றி பார்க்க நினைத்தாள்.
இவர்கள் இருந்த காட்டேஜ் காட்டுக்கு அருகில் தான். அதில் முன் பாதி இடத்தில் தான் கட்டி இருந்தனர். பின் பாதி இடம் இன்னும் காடு தான் எனவே அங்கு யாரும் போகாத வாரு தடுப்பு அமைத்து இருந்தனர். அந்த பெண் , மித்ருதாவை அவள் ரூம் அருகில் விட்டு விட்டு… ஃபோன் மூலம் எது என்றாலும் தொடர்பு கொள்ள சொல்லி விட்டு சென்று விட்டாள்.
உள்ளே வந்த மித்ருதா அந்த இடத்தை நன்றாக சுற்றி பார்த்தாள். மிகவும் ஆடம்பரமாக இருந்தது. பல நாள் அப்புறம் அந்த சூழல் அவளுக்கு மன அமைதி தந்தது உண்மை தான். டிவி சும்மா துணைக்கு போட்டு விட்டு… ஃப்ரெஷ் ஆகி விட்டு சாப்பிட சென்று வந்தாள். பஃபே முறையில் இருக்க… வேண்டியதை சாப்பிட்டாள். இத்தனை நாள் ஏனோ தானோ என்று சமைத்து சாப்பிட்டது… வேறு ஒருவர் சமைத்து தரும் போது அமிர்தமாக இருந்தது.
துருவ் நன்றாக சமைப்பான். இருவரும் லீவ் நாளில் யூ ட்யூப் பார்த்து சமைத்து நேரம் செலவு செய்வர். அவன் கை பக்குவம் எப்போது அருமையாக இருக்கும்… அதனை நினைத்தவரே ரூம்ல் உட்கார்ந்து இருந்தாள்.
இது வேலைக்கு ஆகாது.. இங்கு வந்து சோகம் கீதம் பாட அல்ல என்பதால் அருகில் சுற்றி பார்க்கும் இடம் என்ன என்று பார்த்துக்கொண்டு இருந்தவள் அப்படியே துங்கியும் விட்டாள். விளக்கை அணைக்கவில்லை, டிவி ஓடிக்கொண்டு இருந்தது.. ஃபோன் ஆன் செய்து இருந்தத. எப்போது போல் அவள் கை அருகில் இல்லாத துருவ் வை தேடி துளாவியது. கையில் மாட்டியது என்னவே தலையணை தான்.
பகலில் எழுந்திருக்கும் போது அருகில் உள்ள தலையணை பார்த்து நொந்த படி கிளம்பி, சாப்பிட்டு முடித்து, அங்கு உள்ள காரில் அருகில் மலர்கள் கண்காட்சி நடக்க அதனை பார்க்க சென்றாள். அழகிய மலர்களை பார்க்கும் போது எல்லாம் துருவ் நியாபகம் தான். அவனுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும் என நினைத்துக்கொண்டாள்.
கால் போன போக்குக்கு நடக்கும் இடம் எல்லாம் அழகிய மலர்கள் தான். பல விதமான மக்களை அந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது. அதில் தேனிலவு வந்து இருக்கும் ஜோடிகளை பார்க்க கொஞ்சம் ஏக்கமாக இருந்தது. நொடியும் தாமதிக்காமல் அங்கு இருந்து கிளம்பி காட்டேஜ் வந்து விட்டாள். ரூமில் உட்கார்ந்து துருவும் அவளும் எடுத்துக்கொண்ட புகைப் படத்தை பார்த்து அழுதுகொண்டு படுத்து இருந்தாள்.
அதில் அன்று மதியமே காய்ச்சல் வந்து விட்டது. புது வானிலை, வேறு ஊரு தண்ணீர் , மணிக்கணக்காக அழுதது என எல்லாம் சேர்ந்து ஒரே நாளில் அவளை புரட்டி போட்டது. இருப்பதிலேயே மோசமான ஒன்று தெரியாத ஊரில், தனிமையில் நோய் வயப்பட்டு இருப்பது தான். அதுவும் மித்ருதாவுக்கு நடந்தது. அன்று இரவில் தூக்கத்தில் குழந்தை போல் அழுது பினாத்தினாள். முனகல் எல்லாம் துருவ் பெயர் சொல்லி தான் அழைத்தாள்.
மேலே… ராஜா ராணி அவனிடம் அவர்களுக்காக ஒன்று செய்யும் வாரு கேட்டனர். துருவ் குழப்பத்தில் இருந்தான்.. இங்கு இல்லாதது என்பது ஒன்று இல்லவே இல்லை. தான் அவர்களுக்கு என்ன செய்து விட முடியும் என எண்ணினான். எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும் ஏனெனில் அவர்கள் மித்ருதாவுக்கு உதவி செய்து இருக்கிறார்கள், அவனுக்கு உறுதுணையாக அங்கு வந்ததில் இருந்து இருப்பது அவர்கள்தான்.
துருவ் - இங்க இல்லாத விஷயமே இல்லை. அப்படி இருக்கும் போது என்கிட்ட ஒரு விஷயம் கேக்குறீங்கன்னா விஷயம் பெருசு தான். என்னனு சொல்லுங்க. கண்டிப்பா செய்வேன் என வாக்கு கொடுத்தான்.
ராணி ராஜா இருவரும் துருவ் இருபுறம் வந்து அவன் கையை பிடித்துக் கொண்டனர்.
ராஜா - அது வந்து துருவ் , நீ திரும்ப சொர்கத்துக்கு வர்ற வரைக்கும் எங்களை நீ மறக்காம இருக்கணும், செய்வியா? என கேட்டான்.