logo

ரெட் வெல்வெட் | Red Velvet | Episode - 1

Mars

Administrator
ரெட் வெல்வெட் 1

“ மாலை நேரம்; மழை தூறும் காலம்; என் ஜன்னலோரம் நிற்கிறேன்” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஸ்ருதி அவள் ரூமில் உள்ள ஸ்பீக்கரில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தாள்.


அவளின் கையோ ஃபோன் ஸ்கிரீன் ஐ கீழே தள்ளி விட்டுக்கொண்டு இருந்தது. அவ்வபோது ஃபோன் ஐ பார்த்து தனக்கு தானே சிரித்தும் கொண்டாள். ஆனால் அருகில் உள்ளவளோ ஸ்ருதியை முறைத்த படி அமர்ந்து இருந்தாள்.


ஸ்ருதி - இப்போ என்ன ஆச்சுன்னு.. மொரச்சு மொரச்சு பாக்குற?.... கையோ ஃபோன் ஸ்கிரீனில் தெரியும் மெசேஜ்க்கு டைப் செய்து கொண்டே இருந்தது.


அஞ்சனா (ஸ்ருதியின் ஆருயிர் தோழி) - அப்போ நீ ஆமானு சொல்லிட்ட??? கேட்டாள் கோவமாக.


ஸ்ருதி (அலட்சியமாக) - ஆமா அஞ்சு.. இதுலாம் இந்த காலத்துல சகஜம். சும்மா போய்ட்டு வந்துறேன்.


அஞ்சனா - ஷ்ருதி! ஏன் இவ்வளோ அலட்சியமாக இருக்க. இதுல எல்லாம் யோசிச்சு முடிவு எடுக்குறது தான் முக்கியம் என்றாள் சத்தமாக.


அவள் குரலில் ஆற்றாமை இருந்தது தோழியை நினைத்து.


ஸ்ருதி - கம் ஆன் அஞ்சு! ஏன் நீ ரொம்ப யோசிக்கிற? சக மனுசங்க மேல நம்பிக்கை வை அதுதான் நல்லது.


அஞ்சனா - எது டி நல்லது?? நீ டேட்டிங் ஆப் (dating app) ல தெரியாத ஒருத்தன் கூட நெட்பிளிக்ஸ் date (Netflix date) வர்றேன்னு சொல்லிருக்கியே அதுவா??


(Netflix date என்பது டேட்டிங் செய்யும் இருவர் ஒன்றாக Netflix show அல்லது படம் பார்த்துக்கொண்டே அந்த பொண்ணு அல்லது பையனின் வீட்டில் சாயங்காலம் அல்லது இரவு நேரம் செலவிடுவது ஆகும்)


அஞ்சனா சொல்வதை கவனிக்காமல் ஸ்ருதி ஃபோனில் கவனமாக இருக்க.. அவள் கவனத்தை திருப்ப..கையில் இருந்து ஃபோன் ஐ பறித்தாள். அதில் ஸ்ருதி கவனம் அப்போது தான் அஞ்சனா பக்கம் சென்றது. அவள் வந்து 10 நிமிடம் மேல் இருக்கும் அப்போது தான் அவள் முகத்தையே பார்த்தாள்.



ஸ்ருதி - ஏன் அஞ்சு பயப்படுற? உன் பிரென்ட் ஐ யாராச்சும் ஏதாச்சும் செஞ்சிட முடியுமா ஹான்?? என்றாள் கெத்தாக.


அஞ்சனா - நீ தைரியமான பொண்ணு தான். ஆனா அங்க பாதுகாப்பா இருக்குமா என்னனு உனக்கு எப்படி தெரியும்? அவனால உனக்கு எதுவும் ஆபத்து வந்தா?? என்றாள் கவலையாக.


ஸ்ருதி - இதுக்கு தான் பயப்படுறியா அஞ்சு பேபி. நோ ஒர்ரீஸ். ரோஹன் ரொம்ப நல்ல பையன். நான் என்ன அவன் கேட்டதும் உடனேவா ஓகே சொன்னேன். நாங்க பேச ஆரம்பிச்சு 1 வாரம் ஆச்சு. அவன் ரொம்ப ஜாலியா பேசுறான். மூவி ல நல்ல டேஸ்ட் இருக்கு. அப்புறம் எனக்கும் அவனை நேர்ல பார்க்க ஆர்வமா இருக்கு.



அஞ்சனா - அடியேய்! நீ வாழுறதே அந்த ஃபோன் ல தான். பாக்குற எல்லாமே அழகா தான் தெரியும். சரி அதை விடு. நீ ஆர்வமா அவனை போய்ட்டு பார்க்க நினைக்கியே கொஞ்சம் ஆச்சும் உன்னோட பாதுகாப்ப நினைச்சு பார்த்தியா?? நீ ஃபோன் ல பார்த்தது ஒன்னு நேர்ல பார்க்க போறது வேற வேறையா இருந்தா என்ன செய்வ??


அஞ்சனா வின் வார்த்தை எல்லாம் அவளுக்கு எரிச்சலாக இருந்தது. இன்ஸ்டா கிரம்மில் (Instagram) தான் உலகமே சுற்றி கொண்டு இருப்பது தெரியாத அறியாமை பெண் என்றே நினைத்தாள்.


ஸ்ருதி இந்த காலத்து பெண். எதையும் யோசிக்காமல் ஆர்வத்தில் என்ன என்றாலும் செய்வாள். வாழ்க்கை வாழத்தான் என்ற எண்ணம். இப்போதும் அதுவே நடக்கிறது. அவள் டேட்டிங் ஆப் இல் தொடர்பு கொண்டு பேசிய ஒரு பையனை ஒரே வாரத்தில் நேரில் சென்று சந்திக்க கிளம்பிவிட்டாள். அவளின் எண்ணமோ பார்த்து பேசி, பிடித்த படம் அவனோடு பார்த்துவிட்டு சாயங்காலம் கழித்துவிட்டு இரவின் முன் வீடு திரும்புவது. பிடித்து இருந்தால் அவனோடு இருக்கும் நட்புக்கும் காதலுக்கு இடையில் இருக்கும் உறவு தொடரும். இல்லை என்றால் அங்கேயே bye சொல்லிவிட்டு வருவது.



ஸ்ருதி - அஞ்சு! நான் எல்லாமே செக் பண்ணிட்டேன். அவன் உண்மைய தான் சொல்றான். அவன் ஒரு பால்கனில இருக்குற மாதிரி ஃபோட்டோ கூட சென்ட் பண்ணிறுக்கான். அதை பார்த்தா ஒரு நல்ல அப்பார்ட்மெண்ட் மாதிரி தான் இருக்கு. கையில ஒரு நாய்க்குட்டி கூட இருந்தது. ஹீ இஸ் இன்டர்ஸ்டிங் (He's interesting).


அஞ்சனா - அந்த நாயை அவன் வேற யாருகிட்ட இருந்தும் வாங்கி வெச்சு ஃபோட்டோ எடுத்திருக்கலாம் இல்லையா??? அதுவும் இல்லாம நாய் வெச்சு இருந்தா நல்லவங்களா???


ஸ்ருதி பேச்சை கேட்டு அஞ்சனாவுக்கு தலைவலியே வந்து விட்டது. ஆனால் ஸ்ருதி அவள் கப் போர்ட் (Cupboard) திறந்துஎன்ன உடை போடுவது என்று செலக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.


ஸ்ருதி - அவன் வேற வேற நாள் எடுத்த ஃபோட்டோ எல்லாத்துலயும் அந்த நாய் இருந்தது. அப்போ எப்படி அது வேற ஒருத்தவங்க நாய்யா இருக்கும்??!!! சரி அந்த பேச்சை விடு… நான் எந்த டிரஸ் ல அழகாக இருக்கேன்??? என ஒரு ஒரு உடையாக மேலே வைத்துக் காட்டி அஞ்சனாவிடம் கேட்டாள்.


அவ்வளவு தான் அஞ்சனா இருந்த கோவதுக்கு அங்கு இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் நகர ஆரம்பித்துவிட்டாள்.



என்ன இருந்தாலும் தோழி கோபித்துக் கொண்டு போவது பொறுக்கவில்லை ஸ்ருதிக்கு. தன் பாதுகாப்பை தான் அவள் மையமாக கருதுகிறாள் என்பது புரிந்தது. அஞ்சு பின்னாடி குட்டி போட்ட பூனை போல் ஓடினாள்.


ஸ்ருதி - அஞ்சு! அஞ்சு! பேபி! சாரி டி. அவன் இருக்கிறது அப்பார்ட்மெண்ட் தான் அதனால கண்டிப்பா செக்யூரிட்டி இருப்பாங்க. Cctv கேமரா இருக்கும். இதையும் தாண்டியா எனக்கு ஆபத்து வரும்… நீயே சொல்லு??!!.. அப்படியே வந்தாலும் பால்கனி வழியா எட்டி பார்த்து ‘ காப்பாத்துங்க! காப்பாத்துங்க !’ அப்படினு கத்துவேன் என்றாள் கடைசில வரியில் சிரிப்பை அடக்கிக் கொண்டு.


அவள் சொன்னதில் உண்மை இருக்க அஞ்சனா கொஞ்சம் சமாதானம் ஆகினாள். அவளின் கடைசி வரியின் தலையில் அடித்துக்கொண்டு


அஞ்சனா - லூசு டி நீ! சரி பார்த்து போய்ட்டு வா. சத்யம் பண்ணு ஸ்ருதி…நைட்டுகுள்ள திரும்பி வந்துரனும். ஏதாச்சும் அங்க வித்தியாசமா இருந்தா உடனே எனக்கு ஃபோன் பண்ணு புரிஞ்சுதா??!!!


ஸ்ருதி அவள் கூறுவதை காதில் வாங்கினாளா என்பது தெரியவில்லை. அவள் அஞ்சனா சரி என்றதும் கண்ணாடி முன்பு நின்று உடையை வைத்து எது சரியாக இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.



ஸ்ருதி காதில் வாங்கி இருப்பாள் என்ற நம்பிக்கையில் அவளுக்கு உடை தேர்வு செய்ய உதவி செய்தாள். ஒரு வழியாக இருவரும் சேர்ந்து ப்ளூ ஜீன், பிளாக் டாப் முழங்கை வரை இருக்கும் உடையை தேர்வு செய்தனர். முடியை அழாக சீவி ஃப்ரீ ஹெர் விட்டுக்கொண்டாள். காதில், கழுத்தில் எல்லா கண்ணுக்கு தெரியாத வாரு சின்னதாக நகை அணிந்து இருந்தாள். முகத்துக்கு மேக்கப் செய்து கடைசியாக தன்னை ஒரு முறை கண்ணாடியில் அழகு பார்த்தாள். திருப்தியாக இருக்க… அஞ்சனாவிடம் திரும்பி ‘ எப்படி இருக்கு ‘ என்று புருவத்தை உயர்த்தி கேட்க…. அவளோ சூப்பர் என்று செய்கையாள் சொன்னாள்.


அஞ்சனா - ஸ்ருதி இங்க பாரு… எதாச்சும் பிரட்சனைனா ஃபோன் பண்ணு புரியுதா??!! நீயே சமாளிக்கலாம்னு நினைக்காத… அப்புறம் முக்கியமான விஷயம்.. அவனை ரொம்ப நம்பாத என்றாள் சிறு கண்டிப்புடன்.


எல்லாத்துக்கும் நல்ல பிள்ளை போல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். அஞ்சனா அவள் பையில் இருந்து ஒரு பெப்பர் ஸ்ப்ரே (pepper spray) பாட்டீல் எடுத்து ஸ்ருதி கையில் வைத்தாள். அது கைக்கு அடக்கமாக இருந்தது.


ஸ்ருதி - இது எல்லாம் ரொம்ப ஓவர் அஞ்சு. ரோஹன் இத பார்த்தா என்ன நினைப்பான். வேண்டாம் அஞ்சு பிளீஸ் பிளீஸ் பிளீஸ். நான் தான் நைட்டு குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்ல அப்புறம் எதுக்கு இது. இதை நீயே வெசிக்கோ.


அஞ்சனா - ரோஹன் எப்படி இதை பார்ப்பான். நீ இதை உன் பாக்கெட் ல வெச்சிகோ. யாருக்கும் தெரியாது. எல்லாம் உன்னோட சேப்டிக்கு தான் டி.


விருப்பமே இல்லாமல் அதை வாங்கி ஜீன் இல் உள்ள முன்னாடி பாக்கெட்ல் வைத்துக்கொண்டாள்.


ஸ்ருதி - சரி டி. நான் போய்ட்டு வர்றேன். நீ அதுவரைக்கும் பத்திரமா இரு. நான் நைட்டு வந்துடுவேன். கேப் புக் பண்ணிட்டேன். கீழ வெயிட் பண்றாங்க. பை டி.


அஞ்சனா - சரி ஓகே. நானும் காலேஜ் வொர்க் இருக்கு பார்க்க போறேன். பை டி. சீக்கிரம் வந்திடு.


தோழிக்கு பை சொல்லிவிட்டு ரோஹனைப் பார்க்க கிளம்பிவிட்டாள்.

***
 
Top