logo

ரெட் வெல்வெட் | Red Velvet | Episode - 10 | Completed

Mars

Administrator
அஞ்சனா இவள் இருக்கும் கப் போர்ட் ஐ பார்த்ததை…. ஸ்ருதியும் கவனித்தாள். நன்றாக மாட்டிக்கொண்டது புரிந்தது. ஒரு நிமிடம் மரணம் கண் முன் தோன்றி மறைந்தது.


அஞ்சனா - ஸ்ருதி, இங்கு தான் இருக்கியா?? சொல்லவே இல்ல.. என்னோட வேலை சீக்கிரம் முடிஞ்சிருக்குமே. சரி வெளிய வா…


ஸ்ருதி எதுவுமே பேசாமல் கதவை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.


அஞ்சனா - வா டி வெளிய. உனக்காக எவ்வளவு அடி, இரத்தம் எல்லாம் சிந்திருக்கேன் பாரு…நீ இப்படி சொன்னா வர மாட்ட உன்ன என்ன பண்ணுறேன் பாரு… என்றவள் கதவை வெளியில் இருந்து திறக்க முயற்சி செய்தாள். ஸ்ருதி தன்னால் முடிந்த அளவு இறுகப்பற்றினாள்.


வெளியே இருந்து திறப்பது தான் எளிது எனவே வெற்றி பெற்றது அஞ்சனா தான்.


அஞ்சனா - வா வா வெளிய வா. உன்ன பார்த்து எவ்வளவு நேரம் ஆச்சு ஸ்ருதி. நீ என்ன தேடவே இல்லையா? உனக்கு என்ன விட மற்றவங்க பெரிசா போயிட்டாங்கலா?? என்றவள் தோழியின் கையை பிடித்து முறுக்கினாள். ஸ்ருதி வலியில் துடித்துப் போனாள்.


ஸ்ருதி - அஞ்சனா விடு வலிக்குது. பிளீஸ். ஆ ஆ ஆ….


அஞ்சனா - இப்படி தான எனக்கும் வலிச்சிருக்கும் நீ மாற்றவங்க கூட பேசுற அப்போ…


ஸ்ருதி - நீ என்ன புரிஞ்சிக்கல. என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் நீ தான். உன் இடத்துல நான் வேற யாரையும் வைக்கல. ரோஹன் என்னோட பாய்பிரண்ட் அது வேற…. இது வேற


அஞ்சனா - அது எல்லாம் எனக்கு தெரியாது. உன்னோட வாழ்க்கையில எனக்கு மட்டும் தான் இடம் இருக்கணும்…இப்போ அது இல்லை அதான் உன்ன கொலை பண்ண போறேன். நீ என்ன ரொம்ப கஷ்ட படுத்திட்ட ஸ்ருதி. நீ செத்து என்ன சமாதானம் செஞ்சியே ஆகனும்…


அவளை ஒரு தள்ளு தள்ளி விட்டு கீழே ஓடி வந்தாள் ஸ்ருதி. பின்னாடியே அஞ்சனா துரத்திக்கொண்டு வந்தாள்.


மாடியில் இருந்து இறங்கி வெளியே ஓடப்பார்க்க… அஞ்சனா வீசிய கத்தி ஸ்ருதி முதுகில் நன்றாக சொருகியது. ஸ்ருதி நிலைகுழைந்து தரையில் விழும் போது ரோஹன் வந்து தாங்கிப்பிடித்தான்.


போலீஸ் விரைந்து வந்து அஞ்சனாவை கைது செய்தனர்….


ஆம்புலன்ஸ் வர வைத்து ஸ்ருதியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அவ்வளவு நேரம் கொடூரமாக நடந்துகொண்ட அஞ்சனா அப்போது தான் சாந்தமானாள். போலீஸ் அழைத்து செல்லும் போது கத்தவில்லை, திமிறவில்லை.


ரோஹன் மனம் பாரமாக இருந்தது. அவள் தன்னை பார்க்க வந்தது தான் தப்பு. அதனால் தான் இவ்வளவும் நடந்தது என குற்ற உணர்வில் இருந்தான்.


ஸ்ருதிக்கு காயம் கொஞ்சம் ஆழம் என்றாலும் சிகிச்சைக்கு பிறகு நன்றாகவே இருந்தாள். முழிப்பு வந்ததும் ரோஹனை தான் தேடினாள். அருகில் உள்ள சாரில் அமர்ந்து இருந்தான்.


ஸ்ருதி - சாரி ரோஹன். எல்லாமே என்னால தான்..

உனக்கு இவ்வளவு கஷ்டம் என்று அழுது மன்னிப்பு கேட்டாள்.


ரோஹன் - நீ ஏன் சாரி சொல்லுற ஸ்ருதி. நான் தான் உன்ன சரியா பார்த்துக்கல. என் வீட்டுக்கு நம்பி வந்த உன்ன பத்திரமா அனுப்பி வைக்கிறது என்னோட கடமை தான. ஆனா நான் அதை பண்ணல சாரி ஸ்ருதி என்றான். அழுதிருப்பான் போல் கண்கள் சிவப்பாக இருந்தது.


அப்போது ஒரு போலீஸ் அதிகாரி வந்து ரோஹனை வந்து அழைத்து சென்றுவிட்டார். அவனிடம் நடந்ததை எல்லாம் கேட்டு வாங்கிக்கொண்டனர். மேலும் இங்கு இருக்க கூடாது வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என்றனர். ஸ்ருதி வீட்டுக்கும், அஞ்சனா வீட்டுக்கும் தகவல் கொடுத்தனர்.


மீண்டு உள்ளே வந்த ரோஹன்


ரோஹன் - ஸ்ருதி, நான் கிளம்புறேன். கேஸ் ஆனதுனால கிளம்ப சொல்லிட்டாங்க. உங்க வீட்ல இருந்து கொஞ்சம் நேரத்துல வந்துடுவாங்க. போலீஸ் பாதுகாப்புக்கு இருக்காங்க. பயப்படாம இரு. நான் வர்றேன்.


ஸ்ருதி - சரி ரோஹன். சாரி என்றாள் மீண்டும்.



இருவரும் திரும்பவும் சந்திப்பதை பற்றி பேசுவதை கவனமாக தவிர்த்தனர். முதல் சந்திப்பில் தான் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்க… மீண்டும் சந்திப்பது பற்றி பேசவில்லை. சிறு சிரிப்புடன் அவளிடம் இருந்து விடைபெற்று கிளம்பிவிட்டான்.


இவ்வளவு ஆன பின்பும் அவள் மீண்டும் பேசமாட்டாள் என்று நினைக்கும் போது மனம் வலித்தது.


ரோஹன் அவன் கார் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். ஸ்ருதியுடன் பேசி சிரித்தது எல்லாம் நினைவில் வந்தது. அப்போது தான் மனித உடல் பாகங்கள் போல் இருக்கும் கேக் பார்த்து பயந்தது என்றும் அவனுக்கு மறக்க முடியாத தருணம். அவனின் படைப்பை எண்ணி பெருமையாக இருந்தது. அப்போது தான் காம்படிசன் நியாபகமே வந்தது.


இன்று வீட்டில் இருந்தால் நேற்றைய நியாபகம் தான் வரும் எனவே போட்டியில் கலந்துக்கவே எண்ணினான். விடியக்காலை ஆகி விட்டது இனிமேல் என்ன தூக்கம்… போட்டியில் கலந்துக்க தயாராக சென்றான்.


அஞ்சனாவை பாதுகாப்பில் வைத்து இருந்தனர். அவள் அமைதியாகவே காணப்பட்டாள்.


நாட்கள் கடந்த நிலையில்… ஸ்ருதி உடல் நலம் நன்றாக தேறி இருந்தாள். நடந்த சம்பவம் கொஞ்சம் மனதை பாதித்தது எனவே ஒரு வாரம் கவுன்சிலிங் சென்று வந்தாள். ரோஹன் அந்த போட்டியில் வெற்றி பெற்றான். பின் அவன் வேலை வீடு என இருவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர்.


இந்த இடைப்பட்ட காலத்தில் இருவரும் பேசவில்லை. ஸ்ருதி மருத்துவமனையின் இருந்து வந்த உடன் முதல் செய்த வேலை அந்த டேட்டிங் ஆப் ஐ டெலீட் செய்தது. அவனும் அவளை மேலும் கஷ்ட படுத்தக்கூடாது என்பதால் அவளாக பேசினால் பேசலாம் இல்லை எனில் அவள் சந்தோசமாக இருக்கட்டும் என்று தேற்றிக்கொண்டான்.


ஸ்ருதி இப்போது வேறு ஒரு வீட்டுக்கு மாறி விட்டாள். அங்கு அவளுடன் சேர்ந்து இன்னும் இரு தோழிகள் இருந்தனர். இவர்களின் கதை அங்கு பல பேருக்கு தெரியாது எனினும் ஸ்ருதியின் தோழி இருவருக்கும் தெரியும். அவளை நன்றாகவே பார்த்துக்கொண்டனர்.


அந்த அபார்ட்மெண்ட் இல் வேலை பார்க்கும் செக்யூரிட்டிக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்தனர். அன்று நடந்ததில் ஒரு பங்கு அவரின் அலட்சியமாக கூட இருக்கலாம். வேலை நேரத்தில் சரியாக வேலை பார்த்து இருந்தால் நடந்த சம்பவத்தில் பாதி குறைக்க பட்டு இருக்கும்.


கோர்ட் உத்தரவுவின் படி அஞ்சானவுக்கு மனோதத்துவ டாக்டர் ஐ அணுக செய்தனர். அவள் குணமாகிவிட்டாள் என்று அவர்கள் கூறும் வரை அவளை கண்காணிப்பில் தான் வைத்து இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.


நாட்கள் அதான் போக்கில் சென்றது…. மாதங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் ஸ்ருதியிடம் இருந்த ரோஹனுக்கு ‘ ஹலோ ‘ என்ற மெசேஜ் வந்தது.


மனதில் அளவுகடந்த சந்தோசம். அவள் தன்னை கடந்து சென்றுவிட்டாள் என்றே எண்ணிக்கொண்டு இருந்தான். ஆனால் அவளின் மெசேஜ் எதிர் பார்க்காத ஒன்று. இவனும் பதிலுக்கு “ ஹாய் “ என்று அனுப்பினான்.



அன்று போல் இன்றும் நேரில் சந்திக்கலாமா என்று கேட்டது ஸ்ருதி தான். இவனா வேண்டாம் என்று சொல்லுவான் உடனே சரி என்றுவிட்டான். அதே போல் மாலை ரோஹன் வீட்டில் சந்திக்கலாம் என்று முடிவானது.


சந்திக்கும் நாலும் வந்தது. அழகாக கிளம்பி கேப் புக் செய்து ரோஹன் இருக்கும் அபார்ட்மெண்ட் வந்து இறங்கினாள். லிஃப்ட் இல் வரும் போது எல்லாம் அன்று நடந்த நிகழ்வு நிழல் போல் கண்முன் வந்தது. அதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு ரோஹன் வீட்டுக் கதவை தட்டினாள்.


கதவு வேகமாகவே திறக்க பட்டது. ரோஹன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.


ரோஹன் - ஸ்ருதி, எப்படி இருக்க??? உள்ள வா.. உள்ள வச்சு பேசலாம்.. வா


உள்ளே வரும் போது கவனித்தாள் டோர் மேட் வேற மாற்றி இருந்தான். முதல் முறை வந்த போது இது கால் தடுக்கி விட்ட நினைவு வந்தது. அவனுக்கும் அதே நினைவு தான் போல் அர்த்த பார்வை மாற்றிக்கொண்டனர். ஆனால் அதை பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மேலும் அவள் அன்று கீழே விட்டு சென்ற கிஃப்ட் டேபிள் மேல் இருந்தது. இன்று அவளிடம் கொடுக்க பத்திரமாக வைத்திருந்தான்.



ஸ்ருதி - நல்லா இருக்கேன் ரோஹன். நீ எப்படி இருக்க?? உன்னோட வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு??


ரோஹனுக்கு அவன் வேலையை பற்றி கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது.


ரோஹன் - ரொம்ப நல்ல போய்ட்டு இருக்கு. இரு உனக்கு ஜூஸ் கொண்டு வர்றேன்.. என்றவன் கிச்சன் சென்று விட்டான்.


இவன் இன்னும் மாறவே இல்லை. அதே கரிசனம் இப்போதும் இருக்கிறது என்பது ஸ்ருதிக்கு புரிந்தது. இரு கைகளிலும் கண்ணாடி கிளாஸ் இல் ஜுஸ் எடுத்து வந்தான். அப்போது அவன் எதிர் பார்க்காத நேரம் ஸ்ருதி வந்து அணைத்துக்கொண்டாள். பதிலுக்கு அணைக்க முடியவில்லை கையில் கிளாஸ் இருக்க… அவள் பேச ஆரம்பித்துவிட்டாள்



ஸ்ருதி - சாரி ரோஹன். என்னால இத்தனை நாள் பேச முடியல. நான் ரொம்ப ஸ்ட்ரெஸ் (Stress) ல இருந்தேன். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எனக்கு கொஞ்சம் நாள் தேவை பட்டது. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் என்றாள் மெல்லிய குரலில்.


ரோஹனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.


ரோஹன் - பரவாயில்லை ஸ்ருதி. உனக்கும் காலம் தேவைப்படும்னு தெரியும் அதான் நான் உன்ன எதுவும் தொந்தரவு பண்ணல. என்னோட நினைப்பு எல்லாம் உன் மேல தான் இருந்தது.


அவனிடம் இருந்து பிரிந்து கையில் இருந்த ஜுஸ் கிளாஸ் ஐ வாங்கிக்கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலாக பார்த்துக்கொண்டனர்.




ரோஹன் - அப்புறம் நம்ம உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறதை பற்றி என்ன நினைக்கிற???...


ஸ்ருதி - எனக்கு அதுல ரொம்ப ஹேப்பி ரோஹன்.


இருவரும் காதலை சொல்லாமல் சொல்லிக்கொண்டனர்.


ரோஹன் - ஸ்ருதி, உனக்கு பிடிச்ச ஒன்னு என்கிட்ட இருக்கு…


ஸ்ருதி யோசனையுடன் “ என்ன அது ரோஹன்?? எனக்கு பிடிச்சதா?? “ என்று வினாவினாள்.


ரோஹன் - இரு நானே போய் எடுத்துட்டு வர்றேன் என்றவன் கிச்சன் சென்று கையில் ஒரு பிளேட் மூடி போட்டு இருந்தது. ஸ்ருதி என்ன அது என்று ஆர்வமுடன் பார்த்தாள்.

ரோஹன் அதனை திறக்க… உள்ளே அவளுக்கு பிடித்த கேக் இருந்தது.


ரோஹன் - ரெட் வெல்வெட் கேக் ரெடி என்றான் சந்தோசமாக. ஸ்ருதிக்கும் அதே சந்தோசம் தொற்றிக்கொண்டது.
 
Top