ஸ்ருதி - என்ன சார் சொல்றீங்க. நான் நல்ல தான் இருக்கேன். ரோஹனுக்கு தான் ஆபத்து.
போலீஸ் - இங்க போலீஸ் ஸ்ட்டேஷன் ல ஒருத்தர் உடல் ல கொஞ்சம் காயம் பட்டு வந்து ஸ்ருதினு ஒருத்தர் மிஸ்ஸிங்னு (Missing) சொல்லி புகார் கொடுத்திருக்கிறார்.
இதனை கேட்ட ஸ்ருதிக்கு பூமி தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது. ஒரு நிமிடம் கண்கள் எல்லாம் இருட்டிக்கொண்டு வந்தது. சாதாரணமாக துடித்த இதயம் இப்போது மீண்டு வேகமாக துடித்தது.
போலீஸ் அங்கு யாரிடமோ பேசும் சத்தம் கேட்டது.
போலீஸ் - அவர் சொல்றதும், நீங்களும் பேசுறது பார்த்தா… ஒரே ஆள் தான் போல..
ஸ்ருதி (நடுங்கும் குரலில்) - அஞ்சனா??!! எ… எ… எங்..க???
போலீஸ் - அவர் சொல்றது பார்த்தா… அவங்க இவர் பாதி வழியில அடிச்சி போட்டு தப்பிசிட்டாங்க…
ஸ்ருதி அவள் இருக்கும் இடம் சொல்லிவிட்டு நடுக்கத்துடன் தரையில் ஒரு ஓரமாக சென்று அமர்ந்துக்கொண்டாள். இப்போது இன்னும் பயமாக இருந்தது.
ஆனால் ஏதோ சின்ன நம்பிக்கையாக ‘ அப்படியே அஞ்சனா என்ன தேடினாலும் ரோஹன் வீட்டுல தான் தேடுவா. இங்க வந்து தேடுறது பத்தி யோசிக்க மாட்ட ‘ என்ற நம்பிக்கை துளிர் விட்டது.
அப்போது சரியாக ஹால் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அதற்குள்ளேவா போலீஸ் வந்துட்டாங்க??!!! ஆனா கதவை தட்டாம.. சாவி போட்டு திறந்து வந்தது போல் அல்லவா சத்தம் கேட்டது??!! என்பதை மூளை எடுத்து சொன்னது. வந்தது அஞ்சனா என்பதை அறிந்துக்கொண்டாள்.
சத்தம் எழுப்பாமல் துணி வைக்கும் கப்-போர்ட் (cub board) உள்ளே சென்று மறைந்துக்கொண்டாள். அவள் மாடி ஏறி வரும் காலடி ஓசை கேட்டது. முடிந்த மட்டிலும் அழுகையுடன் வரும் கேவலை அடக்கிக்கொண்டாள்.
இவள் அறையில் வந்து முதலில் தேடினாள். பாத்ரூம், பால்கனி என தேடிப்பார்த்தாள். அவள் குளித்து உடை மாற்றியதற்கான அடையாளம் இருந்தது. ஸ்ருதி இங்கே தான் இருக்கிறாள், லைட் எல்லாம் எரியும் போதே அது ஊர்ஜிதம் ஆகிவிட்டது.
அவளின் தோற்றம் பயமாக இருந்தது. தலைவிரி கோலமாக, முகத்தில் இரத்தம் வலிந்து கையில் கத்தியுடன் காட்சியளித்தாள்.
இவள் இங்கு இல்லை என்று எண்ணி அடுத்த அறைக்கு சென்றுவிட்டாள். இவை எல்லாம் சாவி துளை வழியே பார்க்க முடிந்தது. அப்போது ரோஹனிடம் இருந்து மெசேஜ் வந்தது.
ரோஹன் - ஸ்ருதி, நீ எங்க இருக்க? உன்ன நம்ம வீட்ல தான இருக்க சொன்னேன். நீ ஏன் போன? பத்திரமா தான் இருக்கியா??
ஸ்ருதி - எனக்கு பயமா இருக்கு ரோஹன். சீக்கிரம் வா. நான் என்னோட ரூம் கப் போர்ட் குள்ள இருக்கேன். அஞ்சனா வீட்ல தான் என்ன தேடிட்டு இருக்கா.. போலீஸ் கூப்டு சீக்கிரம் வா…
ரோஹன் - அங்கேயே இரு. நாங்க வந்துட்டு இருக்கோம்… ஃபோன் கையிலேயே வச்சுக்கோ.
ரோஹன் அஞ்சனாவை காரில் போட்டு கொண்டு போகும் போது திமிறிக்கொண்டு வந்தாள். அவனை கார் ஓட் விடமால் தொந்தரவு செய்தாள். ஒரு கட்டத்தில் கையில் உள்ள துணியை அவிழ்த்து ரோஹன் அடித்து அங்கு இருந்து இவளும் ஸ்ருதி வசிக்கும் வீட்டுக்கு வந்துவிட்டாள்.
ரோஹன் ஒருவழியாக எழுந்து போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் கொடுத்தான். இவன் வசிக்கும் இடம் என எல்லாம் தகவல்களும் கேட்டனர். மேலும் இவனுக்கு ஸ்ருதிக்கு இருக்கும் உறவு. மாலையில் இருந்து நடந்ததை ஒன்னு விடாமல் சொன்னான்.
அஞ்சனா… ஸ்ருதியை தேடி ரோஹன் வீட்டுக்கு சென்று இருப்பாள் என்று நம்பி அங்கு போய் பார்க்கும் போது தான் தெரிந்தது. இருவரும் அங்கு இல்லை என்பது. அப்போது தான் ஸ்ருதி போலீஸ் ஸ்டேசனுக்கு ஃபோன் செய்தது. அதில் பேசிய போலீஸ்… ரோஹன் உடன் இருக்கும் போலீஸ்க்கு தகவல கொடுத்தார். இப்போது ஸ்ருதியை தேடி வந்துக்கொண்டு இருந்தனர்.
இங்கு ஸ்ருதிக்கு உள்ளே இருக்க மூச்சு வாங்கியது. காற்று புக கூட வழி இல்லை. இன்னும் நேரம் சென்றால் மயக்க நிலைக்கு போய் விடுவோம். அஞ்சனா பக்கத்து அறையில் தான் இருக்கிறாள் என்று கதவை லேசாக திறந்து நன்றாக மூச்சை இழுத்து விட்டாள். சரியாக அந்நேரம் அஞ்சனா இவள் இருக்கும் அறையை தாண்டி போகும் நேரம்… ஸ்ருதி கதவை சாற்ற அந்த சத்தம் நன்றாக கேட்டது.