logo

அத்தியாயம் 1

Mars

Administrator
ரொம்பவும் முன்னேற்றம் இல்லாத கிராமம். இரவு நேரம் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை அந்த குளிர் நேரத்தில். கிராமத்துக்கே உரித்தான சின்ன பரோட்டா கடை. பின்புறம் குடிமகன்கள் குடிக்க இடம் என்று குண்டு பல்ப் வெளிச்சத்தில் பார்க்க முடிகிறது.

அங்கு கடைப் பையன் ஒருவன் கையில் உள்ள ஆம்பிலேட் ஐ வெளிச்சம் இல்லாத கடைசி டேபிளில் வைத்து விட்டு…. பானத்தை அதற்கு முன் உள்ள டேபிளில் வைத்து விட்டு சென்றான்.

நபர் 1 - ஏலே, இன்னும் அந்த கிழவனும் கிழவியும் அவக பேரனை தேடிக்கிட்டு தான் இருக்காங்களா?

குளிருக்கு இதமாக பானத்தை அருந்தி கொண்டு இருந்தவன்

நபர் 2 - அடேய் குடிகார பயலே மெதுவா ல… யாருக்கும் கேட்டுற போகுது.

நபர் 3 - அப்படி என்னல ரகசியம் எனக்கும் சொல்லுங்களேன்

நிசப்தமான அந்த சூழலில் மெதுவான குரலில்

நபர் 2 - இந்த ஊரு காட்டு பக்கம் ஒரு பெரிய பங்களா இருக்கு. அதுல ஒரு கிழவனும் கிழவியும் இருக்காங்க. அவங்க வீட்ல ரொம்ப வருஷம் முன்னாடி நடந்த சண்டையில குடும்பம் பிரிஞ்சிடுசு. ஆனா இவக பேரனை தேடிக்கிட்டு இருக்கிறதா ஒரு பேச்சு. பேரனை கண்டுபிடிச்சி தர சொல்லி போலீஸ் ல புகார் கொடுத்திருக்காங்க.

நபர் 3 - இவ்வளவு தானா… இதுக்கு போய் எதுக்கு அவனை மெல்லமா பேச சொன்ன?

நபர் 2 - எல்லாத்தையும் முழுசா கேளு.. அதுக்காக மட்டும் இல்ல. அவக பரம்பரை பணக்காரங்க… வீட்டுக்கு கீழ ரகசிய அறை இருக்கிறதாவும் அங்க நிறையா பணம், நகை , காசு எல்லாம் இருக்கிறாதா ஊருக்குள்ள ஒரு கதை உண்டு.

நபர் 1 - அப்போ ஆள் பெரிய பார்ட்டி போல. அத்தனை சொத்துக்கு யாரு அதிபதியா இருக்க போறான்னோ? அவன் இப்போ எங்க இருக்கானோ? என்று பெருமூச்சு விட்டபடி டேபிளில் இருந்த பானத்தை ஒரேமூச்சில் அருந்தி முடித்து மாட்டையாகி விட்டான்.


இவர்கள் குடி போதையில் பேசிய புரளியை.. அதிகம் வெளிச்சம் இல்லாத கடைசி டேபிளில் இருந்த ஒருவன் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தான்.

நபர் 3 - அப்போ வாரிசு இல்லாத சொத்தை ஈசியா ஆட்டைய போடலாமே!?

நபர் 2 - அத பண்ணாம இருப்பாங்கன்னு நினைக்கியா? அந்த கிழவனும் கிழவியும் ஒரு சைகோனும் அப்படி அவங்க பேரன்னு ஏமாத்தி வீட்டுக்குள்ள வர்றவங்கள கொன்னு போதைக்கிறதா ஒரு பேச்சும் இருக்கு. அதுக்கு எந்த ஆதாரமும் இல்லை அதுவும் இல்லாம அது பெரிய வீட்டு சமாச்சாரம்.


நபர் 3 - அது எப்படி ல ஏமாத்தி உள்ள போக முடியும். அவங்களுக்கு பேரனை கூடவா அடையாளம் தெரியாது… அப்படியே அடையாளம் தெரியலனாலும் சின்ன வயசு ஃபோட்டோ வெச்சு கூட கண்டுபிடிக்கலாமே.

மட்டையானவன் மீண்டும் எழுந்து
நபர் 1 - அங்க தான் ல இருக்கு விஷயமே. அந்த கிழவிக்கு கண்ணு தெரியாது அந்த கிழவனும் காது கேட்காது.

நபர் 3 - ஆத்தி! இது இல்லாமையே அவங்க பேரனை அடையாளம் கண்டுபிடிக்க முடியும்மா. அப்போ ஏதோ ஒரு விஷயம் அந்த பையன்ட இருக்கு அது வெச்சு தான் மத்தவங்க அவங்க பேரன் இல்லனு கண்டுபிடிக்காங்க.

வயதான தம்பதியின் விசித்திரமான தன்மை மற்றும் காடு முன் இருக்கும் அவர்களின் தனிமைப்படுத்த பட்ட வீடு சுற்றியும் உள்ள விசித்திரமான நிகழ்வுகள் பற்றி அவர்கள் கேள்விப்பட்ட கதைகளை பேசியவாரு மூவரும் மட்டையாகி விட்டனர்.

மங்கலான வெளிச்சத்தில் உக்காந்து திரவம் அறுந்திக்கொண்டு அவர்கள் உரையாடலை கூர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தான் அவன் விஸ்ரான்.
வயதான தம்பதிகளைப் பற்றிய வதந்தியை கேட்கும் போது நிழலில் ஒளிந்திருந்தவனின் கண்கள் ஆர்வத்தில் மின்னியது.

விஸ்ரானில் ஆர்வம் மேலும் தூண்டப்படுகிறது. எனவே இதனை பற்றி மேலும் விசாரிக்க முடிவு செய்கிறான். கண்களில் உறுதியுடன் அவன் குடித்து விட்டு சாப்பிட்டதற்கு பணத்தை மட்டையாகி விட்டவர்களில் ஒருவனின் பாக்கெட்ல் இருந்து எடுத்து கடை பையனிடம் கொடுத்துவிட்டு நிலா ஒளி வெளிச்சத்தில் பயணத்தை தொடர்ந்தான்.

(விஸ்ரான்) கூர்மையான பார்வையும்… முகத்தில் எதையும் காட்டாத தன்மையை எப்போதும் அவன் கையால்வான். இறுக்கமாக இருக்கும் அவன் முகம் என்னிடம் இருந்து விலகியே இரு என்று சொல்லாமல் சொல்லும். மேலும் உடல்பயிற்சி செய்து இரும்பு போல் இருக்கும் தேகம். பார்த்தால் நல்ல பையன் என்று சொல்லும் தோற்றம் ஆனால் அவனோ ஜெயிலில் இருந்து தப்பி ஓடி வந்த ஒரு கைதி.


கைதி என்றால் சாதாரண கைதி அல்ல அதிகமாக IQ கொண்டு பல சிறையில் இருந்து தப்பியோடியவன். அதனால் இவனை அதிகம் பாதுகாப்பு உடைய சிறையில் வைத்திருக்க அங்கு இருந்து சிக்கலான சூழ்நிலையையும் தனது புத்திசாலித்தனத்தால் எளிதாக மாற்றி அங்கிருந்தும் தப்பி ஓடி வந்துவிட்டான்.


வந்தவன் இஷ்டத்துக்கு வண்டி ஏறி வந்து சேர்ந்தது தான் இந்த கிராமம். எப்போது தப்பி ஓடி தனது பேக்பேக் எடுத்து கொண்டு காடு, மலை, அதிகம் சுற்றுலா பயணிகள் இல்லாத இடமாக பார்த்து செல்வது தான் வழக்கம். வழக்கத்துக்கு மாறாக விதி இவனுக்கு இந்த ஊரை காட்டிவிட்டது.

அப்போது கேட்க நேர்ந்தது தான் இந்த உரையாடல்.

இவனின் தொழில் திருட்டு. அதற்கென்று வீடு புகுந்து திருடுவது, நகையை பறிப்பது அல்ல… ஆன்லைன் ல் ஏமாறுபவர்களிடம் இருந்து வரும் பணம், பணக்காரர்களின் பிளாக் மணி, மேலும் எப்பேர் பட்ட லாக்கரில் வைத்திருக்கும் பணம் என்று திருடுவதே இவன் வேலை. எந்த சவாலையும் இவன் திறமையால் வென்றுவிடுவான்.

திறமை இருந்தால் போதாது அதனை காட்ட சரியாக இடம் கிடைக்காமல், கிடைத்தாலும் அதனை அங்கீகரிக்க ஆள் இல்லாமல் ஆனதால் வந்த விளைவு இது.

இவனுக்கு சரி தப்பு எல்லாம் இல்லை அவர்கள் என்னிடம் ஏமாறுகிறார்கள் நான் ஏமாற்றவில்லை என்ற எண்ணம் மட்டுமே. பணக்காரர்கள் எளியவர்களின் பணத்தை ஆட்டைய போட இவன் அவர்களிடம் இருந்து களவாடுகிறான். அவர்கள் பண்ணால் அது தொழில் நான் செய்தால் திருட்டா என்று மனசாட்சி இல்லாமல் இருப்பவன் நம் ஹீரோ விஸ்ரான்.

பரோட்டா கடையை விட்டு குளிர்ந்த இரவுக் காற்றில் வளைந்த தெருக்களில் அவன் செல்லும் போது அவன் கேட்ட கதையை பற்றிய எண்ணம் தான் ஓடியது. கிராமத்தை தாண்டி மரங்களுக்கு நடுவே அமைந்து உள்ள அந்த வயதான தம்பதியின் தனிமை படுத்த பட்ட வீட்டை பார்க்கும் போது அவனையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு உடலில் தோன்றியது. அவனின் அடுத்த வேலை இங்கு தான் என்பதை உணர்ந்தான்.

அவனின் இறுக்கமான முகத்தில் மெல்லிய கோடு போல் ஒரு சிரிப்பு உதட்டில் தோன்ற மற்றும் கண்களில் பளபளப்புடன் அந்த வீட்டையே சிறிது நேரம் பார்த்தவன் அங்கு மறைந்து இருக்கும் பொன்னையும் ரகசியங்களையும் கண்டுபிடிக்க தயாரகினான்.
 
Top