logo

அத்தியாயம் 11

Mars

Administrator
முதலில் விஸ்ரான் சென்று தாமஸ் தேன்மை அறையில் காதை வைத்து எதுவும் சத்தம் கேட்கிறதா என்று பார்த்தான். நிசபத்தமாக இருந்தது. உடனே தாராவை நோக்கி ‘எங்கே?’ என்று செயலில் கேட்க… அவள் பார்த்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

வீட்டின் நடுவில் மாடிப்படி. இடது பக்கம் தாமஸ் தேன்மை அறை. வலது பக்கம் இவள் பார்த்த இடம் இருந்தது. தாரா அடையாளம் காட்டியது போல் அந்த விரிப்பில் டேமேஜ் இருந்தது. யோசனையுடன் அதை தூக்கி பார்க்க… அங்கே தான் அவர்கள் தேடி வந்த அறை இருந்தது. ஒருவரை ஒருவர் அர்த்தமாக பார்த்துக்கொண்டனர்.

விஸ்ரான் முதலில் திறந்தான். உள்ளே மரத்தால் ஆனா படிக்கட்டு டார்ச் வெளிச்சம் மூலம் பார்க்க முடிந்தது. இயல்பில் தைரியம் கொண்டவன் எனவே முதலில் கீழே சென்றான்.. இரண்டு படிக்கட்டு இறங்கிய பின் தாராவுக்கு இறங்க உதவினான். என்ன இருக்கிறது என்று இருவருக்கு தெரியாது ..என்ன ஆபத்து என்றாலும் இருக்கலாம்… கவனமாகவே அடி எடுத்து வைத்தனர். ஏதோ ஒரு வாடை வயிற்றை பிரட்டியது. தன்னிடம் இருந்த கைக்குட்டை எடுத்து மாஸ்க் மாதிரி செய்து தாராவுக்கு கட்டிவிட்டான்.

டார்ச் சுற்றி முற்றி அடித்து பார்த்த போது… குண்டு பல்ப் இருந்தது அதனை ஆன் செய்தான்… வெளிச்சம் அறை முழுவதும் பரவியது. இவனுக்கும் வாடை தாங்க முடியவில்லை அவ்வபோது டி-ஷர்ட் மூலம் மூக்கை மூடிக்கொண்டான்.

தாமஸ் , தேன்மை பழைய புகைப்படம்… தேவை இல்லாத பொருள், இரும்பு ஜாமான் என ஸ்டோர் ரூம் போல் இருந்தது. மேலும் பிளாஸ்டிக் கவர், மண்வெட்டி, கோடாரி போன்ற பொருட்களும் அடக்கம். அங்கு ஒரு கிணறு கண்ணில் பட்டது. ஒருவேளை தாங்கள் தேடி வந்த பொருள் இருக்குமோ என்று இருவரும் எட்டி பார்க்க அமிலம் இருந்தது. (கதையின் முன்பில் பார்த்த அதே சல்ஃபுரிக் அசிட் தான்) கிணற்றின் விளிம்பில் முழுவதும் இரத்த கரை. ஒரு சந்தேகத்தில் தான் அருகில் இருந்த ஒரு பொருளை எடுத்து கிணற்றுக்குள் போட… அதுவோ இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது. இன்னும் ஸ்ட்ராங் ஆன பொருள் போட அதற்கும் அதே நிலை தான்.

இதனை பார்த்த தாரா அவ்வளவுதான் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட பயத்தில் ரூம் முக்கில் சென்று அமர்ந்து இரண்டு கால்களுக்கும் மத்தில் முகத்தை புதைத்து அழுக ஆரம்பித்து விட்டாள்.

அவளின் நிலை புரிந்தது… மனம் தைரியம் கொண்ட அவனையே ஒரு நிமிடம் ஆட்டம் கண்டது அவர்கள் பார்த்த அந்த கிணறு. அவளை ஒருவாறாக தேற்றி சமாதானம் செய்தான் செய்கையில். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.

தாமஸ், தேன்மை அவர்கள் எண்ணியதை விட நூறு மடங்கு சைகோ என்று புரிந்தது. இவ்வளவு கொடுமையான கொலை செய்வார்கள் என்று எண்ணவில்லை. அப்போது விஸ்ரான் கண்ணில் பட்டது அந்த கப்போர்ட்.

இரும்பு லாக்கர் போல் இருந்தது. கண்டிப்பாக பணம், நகை இங்கும் தான் இருக்கும் என யூகித்து விட்டனர். ஆனால் சாவி கண்டிப்பாக தாமஸ் , தேன்மை தான் வைத்திருக்க வேண்டும்.

தாராவிடம் திரும்பி நேரம் ஆகி விட்டது மேலே செல்லலாம் என்று செய்கை செய்து கொண்டிருக்கும் போதே குண்டு பல்ப் ஆஃப் ஆகி விட… மிரண்டு போய்விட்டனர் இருவரும். இதயம் துடிக்கும் சத்தம் வெளியே கேட்கும் அளவுக்கு துடித்தது. டும் இருட்டு, அருகில் அமிலக் கிணறு, மேலே சைகோ கொலைகாரர்கள் , இவர்கள் இருப்பதோ அண்டர் கிரவுண்ட் செத்தாலும் யாரும் தெரியாது.

லைட் ஆஃப் ஆனது எதர்ச்சியாக இருந்தாலும் இருவரும் சத்தம் இல்லாமல் பழைய பொருட்கள் அருகில் அசையாமல் நின்றுவிட்டார். அப்போது விஸ்ரானுக்கு தூசி எதுவோ கண்ணில் பட லேசாக கசக்கினான்.

நிமிடங்கள் கடந்த நிலையில் இவர்களை தவர யாரும் நடமாடுவது தெரியவில்லை என்றதும் மீண்டும் டார்ச் ஆன் செய்து வந்த வழியே மேலே சென்றனர். மேலே செல்லும் வரை கண்ணில் உறுத்தல் இருந்துகொண்டே தான் இருந்தது.


கதவை இருந்தது போலவே சாற்றி வைத்துவிட்டு அவர்கள் அறைக்கு திரும்பினர். அப்போதும் கூட போன உயிர் மீண்டும் வரவில்லை. அவர்கள் பார்த்த காட்சி அப்படி.

தாரா பிரம்மை பிடிச்சவள் போல் அமர்ந்து இருந்தாள்.

தாரா - தீரா! என்னையும் அந்த ஆசிட் கிணத்துக்குள்ள போட போறாங்களா… நானும் போசிங்கி செத்து போக போறேன்னா… பயமா இருக்கு… நம்ம இப்போவே இங்க இருந்து போயிடலாம் வா

விஸ்ரான் - தாரா.. நீ பயந்து போயிருக்க…அதான் இப்படி எல்லாம் பேசுற… நீ என்ன நம்புற தான?!!! கண்டிப்பா உனக்கு ஒன்னும் ஆகாது..

தாரா - தீரா எனக்கு நீயும் முக்கியம்… உனக்கு ஏதாச்சும் நாலும் என்னால தாங்க முடியாது… பிளீஸ்

விஸ்ரான் - என்ன நம்பு…கண்டிப்பா நாளைக்கு நைட் இங்க இருந்து கிளம்பிடுவோம்… டிரஸ்ட் மீ!!

ஆறுதலாக அணைத்துக்கொண்டான். ஒருவாறாக சமாதானம் செய்து இருவரும் தூங்கியும் விட்டனர். இந்த ஒரு நாள் கடந்து விட்டால் போதும் அடுத்து இவர்களை கண்டுபிடிக்க முடியாத தூரத்துக்கு தாராவை கூட்டி சென்று விடுவான்.

காலையில் வள்ளி, தேன்மை, தாமஸ் அவர்கள் அன்றாட வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

விஸ்ரானுக்கு அப்போது தான் முழிப்பு வந்தது. துங்கி எழுந்த தாரா எதுவும் பேசாமல் சிந்தனையில் இருந்தாள். நேற்று நடந்த நிகழ்வின் மிச்சம் இருந்தது. இந்த வீட்டில் இதுவே கடைசி நாளாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.

விஸ்ரான் - தாரா! எழுந்து கிளம்பி வா. ஐ புரோமிஸ் இன்னைக்கு நைட்டு கிளம்பிடலாம்.

தாரா - சரி ப்பா. நேத்து பார்த்தது ஒரு மாதிரி இருந்தது அவ்வளவு தான். கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவேன்.

விஸ்ரான் - குட். நீ எவ்வளவோ தைரியமான பொண்ணு தெரியும் ஆ? உனக்கு தைரியம் தான் அழகு…

தாரா (சிரித்தாள்) - தாங்க்ஸ்… இன்னைக்கு என்ன பிளான் ?? சொல்லவே இல்லை..

விஸ்ரான் - இது தான் உன்கிட்ட புடிச்சிருக்கு… என்ன காப்பாத்த ஆல்ரெடி நீ பிளான் நேத்து ராத்திரி பண்ணிட்டியே… சோ வெளிய நாங்க போற நேரத்துல நீ அவங்க ரூம் குள்ள போயிடு. கார் பஞ்சர் ஆனது தெரிஞ்சு பேசிக்கிட்டு இருப்போம்…நான் முடிஞ்ச அளவுக்கு நேரத்த கூட்ட முயற்சி செய்றேன். அந்த கேப் ல நீ சாவிய கண்டுபிடிக்க பாரு…


தாரா - சரி ஓகே!! ஒரு 10 நிமிஷம் வந்துறேன் என்றவள் குளிக்க சென்றுவிட்டாள்.

அவள் வரும் வரை துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தான். கண்ணாடி பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு அப்போது தான் கண்களில் இருக்கும் மாற்றம்.

ஒரு கண்ணில் தான் லென்ஸ் இருந்தது. மற்றொரு கண்ணில் இல்லை. குளிக்கும் முன் எடுத்து வைத்துவிட்டு குளிக்க வேண்டும் இல்லை என்றால் லென்ஸ் மூலம் இன்ஃபெக்ஷன் (infection) ஆகலாம். எனவே தேடிப் பார்த்தான்.

கீழே எதுவும் விழுந்து இருக்கிறதா என்று தேடிப் பார்த்தான். எங்கும் இல்லை.

ஆம்! இது தான் அவர்கள் பேரனுக்கும் விஸ்ரானுக்கும் இருக்கும் ஒற்றுமை. அவர்கள் பேரன் பிறக்கும் போதே கண்களில் (Heterochromia iridum) இருந்தது. Heterochromia iridum என்பது கண்களில் உள்ள கருவிழிகள் வெவ்வேறு நிறத்தில் இருக்கும். வயதான தம்பதியினரின் பேரனின் ஒரு கருவிழி பிரவுன் நிறத்திலும் மற்றொன்று நீல நிறத்தில் இருக்கும். அதனை தெரிந்து கொண்ட விஸ்ரான் அதே போல் லென்ஸ் வைத்துக்கொண்டு வந்ததால்… இவனை உயிரோடு விட்டனர்)

அப்போது தான் நேத்து தூசி பட்டதும் கண்களை கசக்கிய நிகழ்வு நியாபகத்துக்கு வந்தது. இவர்கள் அறை வரும் வரை கண்ணில் இருந்த உறுத்தல். கண்டிப்பாக அண்டர் கிரவுண்ட் இல் இருந்து அறைக்கு வரும் போது விழுந்திருக்கும். தாமஸ் இல்லை தேன்மை கண்டுபிடித்துவிட்டால் அவ்வளவு தான். போட்ட பிளான் அனைத்தும் வீண். தொலைந்து போனது வேறு நீல நிற லென்ஸ்.

நல்ல வேளையாக.. ஜோடியி்ல் உள்ள இன்னொரு லென்ஸ் இருந்தது. ஆனால் கீழே விழுந்ததை எண்ணி வருத்தம் கொண்டான்.
அப்போது தாரா வெளியில் வர… அவளிடம் நடந்ததை சொன்னான். அவளுக்கும் பதற்றமாக தான் இருந்தது.

தாரா - தீரன்! கீழ போற அப்போ பார்க்கலாம். கண்டிப்பா கீழ கிடக்கும். இன்னும் வள்ளி அக்கா பெருக்கிருக்க மாட்டாங்க.. இல்லைனாலும் பார்த்துக்கலாம்

விஸ்ரான் - பாத்துக்கலாம்… அண்டர் கிரவுண்ட் ல இருந்தா ஒன்னும் பண்ண முடியாது… தாமஸ் கையில மட்டும் மாட்டிக்க கூடாது… வள்ளி அக்காக்கு அது என்னனு தெரியாது… பாட்டிக்கு கண்ணு தெரியாது… தாமஸ் கையில மட்டும் கிடைக்காமல் பார்த்துக்கணும்… சரி வா கீழ போகலாம்… மழை வேற வர்ற மாதிரி இருக்கு…


கீழே செல்லும் போது இருவரின் கண்களும் தரையை அலசி ஆராய்ந்து கொண்டு தான் இருந்தது. தாமஸ் , தேன்மை இவர்களை பார்த்ததும் சாப்பிட சென்றனர். வள்ளி சமைத்தது எனவே சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும்

தாமஸ் - வர்றியா தீரன்! கிளம்பலாமா?? மழை வர்ற முன்னாடி போய்ட்டு வந்துரலாம்…

தீரன் - வாங்க தாத்தா…

தேன்மை வழி அனுப்ப முன்னாடி சென்றார்… கூடவே வள்ளியும் போய் விட தாராவுக்கு வசதியாகி விட்டது. யாரு கண்ணிலும் படமால் தாமஸ் தேன்மை அறைக்கு நுழைந்து விட்டாள்.
 
Top