ஆந்தையின் சத்தமும், இலை சருகுகளின் சத்தமும் அந்த அமானுஷ்யமான சூழழை மேலும் திகிலாக காட்டியது.
ஆனால் அந்நேரமும் எந்த வித முக பாவனையும் இல்லாமல் அந்த வீட்டை நோட்டம் விட்டான். உஷாராக அந்த வீட்டில் இருந்து யாரும் கவனிக்காத வாரு மரம் கிளைகள் நடுவுவே மறைந்து நின்று கொண்டான். அவன் அப்படி செய்ததற்கு ஒரு காரணம் ஆக வீட்டின் ஒரு அறையில் இருந்து விளக்கு ஒளி அனைத்து அனைத்து எரிந்தது.
சற்றும் எதிர்பாராத திருப்பமாய் அந்த முதுமை தம்பதிகளை தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. அப்போது திரைச்சீலை அந்த கிழவன் மூடுவது புறிந்தது…ஆனால் விளக்கின் ஒளியில் அங்கு மூன்றாவதாக ஒரு நபர் இருப்பதை விஸ்ரான் கவனித்தான். அவன் கூரிய கண்களுக்கு அது புலப்படவில்லை என்றால் தான் ஆச்சரியம். ஆனா அது யாரு என்று கிரகிக்கும் முன்பு விளக்கு ஒளியும் நிறுத்தம் செய்யப்பட்டது.
சிறிது நேரம் ஆயினும் அவன் அந்த தம்பதிகளை பார்த்த வரையில் அவர்கள் நிர்மலாகவே இருந்தனர். அந்த கிழவன் ஏதோ பேசுவதும் அந்த கிழவி அதற்கு ஏதோ பதில் சொல்லுவதும் மேலும் அவர்கள் தொடுகையின் மூலம் பேசுவதும் புரிந்தது.
ஆனால் அந்த மூன்றாவது ஆள் யாரு என்ற கேள்வி மண்டையை குடைய…. ஒரு வேலை அந்த குடிகாரர்கள் சொல்லுவது போல் அவர்கள் கொல்லும் நபராக இருக்குமோ? அல்லது அவர்களுக்கு துணைக்கு வைத்த ஆள் ஆக இருக்குமோ? என்று பல கேள்விகள் மேலெழும்ப சீக்கிரம் அனைத்தையும் கண்டுபிடிக்கும் நோக்கோடு அங்கிருந்து சத்தம் இல்லாமல் நகர்ந்தான்.
அவன் நகர்ந்த அடுத்த நொடி… அந்த கிழவன் வெளிய காடுகளில் உன்னிப்பாக பார்க்க…..யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் மீண்டும் உள்ளே சென்று விட்டார்.
இவ்வளவு நேரம் ஒருவன் நோட்டம் விட்டதையோ இல்லை கலவாட பிளான் போட்டதையோ எதுவுமே அறியாத தம்பதிகள் அந்த மூன்றாம் நபரை கோடாரி கொண்டு வெட்டி ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி இருவரும் ஆக அவனை அண்டர்கிரவுண்ட் அறைக்கு இழுத்து சென்றனர். கீழே இரத்தம் சிந்தாத வாரு சரியா பேக் செய்து இருந்தனர் பல நாள் பழகிய வேலைப் போல்.
அவர்களின் வீடு என்பதை விட பெரிய பங்களா என்று சொல்லலாம். பெரிய சோஃபா, பழங்காலத்து பொருள், பெயின்டிங், ஃபர்னிச்சர் என்று பிரம்மாண்டமாக இருக்கும் பகலில் பார்த்தால். ஆனால் இரவில் அனைத்தும் அமனுஷ்யமாகவே தென்பட்டது.
அந்த அறையோ இருட்டில் எங்கு இருக்கு என்று நமக்கு புலப்பட வில்லை என்றாலும் அந்த தம்பதியினருக்கு நன்றாக தெரிந்தது. கிழவிக்கு கண்ணு தெரியாது ஆனால் பல ஆண்டுகளாக வசிப்பதால் எந்த பொருள் எங்கு உள்ளது என்பதை சரியாக கூறும் அளவுக்கு ஞானக் கண் உள்ளது.
அண்டர்கிரவுண்டு படிக்கட்டில் அவர்கள் இரங்க ஆனால் அந்த உடலோ ஒரு ஒரு படியாக இழுத்துக்கொண்டு செல்லப் பட்டது. அவ்விடத்தில் தரை ஒடு ஒட்டிய கிணறு போல் இருந்தது ஒரு ஓரமாக. அங்க அந்த கவரை தூக்கி வீசினர். அதுவோ இடம் தெரியாமல் அழிந்து போனது.
அங்கு இருந்ததோ தண்ணீர் அல்ல அதற்கு பதிலாக கந்தக அமிலம் (sulphuric acid). பின்பு வந்தவழியே மீண்டும் சென்று விட்டனர். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரவர் மாத்திரையை போது விட்டு… கிழவன் அவரின் மனைவியை கைத்தாங்கலாக பிடித்துகொண்டு படுத்ததும் உறங்கியும் விட்டனர்.
இவர்கள் செய்கைக்கு துணையாக இருந்த நிலவு விடைபெற்று சென்று விட… பகலில் வழமை போல் எழுந்தார்கள் வயதான தம்பதியினர் - தாமஸ் (கிழவன்) மற்றும் தேன்மை (கிழவி).
விடிய காலையில் எழுந்த தாமஸ்… எப்போது செய்வது போல் தோட்டத்துக்கு சென்று செடிகள் மற்றும் மரங்களுக்கு தண்ணீர் விடுவது அவற்றை பராமரிப்பது போன்ற செயல்களை செய்ய ஆரம்பித்தார். தாமஸ்க்கு செடிகளை உற்று உற்று பார்க்கும் பழக்கம் உண்டு. எனவே அவர் புதிதாக வைத்த வெள்ளை எருக்கு செடியை ஏதாவது புது முளை வந்து உள்ளதா என்று தனது மூக்கு கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து பார்த்துக்கொண்டு இருந்தார்.
(வெள்ளை எருக்கு - இந்த வகையான எருக்கஞ்செடி வீட்டில் வைத்தால் அபாசகுணமாக அந்த காலத்தில் கருத்தப் பட்டது. இந்த எருக்கஞ்செடி சுடுகாடுகள், கைவிட பட்ட இடம் போன்ற இடங்களில் அதிகமாக காணப்படும். ஆனா இதற்கு அதிகமான மருத்துவம் குணம் கொண்ட செடிகளில் ஒன்று ஆகும். இதில் நீல எருக்கு அதிக இடங்களில் பார்கப் படும் ஆனால் வெள்ளை எருக்கு மிகவும் அரிதானவை. இவ்வகையான செடி பல ஆண்டு தண்ணீர் இல்லாமல் கூட வாழும் தன்மை உடையது)
விடிந்தும் விடியாமலும் இருந்த நேரம் அது…
தேன்மை - என்ன தாமஸ்… வெள்ளை எருக்குல முளை விட்டிருக்கா?
(இவர்களுக்கு 15 ஆண்டுகள் முன்பு தான் விபத்தில் கண் மற்றும் காது திறன் இல்லாமல் போனது.
தேன்மைக்கு பார்வை இல்லை என்பதால் அவர் தாமஸ் பேசுவதற்கு செய்கை மூலம் அல்லது பேசி பதில் சொல்வார். தாமஸ்க்கு காது கேட்காது என்பதால் தேன்மை செய்யும் செய்கையை புரிந்தது கொண்டு பதில் பேசுவார் இல்லையெனில் உதட்டு அசைவை கொண்டு புரிந்துகொள்வார். எனவே இந்த மாதிரி கண்ணோட்டத்தில் இவர்களின் உரையாடலை பார்ப்போம்)
தாமஸ் - பரவாயில்லையே ! உனக்கு கண்ணு தெரியல என்றாலும் சுத்தி நடக்கிறது நல்லாவே புரியுதே.
தேன்மை (செய்கை) - அதுவா?!! நீங்க இந்த நேரம் இங்க தான் இருப்பீங்க. அதுவும் இல்லாம எனக்கு காத்துல வாசனை வந்தது.
தாமஸ் - நீ உண்மையிலேயே திறமைசாலி தான். உனக்கு சுற்றி உள்ளதை உணர்வதுக்கு புலன் சாதரணமானவங்கல விட அதிகமாகவே உன்கிட்ட இருக்கு.
தேன்மை - அது இருந்து என்ன பயன். நம்ம பேரனை கண்ணால பார்க்க முடியாதுல என்றார் வருத்தம் மிகுந்த குரலில்.
தாமஸ் அருகில் வந்து தோளை சுற்றி கையை போட்டு - ஒன்னும் கவலை படாத. நீ அவனை தொட்டு பார்த்து தெரிஞ்சிகுவ என்று ஒருவாறாக மனதை தேற்றி உள்ளே அழைத்து சென்றார்.
ஊரில் உள்ள புரளியை நம்பி யாரு இவர்கள் வீட்டு வேலைக்கு வராமல் இருக்க… வெளியூர் குடும்பம் ராஜா மற்றும் வள்ளி பிழைப்புக்காக வந்திருக்க வேறு வழி இல்லாமல் வள்ளி வீட்டு வேலைக்கு சேர்ந்துக் கொண்டாள்.
ராஜா மெக்கானிக் வேலைக்கு சென்றான்.
எப்பவும் போல் அன்றைக்கும் வேலைக்கு வந்த வள்ளி அன்றாட வேலையை தொடர்ந்தாள். தேன்மைக்கு கண் தெரியாது ஆனாலும் வள்ளி சமைக்கும் போது அருகில் இருந்து பார்ப்பது வழக்கம். தேவைக்கு அதிகமாக பேசுவது கிடையாது. இருந்தபோதிலும் கண் தெரியாத கிழவி உற்று நோக்கினால் உண்டாகும் அசௌகரியம் வள்ளிக்கு தோன்றும் ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்துக்கொள்வாள். அதுவும்போக வீட்டில் சில இடங்களுக்கு போக அனுமதி இல்லை.
தாமஸ் மட்டும் எப்போதாவது அவள் கணவன் பற்றியும், தோட்டம் வேலை பற்றியும் ஒன்று இரண்டு வார்த்தைப் பேசுவது உண்டு.
வள்ளி சில சமயம் கவனித்தது உண்டு. வீட்டுக்கு வரும் நபரை அப்போது பார்ப்பதோடு சரி அவர்களை அதன் பிறகு அவள் பார்க்கவில்லை. இதுவே அவளுக்கு சந்தேகத்தை கிளப்பும். வயிற்று பிழைப்புக்காக வந்தது… பெரிய வீட்டில் நடக்கும் டிராமாவை பார்பதுக்கு அல்ல என்பதை புரிந்து கொண்டு நடந்துக்கொள்வாள்.
வள்ளிக்கு அந்த வீட்டில் எப்போது வித்தியாசமான உணர்வு தோன்றும். அது எதனால் என்று புரியாது. இந்த கிழவன் கிழவியின் நடத்தையா? இல்ல ஊரில் பேசப் படும் புரளியா?
Comment down for the next episode 👇