logo

அத்தியாயம் 3

Mars

Administrator
விஸ்ரான் எப்போது ஜெயிலில் இருந்து தப்பி வந்த பிறகு அவனுக்கு என்று ஒரு ரகசிய இடம் அமைப்பது வழக்கம். அதே போல் இப்போது ஒரு கைவிட பட்ட கிராமம் அதில் நடுத்தர வர்க்கம் வசித்த இடிந்து போன வீடு. அதில் மர புத்தக அலமாரி ஒன்று தூசியும், ஒட்டடையும் ஆக இருக்க அதற்கு பின்னாடி ஒரு சிறிய அறை.

அதில் அன்றாட தேவைக்கு பொருள் தாராளமாகவே இருந்தது. கட்டில் இல்லாமல் மெத்தை மட்டுமே. அதில் தான் நம் ஹீரோ துயில் கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு மேஜை அதில் ஒரு டேபிள் லாம்ப் அணையாமல் ஒளிர்ந்து கொண்டு இருந்தது… இரவில் அவன் முழித்துகொண்டு வேலை செய்ததை காட்டுகிறது. ஒரு கப்போர்ட்ல் தேவையான உடை. இன்னும் சில இதர பொருட்கள் இருந்தது. மேஜையில் மேல் லேப்டாப், அவன் கிறுக்கிய சில காகிதம்…. சாப்பிட பாக்கெட் உணவுகள் இருந்தது. அதே வீட்டில் பின்னாடி ஒரு கிணறு இருந்ததால் தண்ணீருக்கு கவலை இல்லை.


இந்த நிம்மதியான உறக்கம் அவன் அந்த வீட்டுக்கு செல்லும் வழியை கண்டுபிடித்துவிட்டதால் வந்தது. அப்போது அவன் மொபைல்க்கு கால் வர… அட்டென்ட் செய்யாமல் நேராக கதவு (புத்தக அலமாரி) அருகே வந்து திறக்க அவன் முன்பு முப்பதுகளில் இருக்கும் ஒருவன் கையில் சில பையுடன் நின்றான்.

விஸ்ரான் - காளி எத்தனை தடவ சொல்லுறது சாப்பாடு கொண்டு வர வேண்டாம் என்று. இந்தா இந்த பணத்தை வெச்சிக்கோ என்றான் பல தாள்களை கொடுத்தான்.

காளி - அண்ணே வேண்டாம்… ஏற்கனவே நிறையா குடுத்துட்டீங்க….

விஸ்ரான் - காளி உனக்கே தெரியும்… நான் யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் உதவி பண்ண மாட்டேன். உன் நல்ல மனசுக்கு நான் கொடுக்குற ஒரு சின்ன தொகை இது அவ்வளவுதான். இத வெச்சு பாப்பாக்கு ஏதாச்சும் வாங்கி குடு என்று சொல்லி அவன் சட்டை பைய்யில் வைத்து விட்டான்.

காளி வேறு யாரும் இல்லை…. இவனோடு ஜெயிலில் இருந்த கைதியில் ஒருவன். காளியின் எட்டு வயது பெண் குழந்தையை கற்பழிப்பு செய்திருக்க… இதனை அறிந்த காளி அவனை துண்டு துண்டாக வெட்டி சரியான தீர்ப்பை வழங்கியதற்கு சட்டம் கொடுத்த தண்டனை. அப்போதில் இருந்து இவன் விஸ்ரானுக்கு பழக்கம். பொதுவாக யாரிடமும் நட்பு கொள்ளாத விஸ்ரான் இவன் கதையை அறிந்த பின்பு மெல்லிய நட்பு கொண்டான்.


விஸ்ரான் - நான் சொன்னது எல்லாம் பண்ணிட்டியா?

காளி - ஆமா அண்ணே. பிளான் எல்லாம் கரெக்ட் ஆ இருக்கு. நீங்க அங்க போனதும் வேலைய ஆரம்பிச்சிடுவேன். தேவையான பொருள் எல்லாம் ரெடி.

விஸ்ரான், மண்டையை சரி என்பது போல் ஆட்ட. அங்கிருந்து விடை பெற்று சென்றான் காளி. அவன் கொடுத்து விட்ட பையில் உள்ள பொருட்களைப் பிரிக்க செய்தான்.
தனக்கு தேவையானவை எல்லாம் இருக்க… அந்த வீட்டுக்கு செல்ல தயாரகினான்.

மறுநாள் காலை

அவன் இரவில் பார்ததைவிட பகலில் சில இடம் வேறு மாதிரி தெரிந்தது. மேலும் அவன் எதிர் பார்க்காத ஒன்று வீட்டுக்கு பின்னாடி இருக்கும் சுடுகாடு. இவன் அறிந்த வரை வீட்டுக்கு பின்னாடி காடு…. அதை சிறிது கடந்தால் அங்கு ஒரு ஒத்தையடி பாதை. இங்கு வேலையை முடித்து விட்ட உடன்… அவன் காளிக்கு தகவல் கொடுக்க அவன் அங்க வந்து விஸ்ரான் ஐ கூட்டிக்கொண்டு வேறு ஒரு மறைமுகமான இடத்துக்கு செல்வது பிளான்.

யோசியனையுடன் முன்னால் உள்ள கதவை திறந்தவனுக்கு வரவேற்றது நீல எருக்கு மரம். ஹாலில் அமர்ந்து இருந்த தேன்மைக்கு கேட் திறக்கும் சத்தம் கேட்க அர்த்தம் மிகுந்த தொடுகையில் தாமஸிடம் சொன்னாள்.


தேன்மை - வள்ளி யாருனு போய் பாரு

வளத்தியாக ஹேர் ஸ்டைல் சேஞ்ச் செய்து கூர்மையாக இருக்கும் அவன் பார்வை இன்று ஏதோ தேடலை கொண்டு இருந்தது. தோளில் ஒரு கருப்பு பேக்பேக் மட்டுமே.

வெளியே வந்த தாமஸ் அவனை பார்த்த பின்பு ஏதோ யோசனையில் ஆழ்ந்தார். எப்போதும் ஏமாற்றி வருபவர்களிடம் கண்ணில் ஒரு பேராசை ஒளியுடன், முகத்தில் இளக்காரம் இருக்கும் எப்படியும் இவர்கள் நம்பிவிடுவார்கள் என்று இல்லையனில் ஓவர்ராக்டிங் செய்து மாட்டிக்கொள்வார்கள். ஆனால் விஸ்ரான் ஒரு வாரம் இவர்களது பற்றி ஆராய்ந்து, நடிக்க எல்லாம் தயாராகி வந்திருக்கிறான். ஆதலால் அவர்களால் சீக்கிரம் கண்டறிய முடியவில்லை.


வெளியே வந்த வள்ளியின் எண்ணமோ ‘ அடுத்து உன்ன பார்ப்பேன்னா இல்லையானே தெரியலையே ‘


வெளியே வந்த தேன்மை “என்ன வள்ளி வந்து இருக்கிறது யாரு? நமக்கு வேண்டப் பட்டவங்களா? என்றார் புதிரோடு.

தாமஸ் வேகமாக விஸ்ரான் அருகில் சென்று கண்களை கூர்ந்து கவனித்தார். அவருக்கு என்ன தோன்றியதோ “நீ எங்கள பார்க்க வர்றதுக்கு இவ்வளோ வருஷம் ஆச்சா?” என்றார் சிறிது வருத்தம் தோய்ந்த குரலில்.

விஸ்ரான் - அப்படி இல்ல தாத்தா…நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க நாங்க வெளிநாட்டில சேட்டில் ஆனதுல இருந்து ஒரே பிரட்சனை… அப்பா பிசினஸ் ல லாஸ்… அப்புறம் கொஞ்சம் முன்னேற்றம் வந்ததும் எனக்கு படிப்புனு காலம் போயிடுச்சு… அதான் இப்போ உங்களை பார்க்க வந்துட்டேன்ல கொஞ்ச நாள் உங்களோடதான்.

அவன் வாயை அசைத்ததை வைத்து புரிந்துகொண்டார் ஆசீர்வாதமாக தலையில் கைவைத்து “ தேன்மை யாரு வந்திருக்கா பாரு… நம்ம பேரன்”

பாட்டியோ அருகில் வந்து அவன் முகத்தை தடவி பார்த்து அவன் எப்படி இருப்பான் என்று உருவம் கொடுக்க ஆரம்பித்தார்.


விஸ்ரான் - உங்க தீரன் வந்திட்டேன் பாட்டி. ஏன் எதுவுமே பேசாம இருக்கீங்க?

தேன்மை - என் மகன் நல்லா இருக்கானா?

விஸ்ரான் - மம்…இருக்காங்க. இவ்வளவு தூரம் வந்த என்ன பத்தி கேட்காம உங்க பையன விசாரீகீங்க?!!

தேன்மை - ஆமா எனக்கு என் பையன் தான் பெருசு. உன் அம்மா தான் அன்னைக்கு பிரிச்சு கூப்டு போனா… நல்ல வெச்சுருக்காலா இல்லயானு தெரிஞ்சிக்கனும்ல…

விஸ்ரான் - அம்மா பண்ணது தப்பு தான். அதுக்கு இத்தனை வருஷம் அதை நியாபகம் வெச்சிருக்கனும்மா?

தேன்மை - அப்போ பகைய மறந்து உன் அம்மாவும்… என் பையன்னும் பேசிருக்கலாமே?

விஸ்ரான் - (கவனமாக அதை தவிர்த்து) அதுவா இப்போ முக்கியம் அதான் நான் வந்திட்டேன்ல… இனிமேல் எல்லாம் பார்த்துக்கலாம்.

தாமஸ் - இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி… பேரனை உள்ள கூப்டு வா…

வள்ளி புறம் திரும்பி… தம்பிக்கு சாப்ட சீக்கிரம் செய்..அப்படியே மாடில உள்ள முதல் அறை சாவிய தீரனுக்கு எடுத்து கொடு என்றவர் கையை பிடித்து அழைத்து சென்றார்.

சாவி கைக்கு வந்தது….ஃப்ரெஷ் செய்த பின் சாப்பிட வருமாறு அழைத்து அவரவர் அறைக்கு சென்றனர். சமையல் அறைக்கு வந்த வள்ளியியோ இன்னும் ஆச்சரியத்துடன் தான் இருந்தாள். ‘ இந்த பெருசுங்களுக்கு இப்படி எல்லாம் கூடவா பேச தெரியும்.. பேரன் வந்தாச்சு ஆப்போ இங்க இனிமேல் மர்மமாக நடக்கிறது கம்மி ஆகும் ‘ என்ற எண்ணத்துடன் வேலையை கவனித்தாள்.

தங்களின் அறைக்கு வந்த இருவரும் எதுவும் பேசாமல் இருக்க …. சிறிது மெளனதுக்கு பின்பு

தாமஸ் - அவன் கண்கள்ல நான் அதை பார்த்தேன்

தேன்மை - நீங்க அவன் கிட்ட முதல்ல பேசின விதத்திலேயே எனக்கு புரிஞ்சு. எதுக்கும் நம்ம ஜாகர்தையா இருக்கணும்


தாமஸ் - நீ சொல்றதும் சரி தான். எதுக்கும் ரெண்டு மூணு நாள் பாக்கலாம் அதுக்கு அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்

இவ்வளவு நேரம் பேரனிடம் பேசியது இவர்கள் இல்லை என்பது மாதிரி நடந்துக்கொண்டனர். அவர்கள் பேரன் தான் என்பது 80 சதவீதம் உறுதி இருந்தது ஆனால் மீதம் உள்ள அந்த 20 சதவீதம் உறுதி செய்ய விரும்பினர்.


இவர்கள் நல்ல விதமாக பேசினாலும் உடனே தன்னை நம்பி விட மாட்டார்கள் என விஸ்ரான் ஆகிய தீரன் அறிவான். இரண்டு நாள் பார்ப்பார்கள் தன் மேல் உள்ள சந்தேகம் வலுவானால் என்ன நடக்கும் என்பது சந்தேகம் தான்.


இரண்டு நாளில் அவர்களை நம்ப வைத்து விட்டு அடுத்த இரண்டு நாளில் வீட்டை நோட்டம் விட்டு ஐந்தாவது நாளில் சுருட்டிக்கொண்டு செல்வது என்ன திட்டம் தீட்டி வைத்து விட்டான். ஏனென்றால் அதிகம் நாட்கள் இருக்க இருக்க இவன் அவர்கள் பேரன் இல்லை என்பதை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதனால்.

தன்னை பேரன் என நம்பும் வரை எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை………. அன்னைக்கு இரவு ரூம்ல் யாரோ நடமாடும் சத்தம் கேட்கும் வரை மட்டுமே.


Comment down for the next episode.. Then I'll upload the next episode.
 
Top