அதில் ஆன்லைனில் லிங்க் மூலம் பணம் வரும் வாரு செட் செய்து இருந்தான். அதாகப்பட்டது நீங்கள் இவ்வளவு ரூபாய் வென்று விட்டீர்கள் என்று வரும் லிங்க்கை கிளிக் செய்து பேங்க் அக்கவுண்ட் நம்பர் எல்லாம் கொடுத்து பணம் வரும் என்று பேராசையில் ஏமாறும் கூட்டத்திடம் இருந்து பணம் வந்து கொண்டு இருந்தது. மேலும் ஃபோனில் தெரியும் OTP ஐ கீழே உள்ள பாக்ஸில் டைப் செய்தால் அதற்கும் பணம் வரும் என்று நம்பி செய்யும் கூட்டம்.
மேலும் டைபிங் ஜாப் என்று… குடுக்கும் நம்பரை சரியாக டைப் செய்தால் ஒரு நம்பருக்கு 10 ரூபாய் என்று இருக்கும் லிங்கில் உழைப்பே இல்லாமல் காசு மட்டும் வந்தால் போதும் என்று எண்ணுபவரிடம் இருந்து பணம் வந்துக் கொண்டு இருந்தது.
(மேலே குறிப்பிட்டது இன்றைய நாட்களில் நடக்கும் ஆன்லைன் திருட்டு மற்றும் ஒரு மணி நேரம் டைப் செய்தால் போதும் 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று ஏமாற்றும் கூட்டம் நிறையா இருக்கிறது. எனவே ஒரு விழிப்புணர்வுக்காக கதையில் இணைத்துள்ளேன். இந்த வேலை எல்லாம் சொல்பவர்களே செய்து சம்பாதிக்காமல் ஏன் மற்றவர்களுக்கு தருகிறார்கள் என்று அடிப்படை சிந்தனை இருந்தால் போதும் நாம் சிக்கலில் மாட்டாமல் இருப்போம்)
தாரா - இது எல்லாம் தப்பு இல்லையா தீரன் என்று கவலையுடன் கேட்டாள்.
விஸ்ரான் - எது தப்பு? காசும் வேணும் வேலையும் செய்ய மாட்டேன்… ஃபோன் மட்டுமே பார்ப்பேன் என்று தண்டமா இது செய்றாங்க அது தப்பு இல்லையா??
தாரா - தப்பு தான். ஆனால் இது அவங்க அறியாமையா கூட இருக்கலாமே!!??
விஸ்ரான் அவன் லேப்டாப்பில் ஏதோ ஏதோ தட்டி ஒரு லிஸ்ட் எடுத்து காட்ட
விஸ்ரான் - இங்க பாரு… இது பண்றது எல்லாமே காலேஜ் போற பசங்க, வேலைக்கு போற வயசுல இருக்குறவங்க…. இவங்களுக்கு அறியாமை இருக்கும்னு நினைக்கிறியா? அவங்க ஏமாறுறாங்க அதுக்கு நான் என்ன செய்ய
தாரா - அவங்க செய்யுறது தான நீயும் செய்யுற தீரா.
விஸ்ரான் - ஆமா இல்லனு சொல்லலையே. இதுவும் தப்பு தான். ஆனா இதுக்கு நான் போடுற உழைப்பு பெருசு தாரா. இதுக்கு கோடிங் ல நிறையா தெரிஞ்சு இருக்கணும். நிறையா படிக்கணும் அது நான் போட்ட முதலீடு இப்போ அதுல எனக்கு வருமானம் வருது அவ்வளவு தான்.
அவன் எவ்வளவு சமாதானம் கூறினாலும் மனம் சமாதானம் அடைவதாக தெரியவில்லை.
தாரா - சரி அது உங்க விருப்பம்!... ஆனா தீரன் அவ்வளவு மோசக்காரன் இல்லனு என் மனசு சொல்லுது என்றவள் எழுந்து சென்றுவிட்டாள்.
விஸ்ரான் முகத்தில் என்றும் இல்லாத போலிவு தெரிந்தது. அதற்கு காரணம் அவள் சொன்னது போலவே அவன் ஆன்லைன் இல் இருந்து வரும் பணம் முழுவதையும் டிரஸ்ட்க்கு, கேன்சர் இன்ஸ்டிட்யூட் போன்ற இடங்களுக்கு அன்னோன் அக்கவுண்ட் மூலம் அனுப்பி வைத்து விடுவான். அதான் மூலம் பயன் பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இவள் தன்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டான். அவள் மேல் இருந்த பிடித்தம் நேரத்துக்கு நேரம் கூடிக்கொண்டே சென்றது.
புது பிரட்சனையாக அவன் அப்பாவிடம் தேன்மை, தாமஸ் ஐ பேச வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டான். கண்டிப்பாக அவர்கள் நியாபாகம் வைத்து கேட்பார்கள். என்ன செய்வது என்று கண்களை மூடி யோசித்துக்கொண்டு இருந்தான். இப்போ உள்ள AI மூலம் அவர்கள் பேசுவது போல செய்ய முடியும் ஆனால் அது அந்த அளவுக்கு உண்மையாக இருக்காது… ஃபோனில் பேச சொன்னால் பரவாயில்லை இவர்கள் வீடியோ அல்லவா எதிர்பார்க்கிறார்கள்.
இவன் யோசனையில் இருப்பதை பார்த்த தாரா என்ன என்று கேட்ட… இவனும் இருக்கும் பிரச்சனையை எடுத்து சொன்னான். எவ்வளவு சிந்தித்தாலும் என்ன செய்வதென்று அவர்களுக்கு புரியவில்லை.
அன்று பார்த்து வானிலை மிகவும் மோசமாக இருந்தது. கருமேகங்கள் சூழ சுடுகாட்டுக்கு முன்னால் அமானுஷ்யமான வீடு என்று பார்க்க திகிலாக இருந்தது.
சாயங்காலம் வரைக்கும் இருவரும் சேர்ந்து பேசி கொண்டு இருக்கும் போது தாமஸ் வந்து கதவை தட்டினார்.
தாமஸ் - தீரா! வா ப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்
தீரன் - சொல்லுங்க தாத்தா! என்ன விஷயம்?
தாமஸ் - அதான் ப்பா…. எங்க பையன் கிட்ட பேச வைக்கிறேன்னு சொன்னியே.. அதான் கேட்டு போகலாம்னு வந்தேன்
தீரன் (எதையும் முகத்தில் காட்டாமல்) - இதோ பேசிடலாம். ஒரு 10 நிமிஷம் தாத்தா. அம்மா அப்பா கிட்ட சொல்லி லேப்டாப் , வெப் கேமரா எல்லாம் செட் செய்த அப்புறம் பேசிடலாம்.
சரி என்றவர் கீழே சென்றுவிட… தாரா பக்கம் திரும்பி கலக்கமாக பார்த்தான். அவள் பக்கம் நெருங்கி வந்தவன்… தோள்களை இருபக்கமும் பிடித்து
விஸ்ரான் - இங்க பாரு தாரா… நான் மட்டும் கீழ போறேன். நீ இங்கேயே இரு. AI tool வெச்சு… தீரன் அம்மா அப்பா பேசுற மாதிரி செட் பண்ணிருக்கேன்… ஒரு வேளை அவங்க அதை கண்டுபிடிச்சிட்டா.. நீ முதல்ல இங்க இருந்து தப்பிச்சி போயிடு. பக்கத்து ஊருல ஒரு கைவிட பட்ட கிராமம் இருக்கு… அதுல ஒரு வீட்ல பின்னாடி கிணறு இருக்கும் அந்த வீட்ல புத்தக அலமாரி பின்னாடி ஒரு ரகசியம் இடம் இருக்கும். அங்க போயிடு.. இந்த ஊருல இருந்து அது பக்கம் தான். சரியா???
தாரா - எனக்கு ரொம்ப பயமா இருக்கு தீரா… என்ன மட்டும் தனியா ஏன் போக சொல்ற… நான் போக மாட்டேன் என்றவள் பயத்தில் வந்த கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
இதனை எதிர்பார்காதவன்… அவள் உடல் லேசாக நடுங்குவது தெரிந்தது. நாகரீகமாக அவளை ஒருபக்காமாக தோளோடு அனைத்தவன்
விஸ்ரான் - எல்லாமே எதிர்பார்த்து தான இங்க வந்தோம். இதுல உன்னையும் இழுத்துவிட்டது தான் கஷ்டமா இருக்கு. அதுனால தான் சொல்றேன் எதுக்கும் ரெடி ஆ இரு… அப்புறம் அந்த ரூம் ஓட முலையில சின்னதா ஒரு ஃபோன் நம்பர் எழுதி இருக்கும். அந்த நம்பர்க்கு ஃபோன் பண்ணா… காளினு ஒருத்தர் உனக்கு உதவி செய்வாரு. இப்போ நான் கீழ போறேன்.
அவன் மடிக்கணினியில் எடுத்துக்கொண்டு கதவு வரை சென்றவன் மீண்டும் அவள் அருகில் வந்து அவளை ஒருமுறை நன்றாக பார்த்தான்.
விஸ்ரான் - உயிரோட வந்தா மீண்டும் சந்திக்கலாம் என்றவன் அவள் கன்னத்தை லேசாக தட்டி “பார்த்து இரு சரியா… உனக்கு ஒன்னும் ஆகாது”.
பின் கீழே சென்றுவிட்டான். தாராவோ… மாலை நேரம் ஜன்னல் அருகில் நின்றுகொண்டு கருமேகங்களையும் விழும் மழையையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவன் மேல் தனக்கு இருக்கும் உணர்வை என்னதென்று யோசித்து பார்த்தாள். நேற்று இரவில் இருந்து தான் அவனை தெரியும் அதற்குள் இப்படி ஒரு ஆழமாக பிணைப்பு எப்படி வந்திருக்க முடியும். அப்போது வானத்தில் மின்னல் இடி என்று சூழல் மேலும் மாறியிருக்க ‘ அர்ஜுனா ! ஏதாச்சும் செய்து தீரன காப்பாத்து ‘ என்று ஆகாயத்தை பார்த்து வேண்டினாள்.
விஸ்ரான் எப்போது அசால்ட் ஆக இருப்பவன். இப்போதும் சிக்கிக்கொண்டால் ஏதாவது செய்து தப்பிவிடுவான். அவன் கவலை எல்லாம் இப்போது தாராவை எண்ணித்தான். எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று ஹால் வந்து சேர்ந்தான்.