logo

அத்தியாயம் 9

Mars

Administrator
விஸ்ரான் - என்ன ஆச்சு தாரா? இங்க என்ன பாரு… ஒன்னும் இல்லை.. மின்னல் பார்த்து பயந்துட்டியா… ஒன்னும் இல்ல டா… என்று கூறிய சமாதானம் எல்லாம் ஒன்னும் இல்லாமல் போனது.

அவள் அழுது கொண்டே இருந்தாள் ஏதோ தூக்கத்தில் அழுகும் குழந்தைப் போல். அவளாகவே இல்லை என்பதை உணர்ந்தான். ஏதோ மின்னல் இடி மூலம் நடந்த பாதிப்பு என்பது புரிந்தது. அவளிடம் இன்னும் சில சமாதான வார்த்தைகள் பேச பேச… சிறியதாக இயல்புக்கு வந்தாள். அந்த நிமிடம் வரை அவள் என்ன செய்தாள் என்பது கூட நினைவில் இல்லை. கொஞ்சம் அவனிடம் இருந்து விலகி அவனையும் அவர்கள் இருக்கும் நிலையையும் யோசனையுடன் பார்த்தாள்.

இது அவனுக்கு சற்று கலக்கத்தை தந்தது. அவள் தன்னை தவறாக எண்ணிவிடுவாளோ என்று பயந்தான். அவளிடம் பிடித்தம் இருப்பது தெரிந்தது தான் அருகில் சென்றான். முதல் முறை பெண்ணின் அருகாமையில் நடந்த அனுபவம் கசப்பாகிவிடுமோ என்று கவலை.

அதற்கு நேர் மாறாக… விலகியவள் மீண்டும் அவன் கையணைபுக்குள் வந்துவிட்டாள். அப்போது தான் விஸ்ரானுக்கு போன உயிர் மீண்டும் வந்தது. நன்றாக அணைத்துக்கொண்டான். அதற்கான பதில் அவளின் இறுகிய அணைப்பில் காட்டினாள். அவனின் ஒரு கை முதுகிலும் மற்றொரு கை அவள் தலையிலும் வைத்து சேர்தனைதுக்கொண்டான். அவள் உடல் இன்னும் நடுக்கம் கொண்டு தான் இருந்தது.

இருவரின் நெருக்கத்தில் எந்த ஒரு காமம் இல்லை. எந்த நிலையிலும் உன்னை காப்பாற்றுவேன் என்று அவனும் என்னின் அடைக்கலம் நீ தான் என்று அவளும் எண்ணிக்கொண்டனர்.

அணைப்பில் இருந்து பிரிந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து லேசாக சிரித்துக்கொண்டனர். அங்கிருந்த சோஃபா வில் அமர்ந்து

தாரா - எனக்கு சின்னதுல இருந்து அப்பா இல்லை. அம்மா, பாட்டியும் தான். நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. அம்மா தையல் மூலமா சம்பாதிச்சு பார்த்துகிட்டாங்க. பாட்டியும் ஒரு நாள் செயல் இழந்து போக நானும் அம்மாவும் தான் எங்க உலகம்னு ஆகிடுச்சு. (சிறிது அமைதிக்கு பின்) ஒரு நாள் அம்மா கடைக்கு போய்ட்டு வர்ற அப்போ இதே மாதிரி மழை நல்லா பெய்ய ஆரம்பிச்சது. அப்போ நான் காலேஜ் முடிச்சிட்டு வீட்ல இருந்தேன். அப்போ அம்மா மேல மின்னல்…விழு …. ழு அதற்கு மேல் சொல்ல முடியாமல் தேம்பி அழுக ….

அவளை தோளோடு சாய்த்து ஆசுவாச படுத்த முயன்றான். இவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை யாரும் பாசம் இல்லாமல் வளர்ந்தவன்… என்ன ஆறுதல் வார்த்தை பேசு தெரியவில்லை என்றதும் அவளை தேற்ற முயன்றான். அதில் வெற்றியும் பெற்றான்.

மேலும் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக சிலர் நடக்க முயன்றது… இவளை தவறாக எண்ணி ஒதுக்கியது என்று அவள் கஷ்டபட்டதை கூறினாள்.
கதையை அவள் சொல்லி முடிக்கவும்….போன கரெண்ட் திரும்ப வரவும் சரியாக இருந்தது.

அப்போது தான் அவள் முகம் சரியாக தெரிந்தது. கண்கள் மூக்கு எல்லாம் சிவந்து, தலை முடி எல்லாம் களைந்து இருந்தாள். டவல் கொண்டு முகத்தை துடைத்து கையால் தலை முடியை சரி செய்து விட்டு… இரு பக்கம் கன்னத்தையும் லேசா கில்லி விட்டான். இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.


கீழே சென்று ஒரு அட்டெண்டன்ஸ் போடுவோம் என இருவரும் சென்றனர். டிவி ஆன் செய்து தாமஸ் , தேன்மை இருவரிடமும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

தாமஸ் - தீரா ! நாளைக்கு எப்போ ஃப்ரீ ஆ இருப்ப?? கொஞ்சம் வெளிய போகனும்.

தீரன் (யோசனையுடன்) - எங்க தாத்தா?

தாமஸ் - போலீஸ் ஸ்டேசன் என்றார் சிறிதும் அலட்டல் இல்லாமல்.

இதனை கேட்ட தியா மற்றும் தீரன் ஒரு நிமிடம் பயந்தே விட்டனர்.

தீரன் (சாதாரணமாக) - எதுக்கு தாத்தா? என்ன விஷயம் ?

தாமஸ் - எல்லாம் உன் விஷயம்தான்

இதனை கேட்டுக்கொண்டு இருந்த தியாவுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. ஆனால் எதையும் வெளியில் காட்டாமல் அமர்ந்து இருந்தாள்.

தீரன் - புரியல தாத்தா? என்னோட விஷயம்மா? என்ன அது?

தாமஸ் - அது ஒன்னும் இல்லப்பா…. உன்ன கண்டுபிடிச்சி தர சொல்லி போலீஸ்ட்ட புகார் கொடுத்து இருந்தோம். அதான் நீயே வந்துட்டியே …. அதான் கொடுத்த புகார் திரும்ப வாங்க போகலாம்

தீரன் - சரி தாத்தா! கண்டிப்பா போகலாம்.

ஒருவேளை மீண்டும் சந்தேகம் வந்துவிட்டதா என்று இருவரும் குழம்பி போயினர்.

தேன்மை - பேசினது போதும் வாங்க சாப்பிடலாம்…

அப்போது தான் தீரனுக்கு ஒன்று நினைவில் வந்தது…. மழை பெய்யுது என்று வள்ளி அக்காவை நேரத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அப்போ இரவு உணவு தாமஸ் மற்றும் தேன்மை தான் சமைத்து இருக்க வேண்டும் சென்று சரியாக யூகித்தான். இப்போது தாத்தா சொன்ன விடயம் வேறு மனதை குழப்ப… இரவு உணவில் எதுவும் கலந்து வைத்திருந்தால் என்ன செய்வது என யோசித்தான். அவன் யோசனையுடன் இருப்பது தியா(தாரா) கவனித்தாள்.

தாமஸ் சாப்பிட முன்னால் சென்று இருக்க… தீரன்… தியாவைப் பார்த்து வேண்டாம் என்ற வாரு தலையை அசைத்தான்.

(அதனை புரிந்த கொண்டு) தியா - பாட்டி எனக்கு பசிக்கல… டிராவல் பண்ணி வந்தது ஒரு மாதிரி இருக்கு அதுனால எனக்கு எதுவும் வேண்டாம் என்றுவிட்டாள்.

தீரன் - எனக்கும் வேண்டாம் பாட்டி… மதியம் நல்லா சாப்பிட்டேன்… காலையில இனிமேல் சாப்டுகிறேன்.

அவர்களை மேலும் வர்புறுத்தாமல்… அவர்களும் விட்டு விட்டனர். இரவும் சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு தூங்க நேரம் ஆகவும் மாடிக்கு வந்துவிட்டனர்.

இவர்கள் டிவி பார்கிறேன் என்ற பேர்வழியில் தரையை நோட்டம் விட்டனர் எதுவும் வித்தியாசமாக இருக்கிறதா என்று. பழமையான பொருட்கள் இருக்கும் வீடு…. இதில் ஹால் பாதி இடங்கள் கவர் செய்வது போல் அரக்கு கலர் விரிப்பு போட்டு இருக்கும் (விரிப்பு பழங்காலத்தில் வேறு ஏதோ ஒரு வெளிநாட்டில் செய்ய பட்டது போல் இருந்தது). அப்போது தாரா ஒன்றை கவனித்தாள் அந்த விரிப்பில் கரையோரத்தின் ஒரு பகுதியில் சில சேதம் இருப்பதை.

ரூம் வந்தது இருவரும் ஒரே நேரத்தில் “நான் ஒரு விஷயம் சொல்லனும் “

முதல்ல நீயே சொல்லு என்றான். தாரா தான் கீழே பார்தவற்றை அவனிடம் சொன்னாள்.

தாரா - அங்க ஏதாவது விஷயம் இருக்க வாய்ப்பு இருக்கா??

விஸ்ரான் - நல்ல கவனிச்சிருக்க… கண்டிப்பா அங்க என்ன இருக்குனு பார்க்கலாம் (பின் கொஞ்சம் தயங்கி) உன்கிட்ட ஒன்னு சொல்லனும்

தாரா - எதுக்கு தயக்கம் தீரன். சொல்லுங்க… நான் ஏதாவது உதவி செய்யனுமா???

விஸ்ரான் - நாளைக்கு தாமஸ் போலீஸ் ஸ்டேசன் வர சொல்லிருக்காங்க… அது தான் பிராப்ளம்..

தாரா - ஆமா… போலீஸ் உங்களை பார்துட்டா… நம்ம பணம் எடுத்த அப்புறம் பிராப்ளம் வர வாய்ப்பு இருக்கு…

விஸ்ரான் - அதுக்கு முன்னாடியே பிராப்ளம் தான்.


தாரா - என்ன சொல்றீங்க தீரன்.. எனக்கு புரியல

விஸ்ரான் - அது வந்து…. நான் ஜெயில்ல இருந்து தப்பி ஓடிவந்த கைதி….

இதனை கேட்டு ஷாக் ஆகிவிட்டாள். சற்றும் எதிர் பாராத ஒன்று தாராவுக்கு. அவளின் முகபாவனை வைத்தே கண்டுபிடித்து விட்டான்.

தாரா - இதை ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை

விஸ்ரான் - அது வந்து தாரா… சொல்றதுக்கு வாய்ப்பு கிடைக்கல..

அவன் சொல்லுவதில் உள்ள உண்மை புரிந்தது… நேற்று இரவு பார்த்தான் ஒருவன்… இன்று காலையில் இருந்து இப்பொழுது வரை திகிலாகவே சென்று இருக்கிறது… அவனைப் பற்றி சொல்லுவதுக்கு எங்கே இருந்தது நேரம்.
அவன் தரப்பு நியாயம் புரிந்தது. மேலும் இவன் என்ன மாதிரி தப்பு செய்து சிறைக்கு சென்றான் என்பது தெரியாத போது என்ன பேசுவது என்பது போல் அவனைப் பார்த்தாள். அவள் கேள்வியாக அவனை நோக்குவது புரிய

விஸ்ரான் - கொள்ளை அடிசிருக்கேன் பணக்காரங்க கிட்ட இருந்து… நிறையா முறை ஜெயில்ல இருந்து தப்பிச்சிருக்கேன். அதான் தனிமை படுத்த பட்ட ஜெயில்ல போட்டாங்க… அங்க இருந்து தப்பிச்சு இந்த கிராமத்துக்கு வந்தேன்… அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே.


தான் செய்வது தவறு என்று ஒத்துக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும் அது விஸ்ரானிடம் அதிகமாக இருந்தது. ஜெயில் கைதி என்றும் திருடன் என்றும் நினைத்து அவனை ஒதுக்க மனம் வரவில்லை. அவளே திருடத்தான் வந்துள்ளாள். தன்னை நேர் வழியில் இருந்து குறுக்கு வழிக்கு மாற்றிய மாதிரி ஒரு கதை அவனுக்கும் இருக்கும் என்று நம்பினாள். அப்படியே இல்லை என்றாலும் அவனை அவனுக்காகவே பிடித்தது.

தாரா - புரியுது தீரன். நாளைக்கு அங்க போறதுல இருந்து எப்படி தப்பிக்க???

விஸ்ரான் - அது தான் தெரியல… இன்னைக்கு நடந்த மாதிரி ஏதாச்சும் நடந்து நம்மளை காப்பாத்தி விடும்… நாளைக்கு ஒரு நாள் கடத்திட்டா போதும்… முடிஞ்சா நாளைக்கு நைட் எல்லாமே எடுத்துட்டு கிளம்பிடலாம்.

தாரா - சரி! எனக்கு தரையில படுத்தாதான் தூக்கம் வரும் என்றவள் ஒரு போர்வை எடுத்து கீழே விரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

விஸ்ரான் ஒன்று கேட்கவில்லை… அவனில் நினைப்பு எல்லாம் இன்று இரவு அந்த அறையை கண்டுபிடிப்பது மேலும் நாளைக்கு போலீஸ் ஸ்டேஷன் செல்லாமல் தடுப்பது என்பதில் சுத்திக்கொண்டு இருந்தது.

விஸ்ரான் - கொஞ்சம் நேரம் போன அப்புறம் நம்ம நீ சொன்ன அந்த விரிப்புக்கு கீழ எதுவும் இருக்கானு பார்க்க போகலாம்.

தாராவின் மனதில் அந்த திட்டத்தோடு வேறு ஒரு திட்டம் தோன்ற அதனை கூறாமல் மனதில் வைத்துக்கொண்டாள். அவளிடம் விஷயத்தை சொன்னதும் படுத்து உறங்கி விட்டான்.
 
Top