துருவ் சொர்கத்தில் எல்லா வசதியுடன் இருந்தாலும் அவன் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு தான் மனம் ஏங்கியது. அவளுடன் முதல் முதலாக நேரடியாக பேசியதை நினைத்துப்பார்த்தான்.
அன்று…
அவன் வகுப்பில் நுழையும் போதே மித்ருதாவை பார்த்துவிட்டான். அவளும் அவனை பார்த்ததையும் கவனித்தான். இப்போதும் இருவரும் எதிர்பாராத சந்திப்பு தான். துருவுக்கு உள்ளே கொண்டாட்டமாக இருந்தது. அதனை எதுவும் வெளியில் காட்டவில்லை. வேலையில் எப்போது கவனமாக, அதற்கான மதிப்போடு, நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இருப்பான். எனவே அவன் ஆர்வத்தை காட்டும் இடம் அதுவல்ல என்பதை புரிந்து நடந்து கொண்டான்.
மித்ருதா அதிர்ச்சியாக இருந்தாள். இவன் பேராசிரியரா? என கவலையாக இருந்தது. இவளுக்கு அவன் மேல் ஏதோ சின்ன ஆர்வம் அவ்வளவு. அவன் வாத்தியார் என்று தெரிந்த பின் அந்த ஆர்வம் இருந்து இடம் தெரியாமல் போனது.
துருவ் அவனைப் பற்றி ஒரு சின்ன விரிவுரை கொடுத்தான். அவன் phd scholar என்பதை கூறிய பின் தான் மித்ருதா மனம் ஆறுதல் அடைந்தது. அவனும் படிக்க தான் வந்து உள்ளான் என்பது தெரிந்த பின், போன ஆர்வம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
அவன் பெயர் சொன்னவுடன் அதனை மனதில் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன் என்ற நினைத்து வாய்விட்டு ‘ துருவ் கிருஷ்ணா ‘ என சத்தமாக சொல்லிவிட… வகுப்பில் இருக்கும் அனைவரின் பார்வையும் இப்போது அவள் பக்கம் சென்றது.
துருவ் வியப்பாக அவளையே பார்த்தான். அருகில் இருந்து நித்யா, மித்துவின் கையில் லேசாக கிள்ளி விட்டாள். அப்போது தான் மித்ருதாவுக்கு நிதர்சனம் புரிந்தது. எல்லோரும் அவளையே பார்த்து சிரிக்கும் போது‘ ஐய்யோ ‘ என்று ஆகிவிட்டது. அதுவும் துருவுவின் பார்வை அவளையே துளைக்க இன்னும் சங்கடமாகிவிட்டது.
அவன் அதனை பெரிது பண்ணாமல் எல்லோரையும் திசை திருப்பும் பொருட்டு ஒவ்வொருவரின் பெயர் கேட்டக ஆரம்பித்துவிட்டான். இந்த வகுப்பை எடுக்க வேண்டிய பேராசிரியர் தான் இவன் கைடு எனவே அவர் தான் அவருக்கு பதில் இவனை போக சொன்னார். அவன் அவர்களின் பெயரை கேட்க வேண்டிய அவசியம் இல்லை தான். என்றோ ஒருநாள் அவன் பேராசிரியர் சொன்னால் வகுப்பு எடுத்தால் போதும். அவனுக்கு இவள் பெயர் தெரியவேண்டும். அதுவும் மற்றவர் கண்களுக்கு தனியாக தெரியாமல் அவளிடம் பேச வேண்டும் அதனால் இதுவே ஒரே வழி எனவே இப்படி செய்தான்.
ஒவ்வொருவராக அவர்கள் பெயர் சொல்ல துருவுக்கு ஆர்வம் தாங்கவில்லை. ஆனால் மித்ருதா பதற்றமாக அமர்ந்திருந்தாள். அவள் முறை வர இன்னும் சில மாணவர்களே மீதம் இருக்க…. கை எல்லாம் சில்லிட்டு இருந்தது. இப்போது தான் அனைவரின் முன்பு அவன் பெயரை சொல்லி பல்ப் வாங்கினாள். எனவே பதற்றமாக இருந்தாள்.
இவள் முறை வரும் போதே அனைவரும் மீண்டும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். மித்ருதா ஒரு மாதிரி ஆகிவிட்டாள். அதனை உணர்த்த துருவ் அனைவரையும் அமைதியாக இருக்கும் படி சொன்னான்.
துருவ் - எல்லாரும் அமைதியாக இருங்க. ம்ம் உங்க பேரு சொல்லுங்க
மித்ருதா - என்னோட பேரு மித்ருதா என சொல்லிவிட்டு வேகமாக அமர்ந்துவிட்டாள்.
அவள் பெயர் தெரிந்த உடன் அவனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. உள்ளுக்குள் அவளை போலவே சொல்லிப் பார்த்தான்… மனதுக்குள் தான். பின் அடுத்தவர் பெயர் கேட்ட ஆரம்பித்துவிட்டான். ஆனால் யாரின் பெயரும் அவன் மனதில் நிற்கவில்லை அவள் பெயரைத் தவிர. இரண்டாம் நாள் வகுப்பு என்பதால் படம் எடுத்தான். அவன் குரலின் மாயமா இல்லை புரியும் படி சொல்லுவதா என்பது தெரியவில்லை அனைவரின் கவனத்தையும் அவன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டான். அவன் நடத்தி முடிக்கும் வரை ஒரு சத்தமும் இல்லை.
அவன் தோழமையாக பழகியதால் அனைவருக்கும் அவனை பிடித்தது. குறிப்பாக பெண்களுக்கு. அவன் அதனை கண்டுக்கவில்லை. இடையில் ஒரு பார்வை கூட மித்ருதா மேல் படவில்லை. அதில் கவனமாக இருந்தான். அவன் இருக்கும் பணி அவ்வாரானது. அதற்கான மரியாதை கொடுத்தான்.
மித்ருதாவுக்கு அவன் கொஞ்சம் கண்டிப்பானவன் தான் என்பது புரிந்தது. வகுப்பு முடிந்ததும் பொதுவாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
நித்யா - என்ன டி மித்து எதுக்கு அவரை பெயர் சொல்லி கூப்பிட்ட? எல்லாருக்கும் கேட்டுடுச்சு… என கவலையாக சொன்னாள்.
மித்ருதா - நான் மைண்ட் வாய்ஸ் நினச்சு சத்தமா சொல்லிட்டேன். தெரியாம தான் டி. அவர் எதுவும் நினைச்சிப்பாரா? என தயங்கி கேட்டாள்
நித்யா - அப்படி ஒன்னும் தெரியல. அவர் கண்டுக்கவே இல்லை. நீ ஃப்ரீயா விடு என தோழியின் மனதை சாந்தப்படுத்தினாள்.
இடைவெளி வர… எப்போதும் போல் டீ, ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட கேன்டீன் சென்றனர். அங்கு தான் துருவ்வும் இருந்தான். அவள் வருவதை கவனித்தான்… அவள் அவனை பார்க்கும் முன்பு அங்கு இருந்து கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் போய் மறைந்துவிட்டான். அவள் கண்கள் அலைபாய்ந்தது. மித்ருதா தன்னை தேடுகிறாள் என்று தெரிந்தும் மறைந்து இருந்தான். காலேஜ்ல் இருவரின் பெயரும் அனைவரின் வாயில் அரைபட அவனுக்கு விருப்பம் இல்லை. அவனுக்கு இரண்டு முறை பார்த்த பெண், சின்ன ஈர்ப்பு, இப்போது ஒரே காலேஜ் பேசினால் என்ன என்ற எண்ணம். அதனை காலேஜ் உள்ளே பண்ண கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
மித்ருதா ஏமாற்றத்துடன் திரும்பி சென்றாள். அவனை பார்க்கவில்லை என்றால் ஏன் ஏமாற்றமாக இருக்கிறது என அவளுக்கு தெரியவில்லை.
துருவுக்கு அவளிடம் பேச ஆசையாக இருந்தது. வெளியில் என்றாவது சந்திக்க வாய்ப்பு அமையும் என்று நம்பினான். அது அந்த வாரமே வரும் என்று நினைக்கவில்லை.
வார இறுதியில் நித்யா மித்ருதா வீட்டுக்கு வந்தாள்.
நித்யா - ஹாய் ஆன்டி! நல்லா இருக்கீங்களா? அங்கிள் எப்படி இருக்காங்க? என்று சிரித்த முகத்துடன் வினாவினாள்.
ஜெயந்தி - அடடே! நித்யா வா வா உள்ள வா. எல்லாரும் நல்லா இருக்கோம். வீட்ல எப்படி இருக்காங்க?
நித்யா - எல்லாரும் நல்லா இருக்கோம் ஆன்டி. மித்ருதா எங்க இருக்கா?
ஜெயந்தி - அவா குளிச்சிட்டு இருக்கா. நீ அவா ரூமுக்கு போ. இப்போ வந்திருவா.
நித்யா சரி என்றபடி மித்ருதா அறைக்கு சென்றாள். அப்போது சரியா மித்ருதா குளித்துவிட்டு வந்தாள்.
மித்ருதா - என்ன டி நித்யா சொல்லாம வந்திருக்க? என்ன விஷயம்? என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.
நித்யா - நண்பி டி நீ. நான் ஏதோ காரியமா தான் வந்துருக்கேன்னு கரெக்ட் ஆ கண்டுபிடிச்சிட்ட
மித்ருதா - உன்ன பத்தி தெரியாதா. சரி சொல்லு என்ன விஷயம் என வினாவியவாறே அறைக் கதவை சாத்தினாள்.
நித்யா - அது என்னைய கல்யாணம் பண்ணிக்க போற விஷ்வாவ இன்னைக்கு நேர்ல சந்திக்க போறேன் அதான் நீயும் கூட வா டி பிளீஸ்.
மித்ருதா - லூசா டி நீ. அவரை நீ தனியா சந்திக்க போற அதுக்கு நான் எப்படி கூட வர முடியும். அதுவும் இல்லாம என்ன வெளிய விட மாட்டாங்க வீட்ல. உனக்கு தெரியும் தான.
நித்யா - நான் அவர்கிட்ட சொல்லிட்டேன். அவர் எதுவும் நினைச்சிக்க மாட்டாரு. அவர் கிட்ட ஒரு 10 நிமிஷம் தான் பேசுவேன். அதுக்கு அப்புறம் நம்ம மால்ல சுத்தலாம். நீயும் வெளிய வந்த மாதிரியும் இருக்கும். எவ்வளவு நாள் தான் நீயும் வீட்டுக்கு உள்ளேயே இருப்ப என நித்யா கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.
மித்ருதா - எனக்கும் வெளிய போகனும்னு தான் ஆசை. ஆனால் அம்மா அப்பா விட மாட்டாங்க. அதுனால நான் கேக்குறதையே விட்டுட்டேன் என சொல்லிவிட்டு கண்ணாடி முன் சென்று தலைவார ஆரம்பித்து விட்டாள்.
நித்யா - அவ்வளவு தான. விடு அதை நான் பார்த்துக்கிறேன். உனக்கான பெர்மிஷன் நான் வாங்கி தர்றேன் மித்து. நோ வேர்ரிஸ் என சொல்லிவிட்டு கதவை திறக்க சென்றாள்.
வேகமாக சென்று அவள் கையை பிடித்து நிறுத்திய மித்ருதா
மித்ருதா - அடியேய், நீ பாட்டுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட அவரை சந்திக்க போறேன்னு சொல்லிடாத. எங்க அம்மா அப்பாக்கு தெரிஞ்சா நம்ம ப்ரெண்ட் ஷிப்ப கட் பண்ணிவிட்டுடுவாங்க.
நித்யா - அடி பாவி. நான் என்னோட அம்மா அப்பாக்கே இவ்வளவு பயந்தது இல்லை. சரி விடு பாத்துக்கலாம் என கூறிவிட்டு கிச்சன் நோக்கி சென்றாள்.
ஹாலில் மித்ருதா அப்பா சங்கர் அமர்ந்து இருந்தார். அவரிடம் பணிவாக பேசிவிட்டு ஜெயந்தியிடம் பேச சென்றாள்.
ஜெயந்தி - வா நித்யா, மித்ருதா குளிச்சிட்டு வந்துட்டாளா? பேசிட்டியா?
நித்யா - இல்ல ஆன்டி இன்னும் குளிச்சிட்டு தான் இருக்க. அங்க சும்மா உட்கார போர் அடிச்சது அதான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்.
எங்கே அவள் குளித்து வந்து விட்டது தெரிந்த பின் வெளியே போவதற்கு அனுமதி கேட்டால்… இருவரும் பேசி வைத்துக்கொண்டு கேட்பது போல் ஆகும் என்பதால் மாத்தி சொன்னாள்.
ஜெயந்தி - அவா அப்பவே குளிக்க போனா.. இன்னுமா வரல??...
நித்யா - பொறுமையாவே வரட்டும் ஆன்டி. அப்புறம் ஒன்னு கேக்கனும் என தயங்க
ஜெயந்தி - எதுவா இருந்தாலும் சொல்லு நித்யா..
நித்யா - ஆன்டி, மித்ருதாவ என்கூட வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரவா. ஷாப்பிங் பண்ண மால் தான் போறேன். மித்ருதா கிட்ட கேட்டா எப்படியும் வரலனு தான் சொல்லுவா. நீங்க கொஞ்சம் கேட்டு பாருங்க என பிளேட்டை அவர் பக்கம் சாமர்த்தியமாக திருப்பினாள்.
ஜெயந்திக்கு பெருமையாக இருந்தது மித்ருதா நினைத்து. நித்யா சொல்வதை வைத்து அவர் புரிந்து கொண்டது… இதுக்கு முன்னாடி நித்யா வெளிய போக கேட்டு தன் மகள் மறுத்து இருக்கிறாள் என நினைத்துக்கொண்டார்.
நித்யா போட்ட பிளான் நன்றாக வேலை செய்தது.
ஜெயந்தி - அதுக்கு என்ன நித்யா. போய்ட்டு வாங்க. ஆனா சீக்கிரம் வீட்டுக்கு வந்துரனும். எங்களுக்கு அதுதான் முக்கியம் என்றார்.
நித்யா - தேங்க்ஸ் ஆன்டி. கண்டிப்பா சீக்கிரம் வந்துருவோம் என சொல்லும் போதே மித்ருதா உள்ளே வந்தாள்.
நித்யா அவளை பார்த்து கண்ணடித்து செய்கை செய்தாள். அதனை மித்ருதா புரிந்துகொண்டாள். இருந்தும் அவளால் நம்பவே முடியவில்லை.
ஜெயந்தி - உனக்கு குளிக்க இவ்வளவு நேரமா பாப்பா. நித்யா எவ்வளவு நேரமா வெயிட் பண்றா தெரியுமா? சரி அவளுக்கு மால் போனுமா. நீயும் கூட போய்ட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்துரு என சொன்னார்.
மித்ருதா - இல்ல மா. எனக்கு டயர்ட் ஆ இருக்கு. நான் போகல என அம்மாவின் குணம் அறிந்தே அப்படி சொன்னாள்.
ஜெயந்தி - இந்த வயசுல என்ன டயர்ட் ஆகுது. கிளம்பி போய்ட்டு வா என சொல்லிவிட்டு சங்கரிடமும் மித்ருதா வெளியே நித்யா உடன் போவதாக தெரிவித்தார். அவர் மனைவி பேச்சுக்கு மறுப்பேச்சு இன்றி சரி என்றார். அவள் கையில் ஒரு லிஸ்ட் கொடுத்து கொஞ்சம் பொருள் வாங்கி வர சொன்னார்.
மால் வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கினர். மித்ருதாவுக்கு சந்தோசமாக இருந்தது. இப்படி தோழியுடன் வெளியே சுற்றனும் என பல நாள் ஆசை நிறைவேற போவதை நினைத்து சந்தோசமாக இருந்தது. அப்போது விஷ்வா இவர்களை பார்த்து கையை அசைத்தான். நித்யாவுக்கு வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. அவள் குதூகலமாக இருந்தாள். மித்ருதாவுக்கு அவளை பார்க்க வித்தியாசமாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
நித்யா விஷ்வாவுக்கு அவளை அறிமுக படுத்தினாள். அவர்களுடன் சேர்ந்து நடக்க ஒரு மாதிரி சங்கடமாக இருக்க…
மித்ருதா - நீங்க முன்னாடி போங்க. நான் இங்க சூப்பர் மார்க்கெட்ல இருக்கேன். வீட்டுக்கு சில பொருளை வாங்க இருக்கு. நித்யா, பேசிட்டு அங்க வா… இல்லைனா நீ எங்க இருக்கனு ஃபோன் பண்ணு நான் வர்றேன். ஹவ் ஃபன் (Have Fun) என சொன்னாள்.
இருவரும் அவளை வருபுறுத்தாமல் சரி என்றனர். மித்ருதா சந்தோசமாகவே சூப்பர் மார்கெட் இருக்கும் அண்டர் கிரவுண்டுக்கு சென்றாள்.
அங்கு டிராலி எடுத்துக்கொண்டு ஒரு ஒரு பிரிவாக சென்று தேவையான பொருட்களை எடுத்தாள். அப்போது தெரியாத்தனமாக பக்கத்தில் உள்ள டிராலியில் இடித்து விட… நிமிர்ந்து பார்க்கும் போது தான் கவனித்தாள் அது துருவ் .
அவனுக்கும் அது எதிர்பாராத சந்திப்பு. இது பொது இடம் என்பதால் தைரியமாக அவளை பார்த்து சிரித்தான். அவள் பதிலுக்கு சிரிக்கவா வேண்டாமா என்று யோசிக்கும் போதே
துருவ் - ஹாய் மித்ரா
மித்ருதா - என்னோட பெயர் மித்ருதா …. சார் என்றாள் அந்த சார் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து. ஆனால் அவன் மனதில் அவள் மித்ராவாகத்தான் பதிந்தாள்.
அவளின் சார் என்ற அழைப்பில் லேசாக சிரித்த துருவ்
துருவ் - நான் phd scholar தான் மா. உன்ன மாதிரி நானும் ஒரு ஸ்டூடண்ட் அவ்வளவு தான். என்னோட கைடு ஒரு கிளாஸ் எடுக்க சொன்னாரு ஒரு எக்ஸ்பிரியன்ஸ் காக அதான் அன்னைக்கு கிளாஸ் எடுத்தேன். தினமும்லா வர மாட்டேன் என்று விளக்கம் கொடுத்தான்.
மித்ருதா - ஓஓஓ அப்போ உங்களை தினமும் பார்க்க முடியாதா என வாய் தவறி வினாவினாள்.
அவன் அவளை லேசாக நமட்டும் சிரிப்புடன் பார்க்க.. அப்போது தான் அவள் கேட்டதுக்கான அர்த்தம் புரிய தலையில் அடித்துக்கொண்டாள்.
மித்ருதா - அது நான் அந்த அர்த்ததுல கேக்கல சார். கிளாஸ் வரமா வேற என்ன வொர்க் இருக்கும்னு கேக்க வந்தேன்… அது மாத்தி… தெரியாம என்று விளக்கம் கொடுக்க முயன்றாள்.
துருவ் - புரியுது மித்ரா. ஆய்வுக்கட்டுரை ( Thesis) வொர்க் இருக்கும். அப்புறம் சார்ன்னு எல்லாம் கூப்பிட வேண்டாம். துருவ் அப்படினு கூப்பிடலாம் என இருமுறை பார்த்த பெண் என்பதால் உரிமையாக பெயர் சொல்லி அழைக்க சொன்னான்.
பேசிக்கொண்டே இருவரும் அவரவர் டிராலியை தள்ளிக்கொண்டு நகர்ந்தனர். மித்ருதாவை பெயர் சொல்லி கூப்பிட சொன்னதுக்கு அவள் எதுவும் கூறவில்லை. அவன் அங்கு பேராசிரியர் இல்லை என்பதால் பெயர் சொல்லி கூப்பிட அவளுக்கு எந்த ஒரு ஆட்சியபனையும் இல்லை.
துருவ் - காலேஜ் ல பெயர் சொல்லி கூப்பிட்டுராத. அப்புறம் அடுத்த நாள் நம்ம தான் கண்டேன்ட் (content) ஆகிருவோம். நான் சொல்லுறது புறியும்னு நினைக்கிறேன் என மென்மையாகவே சொன்னான்.
மித்ருதா மனதில் அப்போ காலேஜ் இல்லாமல் வேற எப்போ நம்ம பேச போறோம் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கேட்கவில்லை.
மித்ருதா - ம்ம் புரியுது துருவ் என இருவரும் பல நாள் பழகிய நண்பர்கள் போல் பேசினர்.
துருவ் - தனியாவா வந்த.. கூட யாரும் வரலையா
மித்ருதா - இல்லை பிரெண்ட் கூட வந்தேன் என நித்யா பற்றி சொன்னாள்.
துருவ் - ம்ம் ஓகே மித்ரா. முதல் சந்திப்பு நியாபகம் இருக்கா ? என குறும்பாக வினாவினான்.
அதில் மித்ருதாவுக்கு லேசாக சிரிப்பு வந்தது.
மித்ருதா - எனக்கு நியாபகம் இல்லை ப்பா என வேணும் என்றே பாசங்கு செய்தாள்.
துருவ் விளையாட்டாக முறைத்து பார்க்க…
மித்ருதா - அப்புறம் என்ன துருவ் , என்னால எப்படி அதை மறக்க முடியும். தீடீருனு ஒருத்தர் முன்னால வந்து டிரஸ் உனக்கு நல்லா இருக்குனு சொன்னா ஷாக் ஆகாதா? என்றாள் சிரித்துக்கொண்டே
அதனை ரசனையாக பார்த்த துருவ்
துருவ் - அது நீ ஷாக் ஆன மாதிரி இல்லயே. வெட்க பட்ட மாதிரில தெரிஞ்சது
இதனை கேட்டதும் மித்ருதா முகம் இப்போதும் வெட்கத்தில் சிவந்தது. இதனை கவனித்த துருவ்
துருவ் - இதோ இப்போ சிவந்த மாதிரி தான் என்று சொல்லி விட்டு முன்னால் சென்றான்.
மித்ருதாவுக்கு ‘ அய்யயோ ‘ என்று ஆகிவிட்டது. ஆனால் அவனிடம் பேச தூண்டும் மனதை அவளால் நிறுத்த முடியவில்லை. தன்னை சரி செய்துகொண்டு அவனோடு சேர்ந்து நடந்தாள்.
மித்ருதா - ஆமா பொண்ணுங்களுக்கு பாராட்டினா வெட்கம் வரும். அது இயல்பு தான்
துருவ் - நல்லா பேசுற மித்ரா என இப்போதும் பாராட்டினான்.
மித்ருதா சிரித்தாளே தவிர ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் அவர்களுக்கு தேவையானவற்றை பேசிக்கொண்டே எடுத்து முடித்திருந்தனர்.
துருவ் - என்னோட ஷாப்பிங் முடிஞ்சது. உனக்கு இன்னும் எதுவும் வாங்க வேண்டியது இருக்கா?
மித்ருதா - அவ்வளவு தான் துருவ். பில் போட போகலாம் என்று சொன்னவாறே பில் போடும் இடம் நோக்கி சென்றனர்.
ஒருவன் போகும் போது மித்ருதாவை வேணும் என்றே இடிப்பது போல் வர… துருவ் அவள் பக்கத்தில் நெருக்கமாக வந்து அவன் போகும் வரை நின்றான். இவ்வளவு நேரம் பேசினாலும் இருவரிடமும் தூரம் இருந்தது. அவனின் நெருக்கம் தப்பான நோக்கம் இல்லை என்பதை புரிந்த மித்ருதா
மித்ருதா - தேங்க்ஸ் துருவ் என்றாள் மனமார. அதுக்கு லேசாக கண்டிமிட்டல் மட்டுமே அவனிடம். அதில் பெண் மனம் லேசாக தடுக்கி விழுந்தது.
பில் போடும் போது மித்ருதா ஃபோன் நம்பரை கடை ஊழியர் கேட்க… அதனை பின்னாடி இருந்து கவனித்த துருவ் மனப்பாடம் செய்தான். அவனின் செயல் ஸ்கூல் பையன் செயல் போல் இருக்க அவனுக்கே கொஞ்சம் கேவலமகத்தான் இருந்தது. கௌரவம் எல்லாம் பார்த்தால் பெண்களின் ஃபோன் நம்பர் கிடைக்குமா என மூளை அவனுக்கு வக்காலத்து வாங்கியது.
அதே போல் துருவிடமும் ஃபோன் நம்பர் கேட்ட… மித்ருதா அதனை மனதில் பதிய வைத்தாள்.
இருவரும் என்ன பேச என தெரியாமல் திணற
துருவ் - சரி மித்ரா…. ‘ கிளம்ப போறேன் ‘என சொல்ல மனம் வரவில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் பேசினால் என்ன என்று தோன்றியது.
துருவ் - நான் நித்யா வர வரைக்கும் வெயிட் பண்ணவா?
மித்ருதா - இல்ல துருவ், அவா இப்போ வந்துருவா. நீங்க கிளம்புங்க.
துருவ்- சரி மா, பை. இன்னொரு நாள் பார்க்கலாம் என கை குலுக்க கையை நீட்டினான்.
மித்ருதா எந்த வித ஆட்சியபணை இன்று அவன் கையோடு கை சேர்த்தாள். துருவின் மனம் அவள் கையை கடைசி வரையிலும் விட்டுவிடாதே என சொன்னது. அதனை கேட்டது அவனுக்கு அதிர்ச்சி தான். அவனுக்கு அவள் மேல் சின்ன ஈர்ப்பு, பேசினால் சரியா போகும் என்பதால் பேசினான். இப்போது அவள் தோழி அவ்வளவே என்று நினைத்தான். ஆனால் மனம் இவனை கேட்காமல் வேறு கணக்கு போட்டது. மேலும் குழப்பிக் வேண்டாம் என்பதால் அவளிடம் மீண்டும் ஒரு முறை ‘பை‘ சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அவன் சென்றதும் மறு நொடி, மித்ருதா அவன் ஃபோன் நம்பர் ஐ பதிவு செய்தாள். இன்னும் கொஞ்சம் நேரம் சென்றால் கண்டிப்பாக மறந்து போகும் எனவே உடனே செய்தாள். அவள் ஃபோன் செய்து பேசுவாளா என்பது எல்லாம் அவளுக்கு தெரியாது. அவனே அவளிடம் நம்பர் கேட்காத போது தான் வழிய சென்று கேட்டால் நன்றாக இருக்காது என்பதனால் இப்படி செய்தாள்.
விஷ்வா நித்யாவிடம் பேசிவிட்டு கிளம்பி இருந்தான். நித்யா கீழே வந்து மித்ருதாவை சந்தித்தாள். அவளுடன் நேரம் செலவு செய்யாததுக்கு சாரி சொன்னாள். மித்ருதா அவளுக்கு கிடைத்த தனிமையை நன்றாக செலவு செய்ததாக சமாதானம் கூறிய பின் தான் நித்யா நிம்மதி ஆனால். அவள் துருவை சந்தித்ததையோ பேசியதையோ எதுவும் சொல்லவில்லை.
இருவருமாக கொஞ்ச நேரம் அங்கு சுற்றி திரிந்து, பிடித்ததை வாங்கி சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினர். பெட்டில் படுத்த மித்ருதா அவனை பற்றி தான் சிந்தித்தாள். இது வெறும் நட்பு தான் என நம்பிய பின் தான் தூக்கமே வந்தது.
துருவுக்கு இவள் நினைவு தான். இவளிடம் ஏதோ உரிமை உணர்வு ஏற்படுவதாக தோன்றியது.
நிகழ்காலம்….
இதனை சொர்கத்தில் இருந்து நினைத்து பார்த்த துருவ் அமைதியாக படுத்து இருந்தான். மீண்டும் அவன் வாழ்கை மித்ருதா உடன் முதலில் இருந்து தொடங்க ஆசை வந்தது. மித்ருதா என்ன செய்கிறாள் என்று பார்க்க அவள் தூக்கத்தில் கையை அருகில் இல்லாத துருவை தேடிக்கொண்டு இருந்தது. அந்த பெண்ணை நினைக்க நினைக்க பாவமாக இருந்தது. அவள் சந்தோசமாக இருக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்தான்….