ராஜா சொல்லுவதை புரிந்து கொள்ள துருவுக்கு சில வினாடிகள் தான் தேவைப்பட்டது. ‘ திரும்ப சொர்கத்துக்கு வர்ற வரைக்கும்னா ? ‘ என யோசித்த நொடி புரிந்து விட்டது.
துருவ் - ஹேய் என்ன சொல்றீங்க… அப்போ நான் திரும்ப வாழ போகலாமா? என பரவசமாகி விட்டான்.
ராணி - ஆமா, நீ தான மித்ருதாவுக்கு நல்லது நடக்கணும்னு கேட்ட.. அதான் நடக்க போகுது.. அதுவும் உன்னால என்றாள் சந்தோசமாக.
துருவ் - ஆமா, ஆனா என்னால திரும்ப பூமிக்கு போக முடியுமா? நான் தான் ஏற்கெனவே செத்துட்டேனே என்றான் வருத்தமாக.
ராஜா - உண்மை தான் துருவ். அதுல சில பிரச்சனை இருக்கு. நாங்க சொல்ற நிபந்தனைக்கு நீ சரி சொன்னா மட்டும் தான் உன்னால திரும்ப வாழ போக முடியும்.
துருவ் - மித்ரா கூட திரும்ப வாழ வாய்ப்பு கிடச்சதே எனக்கு மறுஜென்மம் மாதிரி. நீங்க என்ன கண்டிசன் போட்டாலும் சரி எனக்கு ஓகே தான் என்றான் உறுதியாக.
ராணி - அவசர பட வேண்டாம் துருவ். இந்த கண்டிசன் எல்லாமே கேட்டுட்டு உன்னோட முடிவை சொல்லு. நீ திரும்ப வாழனும்னா உன்ன வேறு இடத்துக்கு தான் அனுப்புவோம். உனக்கு தெரிஞ்ச, பழக்க பட்ட இடத்துக்கு நீ போக முயற்சி செய்யவே கூடாது. நீ வேற ஊருக்கு தான் போகனும்.
துருவ் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தான். அவனுக்கு அதில் எதுவும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை.
ராணி - இதை சொல்ல வேண்டியது எங்க கடமை. இங்க சரின்னு சொல்லிட்டு கீழ போன அப்புறம் நீ மீறுனா நேரா நரகத்துக்கு போயிடுவ.
ராஜா - அடுத்த கண்டிசன், நீ பூமிக்கு போய்ட்டு உனக்கு தெரிஞ்சவங்கள தொடர்பு கொள்ள முயற்சி செய்யவே கூடாது… யாராவது ஒருத்தரை தவர என நிறுத்தினான்.
துருவ் - அப்போ எல்லாம் உண்மையும் ஒருத்தர் கிட்ட மட்டும் தான் சொல்லனுமா?
ராஜா - ஆமா துருவ், உலகத்தை பொறுத்த வரைக்கும் நீ செத்துட்ட. நீ திரும்ப உயிரோட போகும் போது சந்தேகம் வரும், தேவ இல்லாத கேள்வி வரும் அதான். நீ சொர்கத்துக்கும் வந்து திரும்ப போய் வாழ போறேன்னு சொல்றீனா, அன்புக்காக மட்டுமா தான் இருக்கும். பூமிக்கு வாழ போறதும் அவங்களுக்காக தான். அதான் நீ நினைக்கிற அந்த ஒரு நபர் கிட்ட மட்டும் நீ உண்மைய சொல்லி வாழலாம்.
ராணி - அடுத்த கண்டிசன் இது தான்… உன்னோட வாழ்வு காலம் 79 ஆனா நீ உன்னோட 28 ஆவது வயதுல இறந்துட்ட. இப்போ நீ திரும்ப உயிரோட வாழ போகும் போது நீ செத்து போன வயதுல இருந்து தான் உன்னோட காலம் தொடரும் ஆனால் நீ கண்டிப்பா 79 ஆவது வயது வரைக்கும் வாழ்ந்து தான் சாகனும். அது தான் நியதி.
துருவ் - எல்லாமே ஓகே, ஒருவேளை எதிர் பார்க்காத விதமா அதுக்கு முன்னாடியே நான் செத்துட்டா??
ராணி - அப்படி எல்லாம் சாக முடியாது. இடையில நீ சாக மாட்ட, கண்டிப்பா 79 வயது வரைக்கும் நீ உயிரோட இருப்ப. இதே நாள் உன்னோட 79 ஆவது வயதுல இறந்துடுவ.
இது மிகவும் கொடியாதக தோன்றியது. வாழும் போதே சாகும் நாள் தெரிந்து வாழ்வது மோசமான ஒன்றாகும். மித்ருதாக்காக எதையும் செய்ய தயாராக இருந்தான்.
ராஜா - அப்புறம் நீ உன்னோட கல்லறையோ, உன்னோட அஸ்தியவோ பார்க்கவே கூடாது.
அதற்கும் தலையை ஆட்டி வைத்தான்.
ராணி - முக்கியமா ஒன்னு நியாபகம் வெச்சிகோ துருவ், நீ உன்னோட 79 ஆவது வயதுல திரும்ப சொர்கத்துக்கு தான் வருவனு எந்த உறுதியும் இல்லை. உன்னோட நல்லது கெட்டதை வெச்சு தான் நீ சொர்கத்துக்கு வருவியானு, இல்லை நரகத்துக்கு போவியானு தெரியும்.
துருவ் - கண்டிப்பா ராணி, எனக்கு புரியுது. நீ சொல்ற கண்டிசன் எல்லாமே எனக்கு ஓகே தான். நான் என்னோட ஊருக்கு போக கூடாது, தெரிஞ்சவங்கள பார்க்க கூடாது, என்னோட கல்லறை பார்க்க கூடாது, கண்டிப்பா 79 வயசு வரைக்கும் வாழுவேன் அவ்வளவு தான. என்னால முடியும். அங்க அவா யாரும் இல்லாம தனியா இருக்கா பாருங்க. அம்மா அப்பா இருந்தும் யாரும் இல்லாத அனாதையா இருக்கா எல்லாம் என்னால தான். அதை ஒப்பிடும் போது இது எல்லாம் எனக்கு பெரிய விஷயமா இல்லை.
ராணி - அப்படி இல்ல துருவ். நடக்க வேண்டியது நடந்து தான் ஆகும். ஆனா அதை சகிசிகிட்டு உன்னால தான் அவா இப்போ உயிர்ப்போடு இருக்கா. அதுக்கு உன்னோட நினைவுகள் தான் காரணம்.
கண்கலங்க அவர்கள் இருவரையும் பார்த்தான். கை எடுத்து கும்பிட… ராஜா , ராணி இருவரும் வந்து அவனை அணைத்துக்கொண்டனர்.
துருவ் - நான் எப்போ திரும்ப போகலாம்? என ஆர்வமாக கேட்டான். மித்ருதாவை இப்போதே பார்க்க வேண்டும் என துடிதுடித்தான். அழுது கொண்டு இருக்கும் அவளை அனைத்து ஆறுதல் சொல்ல கைகளை பரபரத்தது. ஜோடியாக மற்றவர்களை பார்த்து ஏங்கும் அவள் புண்பட்ட மனதை சரி செய்ய நினைத்தான். இரவில் கணவனின் தொடுகையை எதிர்பார்க்கும் அவள் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய ஆசையாக காத்து இருந்தான். இதற்கு எல்லாமே மேல் அவளை கடைசி வரையில் கண்களுக்கு வைத்து காதலிக்க, அவளை அழ விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருந்தான்.
ராஜா - கடைசியா ஒரு கண்டிசன் இருக்கு துருவ்.
துருவ் - சொல்லு ராஜா, எதுவா இருந்தாலும் சரி.
ராஜா - நீ வாழ போன அப்புறம் உனக்கு சந்ததிகள் உருவாகாது.
இதை அவன் எதிர்பார்க்கவில்லை. மற்ற நிபந்தனை எல்லாம் அவர்கள் ஏன் சொல்லுகிறார்கள் என புரிந்தது. இப்படி ஒரு நிபந்தனை எதற்கு என பிடிபட வில்லை. அதனை அவர்களிடமே கேட்டான்…
ராணி - ஒரே காரணம் தான துருவ், இந்த உலகத்தை பொறுத்த வரைக்கும் நீ செத்துட்ட… எதிர்காலத்துல உனக்கு பிள்ளைங்க இருக்காங்கன்னு தெரிஞ்சா செத்தவன் எப்படி உயிரோடு வந்தான் அப்படினு ஒரு கேள்வி வரும். அதற்கான பதிலை தேட ஆரம்பிப்பாங்க. இது எல்லாம் கடைசில பிரச்சனையில் முடியும். அதுக்கு தான் இப்படி ஒரு கண்டிசன்.
ராஜா - ராணி சொல்றது சரி தான் துருவ். நீ செத்த அப்போ உன்கிட்ட என்ன இருந்ததோ அதே தான் நீ அடுத்து சாக போற அந்த நேரமும் இருக்கணும். நீ சாகும் போது உனக்குனு உன்னோட உறவுகளா அம்மா , அப்பா ,தம்பி , மனைவி இருந்தாங்க. பிள்ளைங்க அப்போ இல்லயே அப்புறம் எப்படி நீ திரும்ப சாகும் போது மட்டும் பிள்ளைங்க வரும் ? என விளக்கமாவே எடுத்து சொன்னான்.
துருவுக்கு ராஜா சொல்ல வருவது இப்போது புரிந்தது. ஆனால் இது இவன் மட்டும் சம்மந்த பட்ட விஷயம் இல்லயே, மித்ருதாவுக்கும் இதில் உடன் பாடு இருக்க வேண்டும் என்பதால் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ராஜா, ராணி அவன் யோசிப்பதை பார்த்தனர்.
ராஜா - துருவ், நீ கண்டிப்பா இந்த நிபந்தனைகள் பண்ணனும்னு அவசியம் இல்லை. இது பண்ண விருப்பம் இல்லைனா நீ சொர்கத்துலையே இருக்கலாம். உனக்கு திரும்ப வாழனும்னா இது எல்லாம் இருக்குனு நாங்க சொல்றோம் அவ்வளவு தான்.
துருவ் - எனக்கு எல்லா கண்டிசன் ஓகே தான் கடைசி ஒன்னு தவர. மித்ருதாவுக்கு குழந்தைனா ரொம்ப பிடிக்கும். அதான் யோசிக்கிறேன் என்றான் கவலையாக.
ராஜா , ராணி அவன் முகத்தையே பாவமாக பார்த்தனர்.
துருவ் - இதுக்கு இதே தான் ஒரே வழியா? என்றான் எழுந்து நின்று கொண்டு.
இருவரும் ஆமாம் என்று தலையை அசைத்தனர்.
ராஜா - உன்னோட முடிவு என்ன துருவ்?
*****
மித்ருதா காய்ச்சலில் நன்றாக அவதி பட்டாள். இரவில் பாத்ரூம் எழுந்து கூட செல்ல முடியவில்லை. ஏதோ உடலை போட்டு அழுத்துவது போல் உடல் வலி ஏற்ப்பட்டது. தலையில் சுத்தியல் வைத்து அடிப்பது போல் கனமாக இருந்தது. அவள் பையில் காய்ச்சல் மாத்திரை இருக்க… தள்ளாடி எழுந்து பாத்ரூம் சென்று வந்து மாத்திரை எடுத்தாள். கால்கள் எல்லாம் செயல் இழப்பது போல் தள்ளாடியது.
அந்நேரம் அவளின் நிலை கருதி அவளுக்கே பாவமாகி விட்டது. தன்னால் தனியாக வாழ முடியாதோ என்று அவநம்பிக்கை வந்தது. காய்ச்சலுக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்க… இன்னும் வாழ்க்கையில் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கே என எதிர்காலம் நினைத்து பயம் வந்தது.
காய்ச்சலில் அழுதது… இன்னும் உடல் சூடு அதிகமாகி விட்டது. நடு இரவில் அறை மயக்கத்தில் கண்கள் கலங்கி எழுந்திரிக்க முடியாமல் ‘ துருவ் ‘ ‘ துருவ் ‘ என முணங்கிக்கொண்டு இருந்தாள். இடையில் ‘ என்ன ஏன் விட்டுடு போன? என்னையும் உன் கூட கூப்டுக்கோ, பிளீஸ் ‘ என புலம்பிக்கொண்டு இருந்தாள்.
அவன் இறந்த நாள் வரையில் இப்போது வரை அவள் சாக வேண்டும் , செத்து துருவிடம் போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. எப்படி வாழ வேண்டும், அடுத்தது என்ன என்ற சிந்தனை மட்டுமே கொண்டு இருந்தாள். ஆனால் இன்றோ எதிர்காலம் பயம் அவளை அப்படி பேச வைத்தது.
எப்போது போல் தூக்கத்தில் அருகில் துருவ்வை கைகள் துழாவ… ஒரு கரம் வந்து அவள் கரத்தை பற்றிக்கொண்டது. மித்ருதா கனவில் இருப்பது போல் தோன்ற அந்த கரத்தை பற்றி அருகில் சென்று அணைத்துக்கொண்டாள். பல நாள் கழித்து கிடைத்த அரவணைப்பு. அந்த கரமும் வந்து அவளை அணைத்துக்கொண்டது. அந்த அணைப்பில் என்ன மாயம் இருந்ததோ முணங்கள் சத்தம் நின்று விட்டது… ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றுவிட்டாள்.
காலையில் முழிக்கும் போது கண்களை திறக்க சிரமமாக இருந்தது. அழுததில் கண்கள் வீங்கி, மூக்கு சிவந்து, முடி களைந்து என பார்க்கவே பல நாள் மருத்துவமனையில் இருந்த நோயாளி போல் இருந்தாள். படுத்துக்கொண்டே நேற்று இரவு நடந்ததை யோசிக்கும் போது… யாரோ அருகில் இருந்தது போல் இருந்ததே என நினைவில் வர ஒருக்களித்து படுத்து இருந்தவள் சாடார் என்று திரும்பி பார்க்க வழக்கம் போல் தலையணை மட்டும் தான் இருந்தது.
“ ஆப் கோர்ஸ்! தலையணை தான இருக்கும். வேற என்ன இருக்கும்னு நினச்ச மித்ருதா “ என அவளிடம் தனியாக வாய் விட்டு பேசி கண்களை மூடி படுத்து விட்டாள்.
அப்போது பாத்ரூம் கதவை திறந்து யாரோ வரும் ஆரவாரம் கேட்க… படக்கென்று கண்களை திறந்து தனியாக இருக்கும் அறையில் யாராக இருக்கும் என பார்க்க… அவன் தான் வந்துக்கொண்டு இருந்தான் துருவ் கிருஷ்ணா.
மித்ருதா கனவில் இருப்பது போல கண்களை கசக்கிப் பார்த்தாள். அவன் தான் அவனே தான்…
இருவரும் கண்கள் மோதிய நொடி மித்ருதா அவன் அணைப்பில் இருந்தாள். அவள் தோள்பட்டையில் அவன் கண்ணீர் சுட்டது. அனைத்த போது அவளுக்கு இன்னும் காய்ச்சல் இருப்பது உணர…. இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்தினான்.
மித்ருதா - துருவ், நீ… நீ வந்துட்டியா? திரும்ப எப்படி… எப்படி துருவ்.. பேய் ஆ வந்துட்டியா ? என அவன் முகத்தை தொட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
நம்பவே முடியவில்லை. செத்தவன் திரும்ப வந்து விட்டான். அவன் பேய்யாக தான் இருக்கிறான் என்றே நினைத்தாள்.
முகத்தில் இருந்த அவள் கையை எடுத்து சின்ன சின்ன முத்தம் வைத்தான். அவன் மித்ரா… அவனை தீண்டுகிறாள் பல வாரம் கழித்து, சுகமாக இருந்தது.
துருவ் - மித்ரா என அழைக்க அவ்வளவு தான் பாய்ந்து வந்து அவன் நெஞ்சில் சாய்ந்துவிட்டு இறுக்க அணைத்துக்கொண்டாள், விட்டால் எங்கேனும் ஒடிவிடுவானோ என்று. அவனும் அவளுக்கு வாகாக அமர்ந்துகொண்டு தலையை கோதிக்கொடுத்தான். அவள் கண்ணீர் நெஞ்சில் சுட….
துருவ் - எதுக்கு மித்ரா இப்போ அழுகுற? காய்ச்சல் வேற இருக்குது. அழாத டா.. அதான் நான் வந்துட்டேன்ல
மித்ருதா - திரும்ப போயிடாத துருவ். என்ன தனியா விட்டுறாத. என்னால முடியலை என தேம்பி அழுக… அவனுக்கு பொறுக்க வில்லை.
துருவ் - திரும்ப போறதுக்கு நான் வரல மா. உன் கூட வாழ தான் வந்து இருக்கேன். நான் பேய் இல்லை. உயிரோட தான் இருக்கேன் என கடைசி வரியை சிரித்துக் கொண்டு சொன்னான்.
அவன் சிரிப்பையே அசையாது பார்த்துக்கொண்டு இருக்க… அவன் சொல்லுவதை நம்பவே முடியவில்லை.
மித்ருதா - அது… அன்னைக்கு நான் ஹாஸ்பிடல்ல வெச்சு பார்த்தேன்… ஆக்சிடென்ட் ஆகி இருந்த என அன்றைய நினைவில் மீண்டும் கண்கலங்க.
துருவ் - அழுக கூடாது மித்ரா. ஆமா எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு தான். அன்னைக்கு நடந்தது எல்லாமே உண்மை தான். இப்போ உன் முன்னாடி உயிரோட இருக்கிறதும் உண்மை தான். அது பெரிய கதை. அப்புறம் சொல்றேன். முதல்ல எனக்கு உன்னோட ஹெல்த் ரொம்ப முக்கியம் வா பாத்ரூம் போய்ட்டு டாக்டர் பார்த்துட்டு வரலாம் வா என அவள் கட்டிலில் இருந்து எழ உதவி செய்தான்.
பலவீனமாக இருந்த கால்கள் இரண்டும் நடுங்க மெதுவாக எழுந்தாள். கட்டிலில் இருந்து நிலை தடுமாற… அருகில் அவன் இருந்ததால் துருவ் மீது தான் விழுந்தாள்.
இதனை பார்க்கும் போதே துருவ் கண்களில் இரத்தம் மட்டும் தான் வரவில்லை. எவ்வளவு துன்பப் படுகிறாள் என பார்க்கும் போதே இதயத்தில் வலி. தான் வரவில்லை என்றாள் என்ன செய்து கொண்டு இருந்து இருப்பாள் என நினைக்க நினைக்க வேதனை தான். கலங்கிய கண்களை அவளிடம் இருந்து மறைத்து அவளை கைகளில் தூக்கிக்கொண்டு பாத்ரூம் தூக்கி சென்றான்.
அவள் வேண்டாம் என்று மறுக்க மறுக்க உள்ளே அவளுடன் அவளை பிடித்துக்கொண்டு நின்று இருந்தான். அவனுக்கு அதில் எந்த சங்கடமும் இல்லை, அவளை அந்த விடயத்தில் சங்கட படாமலும் பார்த்துக்கொண்டான்.
மித்ருதா - ஏன் துருவ், நானே என சொல்ல வந்தவளை…
துருவ் - நான் எதையும் உன்கிட்ட பார்த்ததே இல்லையா? ம்ம், அதை விடு. எனக்கு இப்படி ஒரு நிலமை இருந்தா நீ பார்த்துகிட்டு சும்மா இருப்பியா இல்லை தான அதே தான் நானும் பண்றேன் எனக்கு எந்த சங்கோஜமும் இல்லை. இப்போ என் கண்ணுக்கு நீ ஒரு குழந்தை மாதிரி தான், சரி இந்த ப்ரஷ் பண்ணு என அவள் எல்லா தேவைகளையும் அருகில் இருந்து பார்த்து பார்த்து செய்தான்.
இடையில் கலங்கிய மித்ருதா கண்களை துடைத்து முடியவில்லை. அவ்வளவு அழுகை சந்தோசத்தில். அவள் உடையை மாற்றி, தலை வாரிவிட்டு… கேப்ல் ஹாஸ்பிடல் சென்று வந்தனர்.
தெரியாத ஊர் என்பதால் துருவுக்கு வசதியாக போய் விட்டது. காட்டேஜ் வந்ததும் அவனும் அங்கு தங்க பணம் செலுத்தினர். இருவரும் சாப்பிட்டு அறைக்கு வந்ததும் மீண்டும் மித்ரா அவன் கை அணைப்பில்.
மித்ருதா - துருவ், பிளீஸ் சீக்கிரம் சொல்லு. என்ன ரகசியம் தான் கொண்டு வந்த.
துருவ் - அது ஒரு பெரிய கதை. நம்புவியானு தெரியலை. இருந்தாலும் சொல்றேன் என அவன் மேகத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தது, ராஜா ராணியை சந்தித்தது தொடங்கி நெற்றி அவர்கள் போட்ட நிபந்தனை வரை சொல்லி முடித்தான்.
இதனை கேட்ட மித்ருதா வாயடைத்து போனாள். தலை சுற்றுவது போல் இருந்தது. இல்லை தலை நிஜமாகவே சுற்றியது. அவன் சொல்லுவதை கிரகிக்கவே பல மணித்துளிகள் தேவை பட்டது. இடையில் அவள் நிறைய சந்தேகம் கேட்க… பொறுமையாகேவே பதில் சொன்னான். திரும்ப திரும்ப ஒரே விடயம் கேட்டாலும் மீண்டும் பொறுமையான பதில் தான் வந்தது.
இது தான் துருவ், மிகவும் மென்மையாக நடந்துக்கொள்வான். பொறுமையும், நிதானமும் எப்போது அவனிடம் இருக்கும். மித்ருதா இன்னும் அவன் சொன்னதில் முழித்துக்கொண்டு அமர்ந்து இருக்க… அதில் அவனுக்கு சிரிப்பு எட்டிப்பார்த்தது.
மித்ருதா - அப்போ நீ சொர்கத்தில இருந்து வந்து இருக்கிற தேவதையா? என வெகுளியாக கேட்ட…
துருவ் - இல்ல, இப்போ மனுஷன் தான். நீ தான் என்னோட தேவதை. கொஞ்சம் நேரம் தூங்கு மித்ரா. அப்போதான் உடம்பு சரி ஆகும் என சொன்னதும் இல்லாமல் அவளை படுக்க வைத்து அணைத்துக்கொண்டு இவனும் படுத்து விட்டான்.
கண்களை மூடாமல் அவள் படுத்து இருக்க…
துருவ் - என்ன மா, நீ தூங்கலையா?
மித்ருதா - நீ திரும்ப போய்யிட மாட்டியே துருவ். எனக்கு பயமா இருக்கு என்றாள் பாவமாக.
தனிமையில் நன்றாக அவள் காயபட்டு இருப்பது புரிந்தது.
துருவ் - இல்லவே இல்லை. நான் என்னோட 79 வயசு வரைக்கும் இருப்பேன். நீ பயப்படாத சரியா என்று இன்னும் சில பல சமாதான வார்த்தை பேசினான்.
அப்போது தான் நினைவு வந்தவனாய்..
துருவ் - எனக்கு அவங்க கொடுத்த நிபந்தனை எல்லாம் எனக்கு ஓகே. உனக்கு எப்படி மித்ரா? என கொஞ்சம் கவலையாகவே கேட்டான்.
எங்கே குழந்தை ஆசையில் அவள் வேறு எதுவும் சொல்லுவாளோ என கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
அவன் கன்னத்தில் நன்றாகக் கடித்து வைத்து விட்டாள். பல் தடம் கூட நன்றாக பதிந்தது.
மித்ருதா - நீ கூட இருக்கும் போது எனக்கு எதுவும் வேண்டாம் துருவ். நீ மட்டும் போதும்… கடைசி வரைக்கும் என அழுத்தமாக சொன்னாள்.
அப்போது தான் நிம்மதியாக உணர்ந்தான்.
மித்ருதா - அடுத்து நம்ம பிளான் என்ன துருவ்? எங்க தங்க போறோம்?
துருவ் - உனக்கு கொஞ்சம் உடம்பு சரி ஆனதும் அதனை பற்றி ஒரு பிளான் பண்ணலாம் சரியா. கொஞ்சம் தூரமா போய் செட்டில் ஆகலாம், சரியா?
மித்ருதா - உன்கூட எங்க நாலும் வருவேன்.
துருவ் - நம்ம வீட்டுக்கு நீ தனியா போய் எல்லாமே பேக் பண்ணிட்டு நம்ம போக போற இடத்துக்கு அனுப்பி விட்டுடு. அங்க யாரு எந்த ஊருக்கு போறனு கேட்டாலும் நம்ம போக போற ஊரு பேரு சொல்ல வேண்டாம் என இன்னும் சில திட்டம் போட்டனர்.
மித்ருதா எல்லாமே கவனமாக கேட்டுக்கொண்டாள். இதில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டும் என்பது புரிந்தது.
மித்ருதா - அது எல்லாம் இருக்கட்டும். நீ திரும்ப எப்படி வந்த. அந்த வழி எங்க இருக்கு?
ராஜா , ராணி அவனிடம் முடிவை கேட்ட போது நடந்த நிகழ்வை சொன்னான்.
ராஜா - உன்னோட முடிவு என்ன துருவ்? அதுக்கு ஏத்த மாதிரி நானும் , ராணியும் உதவி செய்வோம்.
ராணி ஆமாம் என்பது போல் அவனை பார்க்க..
துருவ் - நான் திரும்ப மித்ரா கிட்ட போக போறேன். உங்க எல்லாம் நிபந்தனைக்கும் நான் ஒத்துக்கிறேன்.
ராஜா , ராணி இருவருக்கும் சந்தோசமே அவன் முடிவில்.
ராணி - சூப்பர் துருவ், நீ கண்டிப்பா பூமியில ஒரு நல்ல மனிதனா இருப்ப. உன்னோட மனைவியோடு வாழ வாழ்த்துக்கள் என தேவதைகள் வாழ்த்தினர்.
ராஜா சொடுக்கி காற்றில் ஒரு கடிதம் போல் மிதந்தது.
ராணி - இதுல உன்னோட கை ரேகை வை துருவ். படிச்சு பார்த்துட்டு வை.
அதில் அவர்கள் சொன்ன நிபந்தை எல்லாமே இருந்தது. கூடுதலாக எதுவும் இல்லை. கடைசியில் … இதில் ஏதாவது ஒரு கண்டிசன் மீறினாலும் நரகம் என்று இருந்தது. மேலும் அவன் அடுத்த இறப்பு நாள் குறிப்பிட்டு இருந்தது. மற்றும் ஒரு சாவு நாள் தெரிந்தே அதில் சைன் போட்டான்.
அவர்கள் அவனை முதல் நாள் ஒரு கதவு திறந்து உள்ளே கூட்டி வந்து இருப்பார்கள். அதன் வழியில் வெளியில் வந்து… ராஜா சொடுக்கிட… படிக்கட்டுக்கள் வந்தது. இருவரையும் நன்றியுடன் பார்த்து விட்டு அதில் இறங்கி நடந்தான்.
அவன் நடக்க நடக்க கடந்து வந்த பாதை மறைந்து கொண்டே வந்தது. அவன் வந்து இறங்கியது.. மித்ருதா தங்கி இருந்த அந்த காட்டேஜ் பின்னாடி இருக்கும் காட்டில் தான். அதனை கடந்து மித்ருதா இருக்கும் அறைக்கு வந்தான். கதவு முதலில் பூட்டி இருந்தது. அதனை திறக்க முயற்சி செய்ய… மூன்றாவது முயற்சியில் தானாக திறந்தது. அது திறக்கும் போது ஜிகினா போல் நட்சத்திரம் வர இது ராஜா , ராணி வேலை தான் எனது புரிந்தது. மேலே வானத்தை நன்றியுடன் பார்த்தான்.
அவன் பார்த்தது அறை தூக்கத்தில் புளம்பிக்கொண்டு இருந்த மித்ருதா தான். அருகில் அவனை தேட.. ஓடியே சென்று அவள் கையை பிடித்துக்கொண்டு படுத்து இருந்தான். இரவில் அவன் உறங்கவே இல்லை… அவளையே தான் பார்த்துக்கொண்டு படுத்து இருந்தான். காலையில் தான் பாத்ரூம் சென்ற நேரம் மித்ருதா முழித்தது.
என நடந்த நிகழ்வை அவளிடம் சொல்ல… மீண்டும் சிறு பிள்ளை போல் நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை அவனிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ள முயன்றாள். அவனும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டே தட்டி கொடுக்க தூங்கியும் விட்டாள். அவள் நெற்றியில் முத்தமிட்டவன்… மனதில் கடவுளுக்கு நன்றி சொன்னான்.
Some facts about this story:
- மித்ருதா கோவிலில் பார்த்த அந்த அப்பா, பெண் குழந்தை… துருவ் ரோட்டில் செல்லும் போது இடப்பக்கம் சென்ற வண்டியில் இருந்தவர்கள் தான். அவர்களை இடிக்க கூடாது என்பதால் வேறு பக்கம் திருப்பி உயிரை விட்டான். அதே குழந்தை தான் ‘ சாமி நீங்க கேட்டதை கொடுக்கும் ‘ என சொல்லி சென்றாள். மித்ருதா சாமியிடம் துருவ்வை தான் கேட்டு இருப்பாள்.

- - மித்ருதா இரயில்வே ஸ்டேஷன் போகும் போது ஒரு ஆம்புலன்ஸ் பார்த்து அதில் இருக்கும் நபருக்காக வேண்டி இருப்பாள். அந்த ஆம்புலன்ஸில் இருந்தது துருவ் வண்டியை அதிவேகத்தில் இடித்த நபர் தான்.
- - ராணி துருவிடம்… அவன் மீண்டும் சொர்கம் வரும் வரை அவர்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டு இருப்பாள். இது அவனும் மித்ருதாவும் அவர்கள் காலம் முடிந்த பின் சொர்கம் தான் வர போகிறார்கள் என மறைமுகமாக சொல்லுவாள்.