"டேய், உனக்கு வேற விளையாட்டே கிடைக்கலையா? இத போய் தூக்கிட்டு வந்துருக்க. எல்லாரும் சேர்ந்து வீடியோ கேம் விலையாடலாம்னு தான சொல்லி கூப்டு வந்த" என்றாள் ஜனனி, குரலில் கொஞ்சம் கடுப்பு.
"என்னை என்ன டி பண்ண சொல்ற, இப்படி திடீர்னு கரண்ட் போகும்னு நான் என்ன கனவா கண்டேன்" என்றான் மாதவன், பழைய துணி கொண்டு கையில் இருக்கும் பெட்டியை துடைத்த வாறு.
சுற்றிலும் இருட்டு, இவர்கள் இருக்கும் இடத்துக்கு வரும் வெளிச்சம் ஜனனியும், சரவணனனும் கையில் இருக்கும் கைபேசியின் டார்ச் மூலம் தான்.
"டேய் மாதவா, வெளிய போய் ஏதா விளையாடலாம் டா, இது வேண்டாம் செம்ம மொக்கையான கேம். சின்ன பிள்ளைங்க கூட இப்போ இதுலாம் விளையாடுறது இல்ல" என்றான் சரவணன் சலிப்பாக முகத்தை வைத்துக்கொண்டு.
ஜனனியும் 'ஆமா' என்பதை போல் தலையை அசைத்தாள்.
"இந்த லாக் டவுன்ல வெளியலாம் போகவே முடியாது, இதுல உனக்கு வெளிய போய் விளையாட வேற செய்யணுமா. அந்த டார்ச்ச ஒழுங்கா பிடி டா" என்றான் மாதவா துடைத்துக்கொண்டே, அதில் அவ்வளவு தூசி.
ஜனனி விதியே என்று நின்றுக்கொண்டிருந்த சமயம் "ஸ்னாக்ஸ் கொண்டு வந்துட்டோம்" என்ற கூவலுடன் சினேகாவும், ஆகாஷும் வந்தனர். ஆகாஷ் வரும் போதே தட்டில் இருக்கும் சிப்ஸ் ஐ சாப்பிட்டுக்கொண்டே வந்தான்.
போட்டதை போட்ட படி மற்ற மூவரும் சேர்த்துக்கொள்ள நிமிடங்களின் தட்டு காலியாகிவிட்டது.
"தீனி மூட்டைகளா, கேம் விளையாடுற அப்போ நடுவுல சாப்பிட தான எடுத்துட்டு வந்தோம். இப்போவே ஏன் டா தின்னீங்க" என கேட்ட சினேகாவின் வாயை சுற்றி ஆங்காங்கே சிப்ஸ் தூள் ஒட்டிக்கொண்டிருந்தது.
"என்ன கேம் டா செலக்ட் பண்ணீங்க?" என ஆர்வமாக கேட்ட ஆகாஷ் அங்கிருந்த டப்பாவை பார்த்த பின் முகம் அஷ்ட கோலமாக மாறியது..
"இதுவா?", நான் விளையாட வரலப்பா. ஏதோ சுவாரஸ்யமா இருக்கும்னு வந்தா குழந்தைங்க விளையாடுற பாம்பு தாயம் எடுத்து வச்சிருக்க" என மாதவனை பார்த்து கேட்க
"நீயுமா டா... வேற இல்லடா. கரண்ட் இருந்தாவாச்சும் வீடியோ கேம் விளையாடலாம் அதுவும் இல்ல. இப்போதைக்கு இது தான் இருக்கு. கொஞ்ச நேரம் விளையாடுவோம் எப்படியும் சீக்கிரம் கரண்ட் வந்துரும்" என அனைவரையும் சமாதானம் செய்ய.. ஒருவழியாக ஒப்புக்கொண்டனர்.
ஆகாஷ், சினேகா, ஜனனி, சரவணா, மாதவன் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள். பக்கத்து பக்கத்து வீடு, லாக் டவுன் போட்டதால் என்ன செய்வது என தெரியாமல் சுற்ற.. மாதவன் தான் அவனிடம் வீடியோ கேம் இருப்பதாக சொல்ல, உடனே நால்வரும் வந்துவிட்டனர். அவர்கள் வந்த நேரம் கரண்ட் போய் விட்டது எனவே மாதவன் பரணில் இருந்து இந்த பாம்பு தாயத்தை எடுத்து வந்தான்.
"ஆகாசு, இந்த கேம் ல நாலு பேரு தான விளையாட முடியும், நம்ம அஞ்சு பேரு இருக்கோம்" என்றான் சரவணா பாம்பு தாயம் பலகையை பெட்டியில் இருந்து வெளியே எடுத்த படி.
"அதுக்கு என்ன இப்போ, நானும் ஜனனியும் ஒரு டீம். என் பக்கத்துல இருக்கட்டும் அவா" என பதில் சரவணனுக்கு இருந்தாலும், பார்வை ஜனனியை பார்த்து கண்ணடித்தது. அவளோ வெட்கத்துடன் திரும்பிக்கொண்டாள்.
"அதுலாம் ஒன்னும் வேண்டாம், பொண்ணுங்க ரெண்டு பெரும் ஒரே டீம்ல இருக்கட்டும். உன்ன நம்பி எல்லாம் அந்த பொண்ண உன் பக்கத்துல உட்கார வைக்க முடியாது" என்றான் மாதவன்.
எனவே இப்போது ஆகாஷ் எதிரில் மாதவன், மற்ற இரு பக்கமும் சரவணா, ஜனனி & சினேகா. சாயங்கால நேரம், சீக்கிரம் இருட்டி விட்டது.. இவர்கள் அமர்ந்திருப்பது மாடியில் உள்ள தனி அறையில்.
மரத்தில் ஆனா பாம்பு தாயம், கொஞ்சம் பலசாக இருந்தாலும் எண்களும், ஏணிப்படியும், பாம்புகளும் பளிச்சென்று தான் இருந்தது.
வெளிச்சத்துக்கு கைபேசியில் டார்ச் ஆன் செய்துவிட்டு திருப்பி வைத்திருந்தனர். எனவே அவர்கள் இருக்கும் இடத்தில் மட்டுமே ஒளி, சுற்றி எங்கும் இருட்டு தான்.
அதில் இருந்த காய்கள் ஒரு இன்ச் மனித உருவத்தில் இருந்தது. ஆகாஷ் சிவப்பு வண்ணம் எடுக்க, பெண்கள் பிங்க், சரவணா பச்சை மற்றும் மாதவன் நீல வண்ணத்தை எடுத்தான். பகடையை எடுத்து மாதவன் உருட்டும் முன் கீழே ஆகாஷ் அம்மாவின் சத்தம்
"டேய் தம்பி, என்ன டா பண்றீங்க நாலு பேரும்? படிக்க ஒன்னும் இல்லையா உங்களுக்கு?" என குரல் கொடுத்தார்.
எழுந்து சென்ற ஆகாஷ் ஜன்னல் வழியே பதில் கொடுத்தான் "மா, எங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் தான் மா. கொஞ்சம் நேரம் சும்மா இரு, பாம்பு தாயம் இப்போ தான் விளையாட உக்காந்திருக்கோம்" என்றான்.
"ஆன்லைன் கிளாஸ்ன்னா படிக்க கூடாதுனு எதுவும் இருக்கா? அதுவும் இல்லாம மணி ஆற தாண்டிடுச்சு இதுக்கு அப்புறம் தாயக்கட்டையை உருட்டுனா வீடு விளங்குமா? புக் எடுத்து படிங்க" என சத்தம் போட.. பதில் எதுவும் சொல்லாமல் ஜன்னலை சாற்றிவிட்டு எரிச்சலுடன் வந்து அமர்ந்துவிட்டான்.
இது மற்ற மூவரின் வீட்டிலும் தினமும் கேட்கும் பேச்சு என்பதால் விளையாட தயாராக அமர்ந்திருந்தனர்.
மாதவன் தான் முதலில் ஆரம்பித்தான், இரண்டு வர.. அதில் ஏணிப்படி இருந்தது... சந்தோசமகா காயை நகர்த்தினான். அந்த ஏணிப்படி முடிவு 38 இல் இருந்தது.
இப்போது பகடை பெண்களுக்கு கொடுக்க பட்டது முதலில் சினேகா உருட்டினாள் அவளுக்கு 5 வந்தது, பாதுகாப்பான இடம் தான்.
ஆகாஷ் உருட்ட அவனுக்கு வந்த நம்பர் 5 தான். பெண்களுடன் வந்து நின்றுக்கொண்டான்... "நீங்க என்ன டா என்னோட டார்லிங் ஜனனி கூட உட்கார வேண்டாம்னு சொல்றதுக்கு, பாத்தீங்கள்ல எங்க ரெண்டு பேரோட காய் ஒரே இடத்துல நிக்கிது" என சீன் காட்ட..
"இவனோட முடியல டா" என்றான் சரவணன் பகடையை உருட்டிய படியே.. அவனுக்கு 3 வந்தது.
இப்போது மாதவன் உருட்ட அவனுக்கு 1 வந்து தற்போது 39 வந்து நின்றான். இப்படியே கேம்மில் எந்த சுவாரசியமும் இல்லாமல் இரண்டு ரவுண்டு முடிய.. ஆகாஷ் 20, பெண்கள் 27, மாதவன் 45 என்ற ரீதியில் இருந்தனர். சரவணன் முறை வர.. பகடையை உருட்டிய படியே "டேய் யாராவது ஒன்னு ஏணில ஏறி கேம் முடிங்க இல்லனா பாம்புட்ட கொத்து வாங்கி சாவுங்க சும்மா அப்படியே ஒன்னும் இல்லாத கட்டமா பார்த்து நகர்ந்துட்டு இருக்கீங்க" என பேசிய படியே 16 இல் வந்து நின்றான் அதுவோ பாம்பு.. அதன் வால் முடிவு 6.
சுற்றி இருந்த அனைவரும் சிரிக்க "எதுக்கு எல்லாரும் சிரிக்கீங்க" என சொன்ன படியே காயை பாம்பு மேலே நகர்த்தி 6 இல் வந்து நிறுத்திய சமயம் சுற்றி இருந்த யாவும் உறைந்தது போல் ஆனது. ஒரு நொடி அந்த இடமே ஏதோ மாற்றம் அடைந்தது போல் அனைவரும் உணர்ந்தனர். இருட்டில் ஐவரின் முகம் மட்டுமே தெரிய... ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சினேகா தான் குரலை தாழ்த்தி "ஏதோ மாறுன மாதிரி தெரியுதுல" என்றாள் பயத்துடன். இருள் அப்படி நினைக்க தூண்டியதோ?!
ஆகாஷ் ஜனனி முன்பு கெத்தை விடாமல் "அதுலாம் எதுவும் இல்ல, ஏற்கெனவே லாக் டவுன், எல்லாம் இடமும் அமைதியா தான் இருக்கு. அதான் அப்படி தோணுது கரண்ட் வந்தா சரியா போய்டும்" சாதாரண ஒலியில் பேச நினைத்தாலும் பயத்தில் மெதுவாகத்தான் பேசினான்.
மாதவனோ "உங்களுக்கு அது கேக்குதா" என்றான்.. நண்பர்கள் முகத்தை மட்டுமே தான் பார்த்தான்.. இருட்டை பார்க்க பயமாக இருந்தது.
"டேய் ஏன்டா நீயும் இப்படி பண்ற சினேகா தான் ஏதோ பயத்துல பேசுறானா உனக்கு என்ன டா? டைஸ் (dice) வாங்கி விளையாடு" என்றான் ஆகாஷ்.
சுற்றி இருந்த இருட்டில் ஏதோ நகர்வது போல் அனைவரும் உணர்ந்தனர்... கூடவே 'ஷ்ஷ்' என்று சத்தம் கேட்டது.
"சரவணா விளையாடாத டா, எனக்கு பயமா இருக்கு" என அழுதுவிடும் குரலில் பேசினாள் ஜனனி. ஆனால் சரவணா வாய் கூட அசையவில்லை என அனைவருக்கும் தெரியும்.
ஏதோ தவறாக பட்டது.
மீண்டும் அதே சத்தம் 'ஷ்ஷ்ஷ்ஷ்'.. இந்த முறை கொஞ்சம் அதிகமாக. அனைவருக்கும் நாஉலர்ந்து போனது. அப்போது தான் அதனை மாதவன் கவனித்தான் இருட்டில் பச்சை நிற கண்களை. இப்போது அந்த கண்கள் மெதுவாக நகர்ந்தது... பார்ப்பதற்கு நடந்து செல்வது போல் தெரியவில்லை... ஏதோ ஊர்ந்து செல்வது தெரிந்தது.
மற்றவர்களும் கவனித்துவிட கண்களை விரித்து பாக்கும் போது தான் தெரிந்தது.. இருட்டில் இருந்த கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னே வருவது. அது.. அதே பாம்பு விளையாட்டில் படத்தில் இருந்தது போலவே இருந்தது.
ஆள் உயரத்துக்கு இருந்தது, ஆனால் அந்த விளையாட்டில் இருப்பதில் மிக சிறிய பாம்பு இதுவே! அதன் கண்கள் சரவணனை மட்டுமே பார்க்க இரட்டை நாக்கை நீட்டி 'ஷ்ஷ்ஷ்' என்றது. எதிர்பாராத நேரத்தில் அவனை இருட்டுக்கு இழுத்து சென்றது... அப்படியே சரவணனின் குரல் அடங்கிவிட்டது.
"சரவணா.. டேய்" என மாதவன் நண்பனை தேடி அழுதான். மற்றவர்கள் நடந்த நிகழ்வில் உறைந்திருந்தனர்.
ஆகாஷ் தான் "என்ன டா நடக்குது இங்க, அப்போ இது உண்மையான கேமா?"
"எனக்கு பயமா இருக்கு, சரவணாக்கு ஆன மாதிரி நம்மக்கும் நடக்க போகுது, இதோட நிறுத்திக்கலாம்" என்றால் ஜனனி அழுத கண்களை துடைத்துக்கொண்டு.
"இல்ல ஜனனி, எனக்கு என்னமோ இதுல பாதியில இருந்து எழுந்திரிக்க முடியும்னு தோணல" என்றான் மாதவன்.
சினேகா பேசவேயில்லை. எழுந்தால் மீண்டும் அது வந்துவிடுமோ என்றுஅப்படியே அமர்ந்திருந்தாள். மாதவன் உருட்டினான்... அவன் இருந்த கட்டமோ 45, ஆனால் 46 மற்றும் 49 இல் சிவப்பு மற்றும் மஞ்சள் கலர் பாம்பு இருந்தது. ஒன்றும் நாலும் விழவே கூடாது என வேண்டிக்கொண்டு உருட்டினான். மற்ற அனைவரும் பயத்துடனே டைஸ் ஐ பார்த்தனர்.
நம்பர் 6
அதிஷ்டவசமாக 51 இல் ஏணி..நேராக 67 கட்டம் சென்றுவிட்டான்.
அடுத்து பெண்கள்..இப்போது ஜனனி முறை கைகள் நடுங்க வாங்கினாள். 27 இல் இருந்தாள்.. 28 இல் இருப்பதிலேயே மிகப்பெரிய ஏணி 84 இல் போய் நிறுத்தி விடும்.
"ஜனனி, 1 போட்டுட்டு டி. சீக்கிரம் கேம் முடிச்சிடலாம்" என்றாள் சினேகா, பதற்றத்தில்.
இருக்கைகளுக்கு இடையில் பகடையை குலுக்கிய ஜனனி, கீழே வீசும் போது மட்டும் கண்களை மூடிக்கொண்டாள்... அதுவோ சரியாக 1 வந்தது. சினேகா கட்டிபிடித்துக்கொண்டாள்.
84 சென்றுவிட்டனர்.
ஆகாஷ் 3 போட்டு… பாதுகாப்பான கட்டம் 23 சென்றுவிட்டான்.
மீண்டும் இரண்டு ரவுண்டு முடிய... நால்வரும் உயிரோடு தான் இருந்தனர்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு.
மாதவன் 77, ஜனனி & சினேகா 88, ஆகாஷ் 35
ஆகாஷ் இருக்கும் 30 களின் வரிசையில் தான் எந்த பாம்பும் இல்லை. மாதவன் ஒன்று போட்டால் ஏணி நேராக 98 போய் விடுவான். ஆனால் வந்ததோ 6... 83 க்கு நகர்ந்தான்.
இது சினேகா முறை 1 மட்டும் விழுந்தால் நாகலோகம் தான். மற்றவர்களுக்கு உள்ளுணர்வு ஏனோ 1 தான் விழும் என்று சொன்னது. சினேகா அழுதுக்கொண்டே உருட்ட… டைசில் முதலில் மூன்று வந்து, கொஞ்சம் உருண்டு 5 வர போகிறது என நினைக்கும் போது உள்ளுணர்வின் படி 1 தான் வந்தது.
மீண்டும் அதே அழுத்த... சுற்றிலும் அமைதி.. இந்த முறை நீல நிற கண்கள். ஆனால் ஒரே காயை வைத்து இருவரும் விளையாடுவதால் அந்த பாம்பு பகடையை உருட்டியவர்களை தான் கொல்லும், ஆகாஷ் கொஞ்சமும் யோசிக்காமல் பகடையை எடுத்து ஜனனி பக்கம் தூக்கி போட்டு விட்டான்.
மாதவனும், ஜனனியும் அதிர்ச்சியாக பார்க்க "சாரி ஜனனி, எனக்கு உன்ன விட சினேகா தான் பிடிக்கும்"
சாகும் முன் கேட்க வேண்டிய வார்த்தையா? தேம்பி தேம்பி அழுதாள் சாவை விட பெரியதான நம்பிக்கை துரோகம் எண்ணி. வெள்ளையும், நீளமும் கலந்த பாம்பு வந்தது 'ஷ்ஷ்ஷ்ஷ்' என்ற சத்தத்துடன்.
ஜனனி..சினேகாவை திரும்பி பார்க்க "சாரி டி" என்றாள் உள்ளே போன குரலில்.
ஆகாஷுக்கும், ஜனனிக்கு இடையில் இருப்பது பப்பி லவ்... ஆனால் அவன் சினேகாவுடன் உறவில்! அதுவும் சினேகா ஜனனியின் உயிர் தோழி.
கண்களை துடைத்துக்கொண்டு பாம்பு வந்து விழுங்க அமர்ந்திருந்தாள். பெண்கள் எதிரே வந்த பாம்பு ஜனனி முகம் அருகில் வந்து இரட்டை நாக்கை நீட்ட... மற்றவர்கள் பயத்துடன் பார்க்க... சினேகா பக்கம் படக்கென்று திரும்பியது. உறைந்தேவிட்டாள்!
ஆக்ரோஷமாக இருந்தது... ஒரே விழுங்கில் பாம்பு உடலுக்குள் போய்விட்டாள் சினேகா. ஆம்! சினேகாவை தான் பாம்பு விழுங்கியது.
"சினேகா.. என்ன விட்டு போய்டாத டி" என அழுதது ஆகாஷ் தான். மாதவனும், ஜனனியும் எந்த சலனமும் இல்லாமல் அவனை பார்த்தனர்.
அடுத்து ஆகாஷ் ஒன்று விழுந்து ஏணியில் ஏறி 44 வந்துவிட்டான்.
மாதவன் 82
ஜனனி 93
மீண்டும் ஆகாஷ்… இரண்டு மற்றும் ஆறு போட்டாலும் பாம்பு. நண்பர்களுக்கும் பாம்பு இருக்கும் எண் வர கூடாது என வேண்டுவர் ஆனால் ஜனனிக்கு அப்படி செய்ய தோன்றவில்லை. அவனை வெறித்த பார்வையுடன் 2 அல்லது 6 விழுமா என ஆர்வமாக பார்த்தாள்.
நம்பர் 6
இளக்காரமாக சிரித்தாள்... கருப்பும், மஞ்சளும் கலந்த பாம்பு. பலகையில் இருக்கும் பாம்பு லேசாக நெளிவது போல் தோன்றியது. ஆனால் ஆகாஷ் பாம்பு இருட்டில் இருந்து வரும் என எதிர்பார்க்க... பலகையில் இருந்த பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரியதாக உருவெடுத்து நின்றது. ஆகாஷ் கத்த வாயை திறக்க வாய் உள்ளே சென்ற பாம்பு அவனை கதற கதற கொன்றது.
ஆகாஷ் குரல் அடங்கி மீண்டும் அறை அமைதியாகியது.
நடப்பவையே பார்த்த மாதவன் "பலி வாங்கிட்டோம் ஜனனி" என்றான் லேசாக சிரித்த படி.
பயந்த மாதிரி இருந்த ஜனனி முகம் நொடியில் சிரித்த வாறு மாறியது. அவள் தான் ஒருமுறை பார்த்தாலே ஆகாஷ் வீட்டுக்கு வரும் போது... அவனும் சினேகாவும் நெருக்கமாக இருந்ததை.
"அவனுக்கு நல்லா வேணும்... கூடவே இருந்து எப்படி ஏமாத்துனான் பாத்தியா. இது ஜனனியோட தண்டனை" என்றாள் கனல் பார்வையுடன்… “நான் அவனை எப்படி லவ் பண்ணேன்னு தெரியுமா, என்னோட வாழ்க்கையே அவனோடனு நினைச்சேன். அதுவும் சினேகா... நான் எதிர்பார்க்கவே இல்ல. அவளுக்கு தெரியும் நானும் ஆகாஷும் லவ் பண்றோம்னு. தெரிஞ்சும் எப்படி துரோகம் பண்ண தோணுச்சு…அவங்க என்னோட கண்ணு முன்னாடி இல்லாததை பாக்குற அப்போதான் நிம்மதியா இருக்கு”
மாதவன் ஆறுதலாக அவள் கையை பிடித்துக்கொண்டான்.
"டேய் சரவணா நடிச்சது போதும் வெளிய வா டா" என்றான் மாதவன்.
வேர்வையில் குளித்து மறைந்திருந்த சரவணன் வந்தான்.
"நிஜமாவே பயமா இருந்தது டா. எங்க இருந்து டா இந்த கேம் கிடைச்சது. நம்மளை ஏன் அந்த பாம்பு சாவடிக்கல"
"ஏன்னா இதனை வச்சிருக்கவங்க சொல்றது தான் கேக்கும் அதான்" என்றான் மாதவன் கெத்தாக.
போன கரண்ட் மீண்டும் வந்துவிட "வாங்கடா நம்ம வீடியோ கேம் விளையாடலாம்" என்றான் சரவணன் பாம்பு தாயத்தை மூடிய படி.
'ஷ்ஷ்ஷ்' என்ற சத்தம் அந்த பெட்டியுடன் அடங்கி போனது.