கத்தியை எடுத்துக்கொண்டு அருகில் வந்து அவள் கழுத்தில் வைத்த போது…
தூரத்தில் ஒரு குரல்…
"ஸ்ருதி ஸ்ருதி ஸ்ருதி எழுந்துக்கோ.. இங்க பாரு “ என்று கிணற்றில் இருந்து கூப்பிடுவது போல் கேட்டது.
“ஸ்ருதி ஒருவழியாக உனக்கு கேட்டுச்சா நான் கூப்பிட்டது”… அப்போது தான் கவனித்தாள் சோஃபாவில் படம் பார்த்துக்கொண்டே உறங்கியதை. அவள் எதிரில் ரோஹன் சின்ன சிரிப்போடு அமர்ந்துகொண்டு தான் அவளை எழுப்பிக்கொண்டு இருந்தான்.
இப்போ நன்றாக முழிப்பு வந்துவிட்டது. நன்றாக விழித்துப் பார்த்தாள். அவள் மேல் ஒரு போர்வை வேறு மூடப் பட்டிருந்தது. ரோஹன் தான் செய்திருக்க வேண்டும். விழித்தாலும் கனவின் தாக்கம் இருக்கத் தான் செய்தது. இதையம் இன்னும் அமைதியடைய வில்லை. அவள் ரோஹன்ப் பார்த்து பேந்த பேந்த விழித்தாள்.
ரோஹன் - என்ன ஸ்ருதி, நல்ல தூக்கமா?? நீ படம் பார்த்துகிட்டே அப்படியே தூங்கிட்ட. அதான் எழுப்பல..
ஸ்ருதி இன்னும் தெளியாமல் தான் இருந்தாள். மேலே மூடி இருந்த போர்வையை பார்க்க…
ரோஹன் - அதுவா… உனக்கு நடுல குளுருச்சுனு நினைக்கேன்.. கொஞ்சம் திரும்பி திரும்பி படுத்த அதான் போர்வையை போத்தி விட்டேன்.
கனவின் பார்த்தது இவன் தான என்று எண்ணும் அளவுக்கு இப்போது அவளிடம் பொறுமையாக பேசினான். தன் மேல் கரிசனம் கொண்டு துங்கினாலும் எழுப்பாமல் கண்ணியமாக பார்த்துக்கொண்டான்.. ஆனால் அவனை தப்பாக நினைத்ததை எண்ணி வருந்தினாள்.
அஞ்சனா சொன்னது, இவளின் கற்பனை, பார்த்த சைகோ படம், புது இடம் என எல்லாம் சேர்த்து அவளை நன்றாக பாதித்ததின் வெளிப்பாடு.
அவள் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசாததை கவனித்தான்.
ரோஹன் - ஸ்ருதி, உனக்கு என்ன ஆச்சு?? ஏதாவது பிராப்ளம் ஆ?? என்னால முடிஞ்சா உனக்கு உதவி செய்றேன். சொல்லு
ஸ்ருதி - பிராப்ளம்லா ஒன்னும் இல்ல. கொஞ்சம் டயர்ட் ஆ இருந்தது. அதான் அப்படியே படம் பார்த்துட்டே துங்கிட்டேன் போல… சாரி என்றாள்.
கொஞ்சம் சங்கோஜாமாக இருந்தது. இப்படி டேட் வந்துவிட்டு துங்கியதை எண்ணி கொஞ்சம் கேவலமாக இருந்தது.
ரோஹன் - இதுல என்ன இருக்கு ஸ்ருதி… பரவாயில்லை. நீ முன்னாடியே சொல்லிருந்தா வேற ஒரு நாள் மீட் பண்ணிருக்கலாம். உன்ன கஷ்ட படுத்திட்டேனோனு வருத்தமா இருக்கு…
கனவில் இவள் கதறல் யாவும் இவன் காதில் வாங்காமல் முடியை பிடித்து இழுத்து சென்றது நியாபகத்தில் வந்தது.
ரோஹன் - கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம். உனக்கு பிடிச்ச பீட்ஸா, பாஸ்தா எல்லாம் இருக்கு.. கெஸ்ட் ரூம் அங்க இருக்கு என்று திசையை காட்டினான்.
கெஸ்ட் ரூம் என்றதும் போன பயம் மீண்டும் வந்துவிட்டது. இதை இவனிடம் எப்படி சொல்ல என்று யோசித்தாள்.
ஸ்ருதி (தயக்கத்துடன்) - அது வந்து ரோஹன்… நான்.. நான்.. கெஸ்ட் ரூம் வேண்டாம்.. அந்த பெட்ரூம் ல உள்ள ரெஸ்ட் ரூம் பயன்படுத்திக்கிறேன்… பிளீஸ்
அவள் கூற்று அவனுக்கு கொஞ்சம் விசித்திரமாக பட்டது. அவன் பொதுவாக யாரையும் அவன் ரூமுக்கு அனுமதிக்க மாட்டேன். கொஞ்சம் privacy பார்ப்பான். ஆனால் கேட்பது ஸ்ருதி என்பதால் முதல் முறையாக ஒரு நபரை ரூமுக்கு அனுமதித்தான்.
ரோஹன் - இதுக்கு ஏன் தயங்குற… அங்கேயே ஃப்ரெஷ் ஆகிக்கோ. நான் சாப்பிட எல்லாமே ஓவன் ல சூடு பண்ணி வைக்கேன்… நீ வா…
ஸ்ருதி இன்னும் குழப்பத்தில் இருந்தாள். கனவை வைத்து அவனை கணிக்க முடியாது. அதை தவிர்த்து ரோஹன் அவளை நன்றாக பார்துக்கொள்கிறான். அவளிடம் கண்ணியமாக நடந்துக்கொண்டான். இங்கு இருந்து பாதியிலேயே சென்று அவன் மனதை கஷ்ட படுத்த விரும்பவில்லை அவள். எவ்வளவு நல்ல விதமாக நடந்துகொள்கிறான்.. கனவு தான் தப்பாக வந்துவிட்டது என தன் நெற்றியில் தானே அடித்துக்கொண்டு ரோஹன் சொன்ன திசை நோக்கி சென்றாள்.
கிச்சன் சென்றவனின் எண்ணம் எல்லாம் ஸ்ருதி மேல் தான். இவளுக்கு என்ன ஆச்சு?? ஏன் ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ் ஆ இருக்கா? ஏதோ ஒன்னு இருக்கு ஆனா சொல்ல மாட்டிக்கா.. என்னனு சீக்கிரம் கண்டுபிடிக்கனும்.
மேலும் ஸ்ருதி மேல் இவனுக்கு இருக்கு உணர்வை இன்றே அவளிடம் தெரிய படுத்த எண்ணினான். அது காதல் இல்லை ஆனால் நட்பும் இல்லை. இரண்டிற்கும் இடையில். இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போக ஸ்ருதியிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுத்தான். அதுவும் இன்றே பேச வேண்டும்.
அவன் அறிந்த வரையில் அஞ்சனாவின் தலையீடு ஸ்ருதியின் வாழ்கையில் அதிகம் உள்ளது. இன்று நடந்தவை யாவும் அஞ்சனாவிடம் ஸ்ருதி கண்டிப்பாக பகிர்ந்துக்கொள்வாள். அஞ்சனா எதுவும் மூலை சலவை செய்து விடக்கூடாது என்பதனால் இன்றே அவன் மனதை தெரியப்படுத்த எண்ணினான்.
இதில் ஒரு சிக்கல் இருந்தது. இவனின் உத்தியோகம் தெரிந்தாள் ஸ்ருதி இவனை அடுத்த முறை சந்திக்க சரி சொல்வாளா என்ற சந்தேகம் இவனுக்குள்…
(அப்படி என்ன வேளையாக இருக்கும்???)
அஞ்சனா முகம் சிவந்து அமர்ந்து இருந்தாள். ஸ்ருதியிடம் இருந்து சில மணி நேரமாக எந்த தகவலும் இல்லாமல் இருந்ததை எண்ணி கோவம் கொண்டாள். ஸ்ருதி அங்கே தூங்கியது தெரியாது. தன்னை விட ரோஹன் பெரிதாகி போயிட்டான் என்று பொறாமையாக இருந்தது.
அன்பு, பாசம் எல்லாம் ஒரு அளவுக்கு தான் இருக்க வேண்டும் என்பதை அஞ்சனா மறந்தாள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டு முடிவு எடுக்கும் உரிமை உள்ளது ஆனால் ஸ்ருதியின் முடிவு எல்லாம் இவள் எடுக்க வேண்டும் என்ற பேராசை. நேரம் ஆக ஆக அவளின் பொறுமையின் அளவு குறைந்து கொண்டே சென்றது.
ஃப்ரெஷ் ஆகிவிட்டது வந்த ஸ்ருதி… டேபிளில் உள்ள உணவுகளைப் பார்த்து அசந்துபோய்விட்டாள். எல்லாம் கடந்த வாரம் அவனிடம் பேசும் போது சொன்னது.
ஸ்ருதி - ரோஹன், எல்லாமே எனக்கு பிடிச்ச புட். ரொம்ப தேங்க்ஸ். இந்த டேட் நைட் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
அவளின் பாராட்டை கேட்டு ரோஹன் மனதில் பட்டாம்பூச்சி தான். யாரு சொன்னார்கள் பெண்களுக்கு மட்டுமே உள்ளே பட்டாம்பூச்சி உணர்வு வரும் என்று.
ரோஹன் - நம்ம முதல் சந்திப்பு. அதை ஸ்பெஷல் ஆக்க தான் எல்லா ஏற்பாடும். வா வந்து உட்காரு.
ஆர்வமாகவே வந்து அமர்ந்தாள். சாப்பாடு விஷயத்தில் அவளிடம் கூச்சம் இருக்காது என்பது ரோஹனுக்கு அவள் கேக் சாப்பிடும் போதே கண்டுக்கொண்டான்.
இருவரும் எடுத்து போட்டு சாப்பிட்டனர். அவள் சாப்பிடும் போது எல்லாம் வார்த்தைக்கு வார்த்தை நல்ல இருக்கிறது என்பதையே பல விதமாக சொல்லி பாராட்டிக்கொண்டே இருந்தாள். சமைத்தவர்களுக்கு இதை விட வேறு என்ன வேண்டும். அவனும் அவள் பேசுவதை எல்லாம் ரசித்துக்கொண்டே இருந்தான்.
நன்றாக போய் கொண்டு தான் இருந்தது அஞ்சனாவிடம் இருந்து ஃபோன் வரும் வரை. ஸ்ருதிக்கு லேசாக எரிச்சல் வந்தது. தான் நன்றாக இருக்கிறேன் என்று சொன்ன பின்பும் அவள் கூப்பிட்டு கொண்டே இருப்பதை சரியாக படவில்லை. வந்த ஃபோன் கால்லை கட் செய்துவிட்டாள். இதனை ரோஹன் பார்த்து பார்க்காதது போல் இருந்தான்.
அவளாகவே அஞ்சானாவின் குணத்தை கண்டறியட்டும். தான் பேசினான் எங்க தவறாகி விடுமோ என்று அமைதியாக சாப்பிட்டான். அவ்வபோது ஸ்ருதி பிளேட்டில் எதுவும் காலியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டான்.
அஞ்சனா மீண்டும் மீண்டும் ஃபோன் செய்து கொண்டு இருக்க… ஸ்ருதி அதற்கு மேல் முடியாமல் ஃபோன் ஐ சைலண்ட் இல் போட்டு வைத்துவிட்டாள். இது அஞ்சனாவின் கோவத்தை உச்சிக்கு கொண்டு செல்ல போதுமானதாக இருந்தது.
இங்கு ஸ்ருதி, ரோஹனிடம் நன்றாகவே பழகினாள். அவளுக்கு அவனை பிடிக்கும். பார்க்க நன்றாக இருக்கிறான். நல்லவிதமாக பழகுகிறான். அதற்கும் மேல் நன்றாக சமைக்கிறான். அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்பது அவன் பார்வையிலும், பேச்சிலும் தெரிந்தது.
அவ்வபோது அஞ்சனா சொன்னது நியாபகத்துக்கு வந்தது. அது அவளின் பார்வை இருந்து சொல்லிருப்பாள் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.
ரோஹன் - ஸ்ருதி…
ஸ்ருதி - ஹான், சொல்லு ரோஹன்..
ரோஹன் - அது… நீ நம்மளை பற்றி என்ன நினைக்க??
ஸ்ருதி - நம்ம டேட் பண்றோம்.
ரோஹன் - அவ்வளவுதான் உனக்கு நானா ஸ்ருதி???
ஸ்ருதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னைக்கு தான் முதல் முறை சந்தித்து இருக்கிறாள். சில மணி நேரங்களிலேயே அவ்வளவு குழப்பம். இதில் இவள் சொல்லுவதற்கு என்ன இருக்கு
ஸ்ருதி - வேற.. வேற என்ன ரோஹன்?? என்றாள் தயக்கமாக.
எதிர் எதிரில் அமர்ந்து இருந்தனர். இப்போது அவன் சேர் எடுத்து ஸ்ருதி அருகில் போட்டு அமர்ந்து அவள் கையை பிடித்துக்கொண்டுடான். மிகவும் மென்மையான குரலில்
ரோஹன் - வேற எதுவுமே இல்லையா ஸ்ருதி? உனக்கு என்மேல எதுவுமே தோணலையா??? (சிறிது இடைவேளை விட்டு…) எனக்கு உன்மேல தோனுன மாதிரி??..
இவை எல்லாம் அவள் கண்களை பார்த்தே கேட்டான். ஸ்ருதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளுக்கும் அவன் மேல் ஒரு பிரியம் இருக்கு. ஆனால் உடனே சொல்ல தயங்கினாள். அவள் கனவில் பார்த்தது, அஞ்சனாவிடம் கேட்டது எல்லாம் அப்படி.
ஸ்ருதி - அது வந்து ரோஹன்… எனக்கு தெரியும் … நம்ம ரெண்டு பேருக்கும் நட்பையும் தாண்டி ஒரு உணர்வு இருக்குனு… ஆனா அதை இவ்வளவு சீக்கிரம் நம்ம உணர்வை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக கொஞ்சம் தயக்கமா இருக்கு…
அவள் அவன் மீது உள்ள ஒத்துக்கொண்டதே போதுமானதாக இருந்தது. மகிழ்சியாகவும் இருந்தது.
ரோஹன்… அவள் கையை இறுகப்பற்றியவன்…
ரோஹன் - இட்ஸ் ஓகே, ஸ்ருதி. நம்ம பொறுமையாவே அடுத்த கட்டத்துக்கு போகலாம். உன்கிட்ட உண்மையா இருக்கணும்னு தோணுச்சு. என் மனசுல உள்ளத உன்கிட்ட வெளிப்படுத்தனும்னு நினைச்சேன். அவ்வளவு தான் டா… சரி நீ சாப்பிடு… என்ன வேணும்.. இன்னும் கொஞ்சம் பாஸ்தா வைக்கவா???
கேட்டது மட்டும் அல்லாமல் தட்டிலும் எடுத்து வைத்தான். அவன் கரிசனம்…தன்னை புரிந்து கொண்ட விதம்.. அவன் மேல் இன்னும் பிரியம் கொள்ள செய்தது.
ரோஹன் - அப்புறம் ஸ்ருதி… இன்னொரு விஷயம்..
என்ன என்ற கேள்வியோடு அவனை பார்க்க
ரோஹன் - ஏன் ஒரு மாதிரி குழம்பி போய் இருக்க?? என் கூட இங்க இருக்கிறது வசதியா இல்லையா???
ஸ்ருதி - அதுலாம் எதுவும் இல்ல ரோஹன். அஞ்சனா வீட்ல தனியா இருப்பா.. அதான் யோசிச்சேன். வேற ஒன்னும் இல்ல என்று மெல்லிய சிரிப்போடு சொன்னாள்.
ரோஹன் - சரி டா… சாப்பிடு..
அஞ்சனா பெயரை கேட்டது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் அவன் அதை வெளிக்காட்டிக்கவில்லை. அவன் மனம் இப்போது கொஞ்சம் லேசாக இருந்தது தன் மனதை அவளிடம் வெளிப்படுத்திய பின். இனிமேல் முடிவு ஸ்ருதி கையில் தான்.
ஸ்ருதி மனதில் ரோஹன் தனி இடம் பிடித்தான். மீண்டும் அவனை சந்திக்கனும் என்று எண்ணிக்கொண்டாள். இந்த உறவை தொடரவே ஆசைகொண்டாள். ஆனால் ரோஹன் பற்றிய முழு விபரம் தெரிந்த பின்.
சாப்பிட்ட பின் ஸ்ருதி கிளம்ப இன்னும் சிலர் நேரம் இருக்க இருவரும் சோஃபாவில் அமர்ந்தனர். இருவருக்கும் இடையில் மௌனம். அதை முதலில் கலைத்தது ஸ்ருதி.
ஸ்ருதி - ரோஹன், நீ என்ன வேலை பாக்குற??
கொஞ்சம் தயக்கத்துடன் பதில் சொல்ல வரும் முன்… ரோஹன் ஃபோன் அடித்தது.
ரோஹன் (ஃபோனில்) - ஹலோ, சொல்லு மச்சி… (மறுபக்கம் என்ன சொல்லப்பட்டதோ… ) சரி கீழ வெயிட் பண்ணு. நான் வந்து சாவி தர்றேன்..
ஸ்ருதி பக்கம் திரும்பி
ரோஹன் - ஸ்ருதி, என்னோட ப்ரெண்ட் வண்டி சாவி கேக்குறான்.. நான் போய் கொடுத்துட்டு வர்றேன். நீ வீட்ல இருக்கியா.. இல்ல என்கூட கீழ வர்றியா??? என வினாவிக்கொண்டு மொத்த சாவி கொத்தையும் எடுத்து பேண்ட் பையில் போட்டான்.
ஸ்ருதி - நீ போய்ட்டு வா… நான் இங்கேயே இருக்கேன்.
ரோஹன் - சரி, வா வந்து கதவை பூட்டிக்கோ.
ரோஹன் கீழே சென்றுவிட்டான். ஸ்ருதி அந்த வீட்டில் தனியாக இருந்தாள். என்ன தோன்றியதோ.. ஓரக்கண்ணால் கெஸ்ட் ரூம் ஐ பார்த்தாள். ஒரு நொடி கனவில் நடந்தது எல்லாம் வந்து போனது. பின் அவளை அவளே திட்டிக்கொண்டாள் ‘ லூசு ஸ்ருதி நீ… ஒருத்தன் உன்ன அவ்வளவு தாங்குறான்…. உனக்கு குளிர கூடாதுனு பெட்ஷீட் போட்டு விட்டுறுக்கான்.. மத்த பசங்களா இருந்தா என்ன பண்ணிருப்பாங்க?? கொஞ்சம் ஆச்சு நினைச்சி பாத்தியா?? நீ அழுத உடனே சமாதானம் செஞ்சி சகஜமாக்குறான்.. இந்த மாதிரி பையன் கிடைக்காதானு பொண்ணுங்க சாவுறாங்க… ஆனா ஒரு கனவு வெச்சு அவனை நீ சந்தேக படுறியா?? ‘ என்று மனசாட்சி திட்டியது.
மேலும் அந்த கெஸ்ட் ரூமில் இருந்த ஃப்ரிட்ஜ் ஆர்வத்தை தூண்ட..அதற்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க அடி எடுத்துவைத்தாள்.